• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 5ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தயாராகுங்கள் - சாம்சங் 5ஜி சீரிஸ் லிஸ்ட் இதோ!

5ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தயாராகுங்கள் - சாம்சங் 5ஜி சீரிஸ் லிஸ்ட் இதோ!

 சாம்சங் 5ஜி சீரிஸ்

சாம்சங் 5ஜி சீரிஸ்

5G irrespective of your smartphone budget : சாம்சங் நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. அந்த நிறுவனம் ஏற்கனவே பல்வேறு சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை கொண்டிருக்கிறது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • Share this:
ஸ்மார்ட்போன் உலகம் இந்தியாவில் அடுத்த வீச்சுக்கு தயாராக இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவில் 5ஜி சோதனைகள் பெரு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் 5ஜி ஸ்பெக்டரம் ஏலம் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், நிறுவனங்களும் அதற்காக தயாராகி வருகின்றன. சாம்சங் நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. அந்த நிறுவனம் ஏற்கனவே பல்வேறு சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை கொண்டிருக்கிறது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

மற்ற ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும்போது சாம்சங் நிறுவனம் அதிக 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளது. ஒரு சில அதிர்வெண்களில் மட்டுமே இணைய வேகம் அதிகமாக இருக்கும் ஸ்மார்ட்போன்களை மற்ற நிறுவனங்களை கொண்டிருக்கும்போது, அதிகபட்சமாக 12 பேண்டுகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. பட்ஜெட்டை கருத்தில் கொள்ளாமல் அனைத்து யூசர்களும் சாம்சங்கின் 5ஜி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தலாம். Galaxy M52 மற்றும் F42 ஆகிய மாடல்கள் பட்ஜெட் யூசர்களுக்கு உகந்ததாக இருக்கும். reigner Galaxy A52s 5G மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள். Samsung Flagship of Galaxy Z, Galaxy Flip 3 & Galaxy Fold 3 மாடல்களை விரும்பும் யூசர்கள் வாங்கிக்கொள்ளலாம்.

5ஜியின் வேகம் 12 பேண்ட் அணுகல்களையும் பெரும் வகையில் சாம்சங்க் ஸ்மார்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கேலக்ஸி 5 ஜி ஸ்மார்ட்போன்கள், 3 வருட ஓ.எஸ் மேம்படுத்ததலையும், ஆட்டோமேடிக்காக சாப்ட்வேர்களை 5ஜி வேகத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்படுகிறன்றன.,

1. Galaxy Z Fold3 அல்லது Flip 3 5G



Galaxy Z Fold3 அல்லது Flip 3 5G உங்களுக்கு உகந்ததாக இருக்கும். Galaxy Z Fold3 -ல் உள்ள 12 பேண்ட் 5G ஆதரவு, நீங்கள் வேலை செய்தாலும், உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை அதிகமாகப் பார்த்தாலும் அல்லது ஹார்ட்கோர் கேமிங்கை ரசித்தாலும், சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். இதேபோல், மெலிதான Galaxy Z Flip3 ஸ்மார்ட்போன், உங்களின் வசதிக்கேற்ப எந்த கோணத்திலும் வளைந்து கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

2. Galaxy S சீரிஸில் 5ஜி

அதிகம் விரும்பும் சீரிஸ்களில் ஒன்றாக கேலக்ஸி எஸ் சீரிஸ் உள்ளது. 5G வெர்சனில் Samsung Galaxy S21, Galaxy S21+ அல்லது S21 Ultra -வைத் தேர்வு செய்யலாம். யூசர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள், கான்டோர் கட் கேமராவில் நீங்கள் மிகவும் பிரமிக்க வைக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களைப் படம்பிடித்து, அவற்றை உடனடியாக ஆன்லைனில் பகிரலாம். செம ஸ்பீடு இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும். கேம் பிரியர்களுக்கு கேலக்ஸி எஸ் பிரிவில் Galaxy S20 FE சிறந்தது.

3. சாம்சங்க் கேலக்ஸி A-சீரிஸில் 5ஜி



கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக உள்ளது. Samsung Galaxy A52s 5G & Samsung Galaxy A22 5G ஸ்மார்ட்போன்கள் அதிக வொர்க்லோடுகளையும் தாங்கக்கூடியது. இணையத்தில் அதிகம் உலாவுவதற்கும், ஆன்லைன் ஸ்டீரிமிங்கிற்கும், இந்த ஸ்மார்ட்போன்கள் உங்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்

4. Galaxy F42 5G சீரிஸ்



பட்ஜெட் பிரியர்களுக்கு காஸ்டிலியாக தெரிந்தாலும், டவுன்லோடு மற்றும் ஸ்டீரிமிங் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன். 5ஜி இணைப்புடன், இந்த வசதிகள் அனைத்தும் வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் Galaxy F42 5G சீரிஸ், 3 வருடங்களுக்கு ஓ.எஸ் புதுப்பிப்புகளையும் கொடுக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: