Home /News /technology /

வேலையை விடப்போவதாக எலான் மஸ்க் அதிரடி முடிவு...!

வேலையை விடப்போவதாக எலான் மஸ்க் அதிரடி முடிவு...!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

தன்னுடைய வேலையை விட வேண்டும் என்ற ஆசை தோன்றியுள்ளது என்று ஒரு ட்வீட் உலகம் முழுவதும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப உலகில் மிகப்பரிய அதிர்வுகளை ஏற்படுத்துவதில் எலான் மஸ்குக்கு நிகரானவர் யாருமில்லை என்று கூறலாம். தலைப்பு செய்திகளில் இடம் பெற தவறுவதே இல்லை. அதுமட்டுமின்றி இவர் மைக்ரோ ப்ளாகிங் தளமான ட்விட்டரிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இவருடைய புதிய ஹேர்கட் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி, வைரலாக பகிரப்பட்டது. தற்போது மற்றுமொரு அதிர்ச்சியான டிவீட்டை பதிவு செய்து உலகத்தின் கவனத்தை தன் மீது திருப்பியுள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான, உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பகிரும் ஒவ்வொரு பதிவும் செய்தியாக மாறும். எலான் மஸ்க் வெளியிட்ட ஒரு டிவீட் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. “நான் என்னுடைய வேலையை விடப் போகிறேன். முழுநேர இன்ஃப்ளூயன்சராக மாறப் போகிறேன்” என்று எலான் மஸ்க் டிவீட் செய்துள்ளார். மேலும் இதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்குமாறு கோரியுள்ளார்.



உலகையே மாற்றும் இரண்டு பெரிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் அவர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு முப்பத்தி ஆறு மணி நேரங்கள் இருப்பது என்பது போல அவ்வளவு பிசியான மனிதராக உலகின் பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும் ட்விட்டரில் கணிசமான நேரத்தை செலவிடுகிறார். தன்னுடைய வேலையை விட வேண்டும் என்ற ஆசை தோன்றியுள்ளது என்று ஒரு ட்வீட் உலகம் முழுவதும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உலகில் இருக்கும் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருக்கு, மக்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். ஒரு சிலர், எப்படி யூடியூபில் சம்பாதிப்பது என்றெல்லாம் டிப்ஸ் வழங்கியுள்ளனர். இவருடைய டிவீட்டிற்கு பதில் அளித்த பலரும், தற்போதைய டிஜிட்டல் உலகில் இன்ஃப்ளூயன்சரை விட வேறு எதுவும் பிரபலமானது கிடையாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அவ்வபோது கிண்டலாக எலான் மஸ்க் டிவீட் செய்வது போலவே, இந்த டிவீட்டையும் பகிர்ந்துள்ளார். சோஷியல் மீடியாவில் அதிகமாக இன்ஃப்ளூயன்ஸ் செய்யும் நபர்களில் பிரபலமாகவும், முதல் இடத்தைப் பெற்றுப்பது டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் தான் என்ற செய்தி அறிவிக்கப்பட்ட தே நேரத்தில் தான் எல்லாருக்கும் இந்த ட்வீட்டை செய்துள்ளார். அவ்வபோது வேடிக்கையான, நையாண்டித்தனத்தொடு மற்றும் நக்கலான டிவீட்டுகளைப் பதிவு செய்வதில் எலான் மஸ்க் கில்லாடி.

Also read... ஐபிஎல் முதல் CoWin வரை.. இந்த வருடம் கூகுளில் தேடப்பட்ட வார்த்தைகள்..

சில நாட்களுக்கு முன்பு தான் எலான் மஸ்க்கின் புதிய ஹேர்கட் ட்விட்டரில் பகிரப்பட்டு பலரும் அவரை ட்ரோல் செய்தனர். அவரின் ஹேர்கட் பதிவுக்கு டிவிட்டரே ஸ்பாம் ஆகும் அளவிற்கு கமெண்ட்டுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவரும் உற்சாகமா உரையாடல்களில் கலந்து கொண்டார். வித்தியாசமாக இருக்கும் தனது புதிய ஹேர்கட்டை அவரே தான் செய்துகொண்டார் என்றும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Technology

அடுத்த செய்தி