ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நீங்கள் இறந்த பிறகு உங்கள் கூகுள், ஜிமெயில் டேட்டா என்ன ஆகும் தெரியுமா? இதோ முழு விவரம்!

நீங்கள் இறந்த பிறகு உங்கள் கூகுள், ஜிமெயில் டேட்டா என்ன ஆகும் தெரியுமா? இதோ முழு விவரம்!

ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஃபோட்டோஸ், கூகுள் தேடல் உள்ளிட்ட கூகிள் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பயன்படுத்தும் போது, உங்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் தரவுகளை கூகுள் சேமித்து வைத்திருக்கும்.

ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஃபோட்டோஸ், கூகுள் தேடல் உள்ளிட்ட கூகிள் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பயன்படுத்தும் போது, உங்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் தரவுகளை கூகுள் சேமித்து வைத்திருக்கும்.

ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஃபோட்டோஸ், கூகுள் தேடல் உள்ளிட்ட கூகிள் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பயன்படுத்தும் போது, உங்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் தரவுகளை கூகுள் சேமித்து வைத்திருக்கும்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து வரும் நமக்கு, இணையம் வாழ்வின் இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. தனிப்பட்ட தரவுகள், அலுவலக ரீதியான தகவல் முதல் பொதுத் தகவல்கள் வரை வரை பல்வேறு தகவல்களை இணையத்தில் சேமித்து வைக்கிறோம். சமூக வலைத்தளங்களில் உள்ள கணக்குகளில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்கிறோம். காலத்தால் அழியாதவை என்று நாம் சொல்லும் அளவுக்கு, இந்த தகவல்கள் மற்றும் தரவுகள் (டேட்டா) நாமாக நீக்கும் வரை, இணையத்தில் இருக்கும். கிளவுட் ஸ்டோரேஜாகவும், ஆப்பிள் மற்றும் கூகுள் சர்வர்களில் உங்கள் தரவுகள் சேமிக்கப்படும் . ஒருவர் இறந்து போன பின்பு, இந்த டேட்டா என்ன ஆகும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

உங்களுக்கு இந்த கேள்வி தோன்றியிருந்தால், அதற்கான தீர்வை கூகுள் உங்களுக்கு உருவாக்கி இருக்கின்றது.

நம்முடைய கணக்கு எப்போது செயலிழந்து (inactive) போனதாக கூகுள் முடிவு செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு அம்சத்தை கூகுள் வழங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஒருவர் இறந்த பிறகு டேட்டாவுக்கு என்ன ஆகும் என்பதையும் முடிவு செய்யலாம்.

ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஃபோட்டோஸ், கூகுள் தேடல் உள்ளிட்ட கூகிள் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பயன்படுத்தும் போது, உங்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் தரவுகளை கூகுள் சேமித்து வைத்திருக்கும். ஏன், நீங்கள் ஆண்டிராய்டு ஃபோன் பயன்படுத்தினாலே, கூகுள் பிளேஸ்டோரில் உங்கள் தரவு இருக்கும். அது மட்டுமின்றி, கூகுள் பே பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்துபவராக இருந்தால், உங்கள் வங்கிக்கணக்குகள் விவரம் கூகுளில் சேமிக்கப்பட்டிருக்கும். இதைப் போன்ற முக்கியமான தகவல்களை, உங்களுக்குப் பிறகு இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள கூகுளுக்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும். அதற்கான திட்டத்தை கூகுள் வகுத்துள்ளது. அதன்படி உங்கள் தரவை பாதுகாப்பாக வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பொதுவாகவே, மாதக்கணக்காக நீங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால், எந்த விதமான செயல்பாடும் இல்லாமல் இருப்பதை கூகுள் கண்டறிந்தால், உங்கள் கணக்கு செயலிழந்து விடும். இருந்தாலும், உங்களுக்குப் பிறகு, உங்கள் கணக்கை என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கூகுள் மூன்று விருப்பங்களை வழங்குகிறது.

முதலாவது, உங்கள் கணக்கு எப்போது செயலிழக்கப்பட வேண்டும் என்று நீங்கள் தேர்வு செய்ய கூகுள் அனுமதிக்கிறது. இரண்டாவது, உங்கள் கணக்கை நம்பகமான நபருடன் பகிர்ந்து கொள்ளவும் அனுமதி அளிக்கிறது. மூன்றாவது, உங்கள் கணக்கு செயலிழந்த பிறகு, அதை நீக்க கூகுளுக்கு அனுமதி அளிக்கலாம்.

கூகுள் கணக்கு பயன்படுத்தாமல் இருக்கும் போது, கூடுதலாக 18 மாதங்கள் வரை நீங்கள் கணக்கை ஆக்டிவாக வைத்திருக்கும் அம்சத்தை கூகுள் சேர்த்துள்ளது. கணக்கின் இன்ஆக்டிவ் நிலையை, myaccount.google.com/inactive இணைப்பில் சென்று நீங்கள் நிர்வகிக்கலாம்.

இணைப்பில், உங்கள் கணக்கு எவ்வளவு காலம் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்ற தகவலை உள்ளிடலாம். கூடுதலாக, மின்னஞ்சல், மொபைல் எண் மற்றும் பிற விவரங்களை சேர்க்க வேண்டும். யாரிடம் கணக்கு பற்றிய தகவலை பகிர்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது.

அடுத்தது, உங்கள் கூகுள் கணக்கு இன்ஆக்டிவ் ஆகும் போது, யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்காக, 10 நபர்கள் வரை தேர்வு செய்யும் விருப்பத்தை கூகிள் அளிக்கிறது. உங்களின் குறிப்பிட்ட சில தரவுகளை பகிரவும், டவுன்லோடு செய்து கொள்ளவும் நீங்கள் அனுமதிக்கலாம். நீங்கள் யாருக்கு உங்கள் கணக்கு பற்றிய விவரங்களைப் பகிர விரும்புகிறீர்களோ, அவருடைய செல்லுபடியாகக்கூடிய, நம்பகமான ஒரு மின்னஞ்சலை உள்ளிட வேண்டும்.

Also read... Google Pixel 6 முதல் Asus 8Z வரை - விரைவில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் ஃபோன்கள்!

நம்பகமான மின்னஞ்சலை உள்ளிட்ட பிறகு, எந்த தகவல்களை எல்லாம் நீங்கள் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தப்பட்டியலில், கூகிள் பே, கூகுள் ஃபோட்டோஸ், கூகிள் சாட், லொக்கேஷன் வரலாறு, மற்றும் கூகுள் கணக்கிற்கு தொடர்புடைய பிற தகவல்கள் மற்றும் தரவுகள் அடங்கும். உங்கள் கூகிள் கணக்கு இன்ஆக்டிவ் ஆன பிறகு, மூன்று மாதங்கள் வரையே இந்த தகவல்கள் அனைத்தும் நீங்கள் தேர்வு செய்த நபரால் அக்சஸ் செய்ய முடியும்.

இந்த தகவலை கூகுள் ஒரு மின்னஞ்சல் வழியே நீங்கள் தேர்வு செய்த நபரின் மின்னஞ்சலுக்கு அனுப்பும். நீங்கள் பகிர விரும்பும் தகவல் மட்டுமே பகிரப்படும். ஒரு வேளை, உங்கள் தரவை யாருக்கும் நீங்கள் பகிர விரும்பவில்லை என்றால், நீங்கள் மின்னஞ்சலை உள்ளிட வேண்டாம். உங்கள் கணக்கு நீக்கப்பட்டு, உங்கள் தரவு மற்றும் தகவல் அழிந்து விடும்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Google