முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / அதிகரித்து வரும் பேமெண்ட் மற்றும் ஆன்லைன் மோசடிகள்: பாதுகாப்பான இணைய பயன்பாட்டுக்கு கூகுளின் புதிய திட்டங்கள்

அதிகரித்து வரும் பேமெண்ட் மற்றும் ஆன்லைன் மோசடிகள்: பாதுகாப்பான இணைய பயன்பாட்டுக்கு கூகுளின் புதிய திட்டங்கள்

கூகுள் பேவில் இருந்து தினமும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அனுப்புவதன் மூலம் 2,00,000 யூசர்கள் பண மோசடியில் இருந்து தப்பித்துள் ளார்கள்என்று கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் பேவில் இருந்து தினமும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அனுப்புவதன் மூலம் 2,00,000 யூசர்கள் பண மோசடியில் இருந்து தப்பித்துள் ளார்கள்என்று கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் பேவில் இருந்து தினமும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அனுப்புவதன் மூலம் 2,00,000 யூசர்கள் பண மோசடியில் இருந்து தப்பித்துள் ளார்கள்என்று கூகுள் தெரிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ற அளவுக்கு மோசடிகளும் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. இந்தியாவில் ஆன்லைன் சேவை தரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது. உலகின் முன்னணி தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் நிறுவனமும் பல நாடுகளில் மோசடிகள் சார்ந்து பல பிரச்சனைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றது. இந்தியாவிலும் கூகுளுக்கு பல சவால்கள் உள்ளன. 700 மில்லியன் யூசர்களுக்கு கூகுள் சேவைகள் இந்தியாவில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான இந்தியா நிகழ்வு (safer India Event)

இணையம் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை, மக்கள் தொகையின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பெரிதாக வித்தியாசம் இல்லை. கடந்த ஆண்டு 600 மில்லியன் யூசர்களுக்கு சேவைகளை அளித்து வந்த கூகுள் இந்த ஆண்டு 100 மில்லியன் யூசர்கள் அதிகரித்து 700 மில்லியன் யூசர்கள் ஆக மாறியுள்ளது.

எனவே அனைவருக்கும் பாதுகாப்பான இணைய பயன்பாட்டை உறுதி செய்வதற்கு கூகுள் புதிய ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் பெயர் Safer India.

ஆன்லைன் பேமெண்ட் பாதுகாப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, முதல் ஐந்து மாதங்களிலேயே கிட்டத்தட்ட 18 மில்லியன் சைபர் அட்டாக்குள் நடந்துள்ளது என்ற Norton ரிப்போர்ட்டை கூகுள் சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், பேமண்ட்கள் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பானதாக, மோசடி செய்ய முடியாத அளவுக்கு அதிக செக்யூரிட்டியுடன், மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு புதிய பிரச்சாரங்களை கூகுள் மேற்கொள்ள இருப்பதாக திட்டமிட்டு உள்ளது.

ஸ்கேம் செய்திகள் அனுப்பும் ஹேக்கர்களுக்கு தடை

சமீப காலமாக பலருக்கும் போலியான எலெக்ட்ரிசிட்டி போர்டு செய்திகளும், வேலைவாய்ப்புக்கான ப்ரோபைல் பற்றிய விவரங்களும் செய்தியாக வந்தது. அதை கிளிக் செய்தவர்கள் சில பாதிப்புகளுக்கு உள்ளானார்கள்,  இத்தகைய மோசடியாளர்களை ட்ராக் செய்வது கூகுள் நிறுவனத்திற்கு மிகவும் கடினமான ஒன்றாகும்.

' isDesktop="true" id="791761" youtubeid="V5i6JdO7de0" category="technology">

இவர்களை டிராக் செய்து அந்த கணக்குகள் பிளாக் செய்யப்பட்டாலும், இதே போன்ற வேறு மோசடிகள் எதுவும் நடக்க முடியாத அளவுக்கு பாதுகாப்புகளை அதிகப்படுத்தினாலும் இத்தகைய மோசடி நிகழ்வுகளை கட்டுப்படுத்துவது கடினமாகத்தான் இருக்கிறது.

எதாவது ஒரு வழியில் மோசடியாளர்கள் பொதுமக்களை ஸ்கேம் செய்வதை, முழுவதுமாக தடுக்க முடியவில்லை என்ற சூழலில் பொதுமக்களுக்கு இத்தகைய போலியான செய்திகள் மற்றும் மோசடியாளர்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று கூகுள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக முடிவு செய்துள்ளது. ஃபோன்களில் எந்த விவரங்களை வழங்க வேண்டும், எந்த மாதிரியான செய்திகள் வரும் பொழுது அதை தவிர்க்க வேண்டும் என்பது பற்றிய விபரங்கள பொதுமக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று கூகுள் திட்டமிட்டு உள்ளது.

பேமெண்ட் கோடு ஸ்கேம் பற்றிய எச்சரிக்கை

பொதுமக்கள் தெரிந்தே தவறு செய்வதில்லை. மோசடியாளர்கள் அனுப்பும் செய்திகள், அனைவருமே நம்பும் விதத்தில் உண்மை போன்றே இருக்கிறது. எனவே பலரும் தவறுதலாக தங்களுடைய பேமண்ட் கோடு மற்றும் க்யூஆர் கோட் ஆகியவற்றை ஆன்லைன் ஸ்கேமர்களிடம் வழங்கிவிடுகிறார்கள். இதனால் அவர்களின் வங்கியிலிருந்து பணம் திருடுபோகிறது. கூகுள் பேவில் இருந்து தினமும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அனுப்புவதன் மூலம் 2,00,000 யூசர்கள் பண மோசடியில் இருந்து தப்பித்துள்ளார்கள் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

சைபர் செக்யூரிட்டி ரோட்ஷோ

தொழில்நுட்ப சேவைகள் அடுத்தடுத்து வளர்ச்சி பெறுவதற்கு டெவலப்பர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே கூகுள் 1,00,000 டெவலப்பர்களுக்கு அவர்களுடைய திறன்களை மேம்படுத்துவதற்கு, மேம்பட்ட செக்யூரிட்டி, பிரைவசி மற்றும் என்க்ரிப்ஷன் ஆகியவற்றை கற்றுத்தருவதற்காக சைபர் செக்யூரிட்டி ரோட்ஷோ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்புக்காக, உள்ளூர் மொழிகளில் புதிய வலைத்தளம் ஒன்றையும் கூகுள் தொடங்கவுள்ளது.

First published:

Tags: Cyber fraud, Google