ரூ.31 ஆயிரம் தான் மூலப்பொருள்... விலையோ ரூ.1,09,900..!- ஐபோன் உருவாக என்ன செலவாகும்?

ஐ போன் உருவாகும் செலவு கணக்கு மற்றும் அதற்கான விலைப் பட்டியல் மீது ஆப்பிள் விளக்கம் அளித்துள்ளது.

Web Desk | news18
Updated: January 5, 2019, 1:02 PM IST
ரூ.31 ஆயிரம் தான் மூலப்பொருள்... விலையோ ரூ.1,09,900..!- ஐபோன் உருவாக என்ன செலவாகும்?
ஆப்பிள் ஐபோன்
Web Desk | news18
Updated: January 5, 2019, 1:02 PM IST
ஆண்டுதோறும் புதுப்புது ஐ-போன்களைக் களம் இறக்கி வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் XS 99,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. குறைந்தபட்சமாக ஒரு பட்ஜெட் விலை ஐபோன் 76,900 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. ஐ-போன் என்றாலே சொகுசு வகையைச் சார்ந்த பட்டியலில் தான் இடம்பெறும்.

ஆனால், இத்தகைய விலை உயர்ந்த ஐபோன்கள் உருவாக்க ஆகும் செலவும் எவ்வளவு ஆகும்? ஐ-போன்களிலேயே மிகப்பெரும் திரை அளவு கொண்ட ஐ-போன் XS Max எடுத்துக்கொள்வோம்.

6.5 இன்ச் டிஸ்ப்ளே, OLED டிஸ்ப்ளே ஸ்கிரீன் என உள்ள இந்த ஐ-போனை உருவாக்க ஆகும் செலவும் சுமார் 30,915 ரூபாய். ஆனால், இந்த ஐ-போனின் சந்தை விலை சுமார் ஒரு லட்சமாக உள்ளது.

இதுதொடர்பான ஆராய்ச்சி முடிவுகளை ‘டெக் இன்சைட்ஸ்’ வெளியிட்டபோது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், உண்மையிலேயே ஒரு ஐ-போனுக்கான மூலப் பொருள்களை வாங்கும் செலவே இந்த 31 ஆயிரம் ரூபாய்.

அதன் பின்னர் ஆராய்ச்சி, சாஃப்ட்வேர்கள் என இன்ன பிற இத்தியாதிகள் என ஐ-போன் உருவாவதற்கான செலவுகள் அதிகம் என்றே விளக்குகிறது ஆப்பிள். மூலப் பொருள்களையும் தாண்டி ஒரு ஐ போன் உருவாவதற்கான நடைமுறைகளையும் ஆராய்ந்து பார்த்தால் விலை உயர்வுக்கான காரணம் தெரியும்.

மேலும் பார்க்க: பொங்கல் பரிசோடு ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்!
First published: January 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...