நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தரும் புதிய ரோபோ ஒன்றை பொறியியல் பட்டதாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மாநகரங்கள், நகரங்கள் தாண்டி பெரும்பாலும் கிராமப்புறங்களில் மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு வடசென்னையை சேர்ந்த கெனித் ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார்.
பெண் வடிவில் இருக்கும் இந்த ரோபோ கணினியுடன் இணைக்கப்பட்டு அதில் நீட் தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் மத்தியில் இந்த ரோபோ வகுப்பெடுக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் தருகிறது ரோபோ. எந்திரன் படத்தில் வருவதைப் போன்று இந்த ரோபோவும் அதற்குரிய குணாதிசயத்தோடு கேள்விகளுக்கு பதில் சொல்கிறது. உதாரணமாக நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால், எனக்கு சாப்பாடு தேவை இல்லை; நான் மின்சாரத்தில் இயங்கும் ரோபோ என்று பதில் தருகிறது.
ஆசிரியர்கள் இல்லாத மலைவாழ் மாணவர்களுக்காக வடிவமைத்து இருப்பதாக இளைஞர்கள் தெரிவித்தனர். இதற்கு அரசு அங்கீகாரம் அளித்தால் பரவலாகக் கொண்டு சேர்க்க முடியும் என்பதும் இவர்களது நம்பிக்கை.
இதன் அதிகபட்ச சந்தை விலை ஐந்து லட்சம் ரூபாயாகும். மாதா, பிதா, குரு தெய்வம் என்ற வரிசையில் குரு என்னும் மூன்றாம் இடத்தை விரைவில் பிடிக்கப் போகிறது இந்த ரோபோ.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.