ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு, நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. மாறி வரும் தொழில்நுட்ப பாதுகாப்பு வசதிகளுக்கு ஏற்ப, மோசடியாளர்களும் கூட தங்கள் மோசடி உத்திகளை மாற்றி கொள்கின்றனர். ஆரம்ப கால கட்டங்களில் மோசடியாளர்கள் இமெயிலில் நம்மை எப்படி அணுகினார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
முன் பின் தெரியாத ஒரு நபர் நமக்கு லாட்டரி பரிசு விழுந்திருப்பதாகவோ அல்லது நமக்கு பல கோடிகளை பரிசளிக்க இருப்பதாகவோ கூறி இமெயில் மூலமாக நம்மை அணுகுவார்கள். அந்த பரிசுத் தொகையை பெறுவதற்கான சுங்கவரிக் கட்டணமாக அவர்களது வங்கிக் கணக்கில் ஏதேனும் முன்பணம் செலுத்த கோருவார்கள் அல்லது நமது வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று மோசடியை அரங்கேற்றுவார்கள்.
இந்த பழங்கால மோசடி முறை இப்போது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது என்பதால் மோசடியாளர்கள் தங்கள் உத்திகளை மேம்படுத்தியுள்ளனர். குறிப்பாக சமூக வலைதளங்கள் மற்றும் பிற இணையதளங்களில் நாம் குறிப்பிடும் விவரங்கள் மூலமாக நம்முடைய பெர்சனல் விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டு, மோசடியாளர்கள் நம்மை அணுகத் தொடங்கியுள்ளனர். அத்தகைய மோசடிகளை சந்தேகிப்பது சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கு கூட சவால் மிகுந்ததாக இருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டில் இதுபோன்று அரங்கேற்றப்பட்ட மோசடி ஒன்று குறித்த தகவல்களை, அதில் பாதிக்கப்பட்ட ஓலிவ் பக்லே என்பவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த 2018ம் ஆண்டில் என்னுடைய பல்கலைக்கழக துணைவேந்தர் பெயரில் எனக்கு ஒரு இ-மெயில் வந்தது. நான் ஏதோ பல்கலைக்கழக மேல் அதிகாரிகள் என்னை அங்கீகரித்து பாராட்ட முனைந்திருப்பதாக நினைத்துக் கொண்டேன். ஆனால், ஏதோ ஒன்று சரியாக இல்லை. துணைவேந்தர் ஏன் பல்கலைக்கழக இமெயில் முகவரியை பயன்படுத்தாமல், புதிதாக ஜிமெயில் முகவரியை பயன்படுத்துகிறார்? என்ற குழப்பம் எனக்கு இருந்தது.
Also Read: இனி செய்தி நிறுவனங்களுக்கு வருவாயில் பங்கு... கூகுள், பேஸ்புக், மெட்டாவிற்கு புது செக்!
இந்நிலையில் துணைவேந்தரை நான் எப்படி சந்திப்பது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 800 பவுண்டுகள் மதிப்பு கொண்ட கிஃப்ட் கார்டுகளை நான் வங்கி, அதில் பின்பக்கம் ஸ்கிராட்ச் கார்டுகளில் இடம்பெற்றுள்ள கோடுகளை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். அவர்களை நம்பி நான் ஒரு 5 பவுண்டுகள் மட்டும் அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு அவர்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.
ஒழிந்து போன ‘பிரின்ஸ் ஆஃப் நைஜீரியா’ ஸ்கேம் :
முன்பெல்லாம், பிரின்ஸ் ஆஃப் நைஜீரியா அல்லது ஏதோ ஒரு நாட்டின் அமைச்சர் மகள் என்ற பெயர்களில் நமக்கு மோசடி இமெயில் வரும். பெரும் மதிப்பு கொண்ட தங்கள் சொத்து முடங்கியுள்ளதாகவும், தற்போதைக்கு சிறு தொகை கொடுத்து உதவினால், அதற்கு கை மாறாக நிறைய பணம் தருவதாகவும் உறுதி கொடுத்து மோசடி செய்வார்கள். ஆனால், அந்த மாடல் எல்லாம் இப்போது கிட்டதிட்ட ஒழிந்துவிட்டது.
இதற்கு பதிலாக மோசடியாளர்கள் இப்போது சமூக வலைதளங்களை பயன்படுத்தி மோசடி செய்ய தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கி வரும் லிங்க்டு இன் இணையதளம் அனுப்புவதை போல நமக்கு போலியான செய்திகளை அனுப்பி மோசடி செய்கின்றனர். அதைத் தொடர்ந்து நமது தகவல்களை திருடுகின்றனர் அல்லது பண மோசடி செய்கின்றனர்.
Also Read : Gmail யூஸர்களே உஷார்... மெயில் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!
நம்மை நாம் பாதுகாப்பது எப்படி?
இன்றைய தேதியில் தனி நபர்கள் மட்டுமல்லாமல் போட் மெயில் மூலமாகவும் மோசடி நடைபெறுகிறது. இத்தகைய சூழலில் நமக்கு மெயில் அனுப்பியுள்ளவர் யார்? அவரது விவரங்கள் என்ன? அதன் உண்மைத் தன்மை என்ன என்பது குறித்த விவரங்களை நாம் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, நமது தனித் தகவல்களை தேவையின்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.
நமது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மூலமாக அணுகும் வீடியோ கால் மோசடியாளர்கள் குறித்தும் நாம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.