முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / எலான் மஸ்க் ட்விட்டரில் மாற்ற விரும்பும் 5 விஷயங்கள் இவைதான்..

எலான் மஸ்க் ட்விட்டரில் மாற்ற விரும்பும் 5 விஷயங்கள் இவைதான்..

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் பட்சத்தில், அதில் மிக முக்கியமாக 5 மாற்றங்களை செய்வதற்கு எலான் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார்.

  • Last Updated :

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீத பங்குகளை இவர் வைத்துள்ளார்.

இத்தகைய சூழலில் 43 பில்லியன் டாலர் விலை கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிக் கொள்ள எலான் மஸ்க் முன்வந்தார். ஆனால், எலான் மஸ்கின் பங்குகள் அதிகரித்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் டிவிட்டர் நிறுவன நிர்வாக ஃபோர்டு விஷப்பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், டிவிட்டர் நிறுவனத்தை எப்படியும் விலை கொடுத்து வாங்கிவிட வேண்டும் என்று தீர்க்கமான முடிவில் இருக்கும் எலான் மஸ்க், அதற்காக 46.5 பில்லியன் டாலர் நிதி திரட்டி வைத்திருக்கிறார்.

கீழ்க்காணும் விஷயங்களை மாற்றியமைக்க திட்டம்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் பட்சத்தில், அதில் மிக முக்கியமாக 5 மாற்றங்களை செய்வதற்கு எலான் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார். எலான் மஸ்க் என்னென்ன மாற்றங்களை எல்லாம் செய்வார் என்ற யூகத்தின் அடிப்படையில் சஃப்ட்வேர் டெவலப்பர் ஒருவர், டிவிட்டரில் வெளியிட்ட பதிவுக்கு ரொம்பவே சிம்பிளாக ‘ஆமாம்’ என்று பதில் அளித்திருக்கிறார் எலான் மஸ்க்.

also read : உங்கள் Whatsapp Profile-க்கு QR கோட் உருவாக்குவது எப்படி?

பிரணாய் பாத்தோல் என்ற அந்த சாஃப்ட்வேர் டெவலப்பர் ஏற்கனவே டிவிட்டரில் எலான் மஸ்க்கிடம் நிறைய விவாதங்களை நடத்தியிருக்கிறார். தற்போது எலான் மஸ்க் செயல்படுத்தக் கூடும் என்று சில திட்டங்களை முன்வைக்கிறார் அவர்.

டிவிட்டர் கோடு மாற்றம் செய்யப்படும்:

டிவிட்டர் தளத்தின் அல்காரிதமை (algorithm)  ஓப்பன் சோர்ஸாக மாற்றுவதற்கு எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அதாவது யார் வேண்டுமானாலும் டிவிட்டர் கோடு என்ன என்பதை ஆக்சஸ் செய்து பார்க்க முடியும். டிவிட்டரில் உள்ள ஸ்கேம் போட்ஸ் ஐடிக்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் எலான் மஸ்க் கூறியிருந்தார். டிவிட்டர் தளத்தில் பரவிக் கிடக்கும் ஸ்கேம் போஸ்ட்களை நீக்குவதற்கு அவர் மிகுந்த முன்னுரிமை அளிப்பார் எனத் தெரிகிறது.

யூசர்கள் எடிட் செய்யும் வாய்ப்பு:

தற்போதைய சூழலில் டிவிட்டரில் வெளியிடும் பதிவுகளை நாம் எடிட் செய்ய முடியாது. ஆனால், யூசர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் எடிட் செய்வதற்கான வாய்ப்பை வழங்க எலான் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார். முன்னதாக, டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியதும் எடிட் ஆப்சன் வேண்டுமா என்பது குறித்து யூசர்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார் அவர்.

also read : உங்கள் வீட்டிற்கு சிறந்த அன்லிமிடெட் WIFI பிளான்களை தேடுகிறீர்களா? விவரங்கள் இங்கே..

கருத்து சுதந்திரம்:

சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரம் இல்லை என்பதை எலான் மஸ்க் பல காலமாக கூறி வருகிறார். இதைத் தொடர்ந்து, டிவிட்டர் நிறுவனத்தை அவர் வாங்கும் பட்சத்தில், கருத்து சுதந்திரத்தை முழுமையாக நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பார் என்று கருதப்படுகிறது. இருப்பினும், தவறான தகவல், போலி செய்தி, வெறுப்பூட்டும் கருத்து போன்றவற்றை தடுக்க உறுதியான அணுகுமுறை தேவைப்படுகிறது.

இறுதியாக, டிவிட்டர் தளத்திற்கு வரும் யூசர்களின் அடையாளத்தை வெகு எளிமையாக உறுதி செய்யும் நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Elon Musk, Twitter