• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • விரைவில் அறிமுகமாகிறது Realme Narzo 50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்... விலை மற்றும் அம்சங்கள்!

விரைவில் அறிமுகமாகிறது Realme Narzo 50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்... விலை மற்றும் அம்சங்கள்!

Realme Narzo 50

Realme Narzo 50

முன்பு வெளியான தகவல்களின் படி, நார்சோ 50A-வில், 13 மெகாபிக்சல் கேமராவுடன் F1.8 லென்ஸ் மற்றும் 1/3-இன்ச் சென்சார் ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது.

  • Share this:
ரியல்மி நார்சோ 50 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவின் சந்தைப்படுத்தல் தலைவரான பிரான்சிஸ் வோங், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்து ஒரு ட்வீட்டில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் நார்சோ 50A ஒரு மீடியாடெக் ஹீலியோ G85 செயலியைப் பயன்படுத்தும் என்பதையும் அவர் அந்த பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

முன்பு வெளியான ரியல்மி-யின் நார்சோ சீரிஸில் நார்சோ 30ஏ, நர்சோ 30 மற்றும் நர்சோ 30 ப்ரோ என மூன்று வகைகள் இருந்தன. இந்த நிலையில் வோங் தனது ட்வீட் மூலம், நர்சோ 50A ஸ்மார்ட்போன் நாரசோ 50 சீரிஸில் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இந்த சீரிஸில் எத்தனை வகை ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்பது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, " எங்கள் வரவிருக்கும் #realmeNarzo50A -ல் 1GHz GPU & HyperEngine மேம்பாடுகளுடன் MediaTek Helio G85 ப்ராசசரை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உகந்த மற்றும் நம்பகமான செயலியாக இருப்பதால், இது இப்போதுள்ள இளம் சமுதாயத்திற்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று நான் நம்புகிறேன். #நர்சோ 50 சீரிஸ் விரைவில் வருகிறது! " என்று எழுதியுள்ளார்.

அதேபோல, இந்த சாதனம் தற்போதுள்ள Narzo 30A-வை போலல்லாமல், இந்தியாவில் ரூ.8,999 க்கு கிடைக்கும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தியாவில் நார்சோ 50 சீரிஸின் விலை ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதுவும், அனைவரும் வாங்கக்கூடிய விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு வெளியான தகவல்களின் படி, நார்சோ 50A-வில், 13 மெகாபிக்சல் கேமராவுடன் F1.8 லென்ஸ் மற்றும் 1/3-இன்ச் சென்சார் ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது. இந்த சென்சாரின் அதிகப்பட்ச ரிசலுஷன் 4080x3072 பிக்சல்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் கேமராவுடன் F2.0 துளை, 1/3.6 இன்ச் சென்சார் மற்றும் அதிகப்பட்சமாக 3264x2448 பிக்சல் போட்டோ ரிசலுஷன் ஆகியவை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Also read... Redmi Smart Tv: ரெட்மியின் புதிய ஸ்மார்ட் டிவி - செப்டம்பர் 22ம் தேதி அறிமுகம்!

ரியல்மி நிறுவனம் கடைசியாக வெளியிட்ட நார்சோ சீரிஸானது, நார்சோ 30 ஏ, நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ப்ரோ ஆகியவை ஆகும். அப்படி பார்த்தால், வரயுள்ள ஸ்மார்போன் சீரிஸுக்கு நிறுவனம் நார்சோ 40A, நார்சோ 40, மற்றும் நார்சோ 40 Pro என்று தான் பெயரிட்டிருக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமில்லை, ஏனெனில் சீன எண் கணிதத்தில் எண் 4 என்பது அசுபமாகக் கருதப்படுகிறது. அதாவது ராசியற்றதாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் ரியல்மி எண் 50-ஐ தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த மொபைல் சீரிஸ் வெளியான பிறகே இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து அதிகாரப்பூவாக தெரியும். மேலும் இந்த சீரிஸில் எத்தனை வகை ஸ்மார்ட்போன்கள் வரவுள்ளன என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: