ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

WATCH: சூரியனில் நெளியும் மர்ம சூரியப் பாம்பு... விண்வெளி நிறுவனம் வெளியிட்ட வீடியோ!

WATCH: சூரியனில் நெளியும் மர்ம சூரியப் பாம்பு... விண்வெளி நிறுவனம் வெளியிட்ட வீடியோ!

சூரிய பாம்பு

சூரிய பாம்பு

சோலார் ஆர்பிட்டரில் உள்ள எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா வயலட் இமேஜரின் படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட நிகழ்வின் வீடியோவை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சூரியனின் உள் ரகசியங்களை ஆய்வு செய்து வரும் ஐரோப்பிய சோலார் விண்கலம், நமது சூரிய மண்டலத்தில் உள்ள நட்சத்திரத்தில் ஒரு தனித்துவமான வளர்ச்சியைக் கண்டறிந்துள்ளது. சூரியனில் ஒரு பாம்பு நெளிவது போன்ற ஒரு நிகழ்வை பதிவிட்டுள்ளது.

சூரியனின் காந்தப்புலத்தின் வழியாக குளிர்ச்சியான வளிமண்டல வாயுக்களின் ஒரு 'குழாய்' செல்வதை கண்டறிந்துள்ளது. இந்த நிகழ்வு சூரியனில் இருந்து மிகப் பெரிய வெடிப்பு ஏற்படுவதற்கு முன்னோடி சம்பவம் ஆகும். இது ஒரு சூரிய செயலில் உள்ள பகுதியிலிருந்து தொடங்கி வெடித்து, பில்லியன் கணக்கான டன் பிளாஸ்மாவை விண்வெளியில் வெளியேற்றியது. இந்த பிளாஸ்மா நகரும் கட்சி ஒரு பாம்பு நகர்வது போலவே தெரியும்.

ஐரோப்பிய சோலார் ஆர்பிட்டர் சூரியனை நெருங்கிச் செல்லும் பாதையில் பயணிக்கும் போது செப்டம்பர் 5 ஆம் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு நிகழ்வை நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் பதிவிட்டு பூமிக்கு அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க:''நான் ஒரு ஏலியன்.. செவ்வாய் கிரகத்துல இருந்து வந்தேன்'' - பகீர் தகவலைச் சொன்ன சிறுவன்.!

சூரிய பாம்பு

சூரியனில் தெரிந்த பாம்பு போன்ற தோற்றம், சூரியனின் வளிமண்டலத்தின் வெப்பமான பிளாஸ்மாவில் உள்ள காந்தப்புலங்களால் இடைநிறுத்தப்பட்ட குளிர் பிளாஸ்மாவின் ‘குழாய்’ என்றும், பாம்பில் உள்ள பிளாஸ்மா சூரியனின் காந்தப்புலத்தின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு நீண்ட இழையைப் பின்பற்றி செல்லும் வழி என்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்மா என்பது சூடாக இருக்கும் ஒரு வாயு நிலை . இந்நிலையில் எலக்ட்ரான்கள் எனப்படும் அவற்றின் வெளிப்புற துகள்களில் சிலவற்றை இழக்கத் தொடங்குகின்றன. இந்த இழப்பு வாயுவை சார்ஜ் ஆக்குகிறது. எனவே காந்தப்புலங்களால் எளிதில் பாதிக்கப்படுகிறது. சூரியனில் வெப்பநிலை ஒரு மில்லியன் டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் உள்ள நிலையில் சூரிய வளிமண்டலம் முழுக்க பிளாஸ்மாக்களால் நிறைந்திருக்கும்.

' isDesktop="true" id="837999" youtubeid="ae4ya5nUCzo" category="technology">

சோலார் ஆர்பிட்டரில் உள்ள எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா வயலட் இமேஜரின் படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட நிகழ்வின் வீடியோவை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டது. இந்த நிகழ்வில் பிளாஸ்மா வினாடிக்கு சுமார் 170 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ய மூன்று மணிநேரம் ஆனது.

இந்த நிகழ்வு சூரிய செயல்பாடு மற்றும் பூமியில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் பிற தொழில்நுட்பத்தை சீர்குலைக்கும் 'விண்வெளி வானிலை' உருவாக்கும் விதம் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்க அனுமதிக்கும் என்று வானியலாளர்கள் நம்புகின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: NASA, Sun