ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

எலான் மஸ்கின் ஒரே நம்பிக்கை.. ட்விட்டரே நம்பி இருக்கும் இந்திய பொறியாளர்.. யார் இந்த ஸ்ரீராம்?

எலான் மஸ்கின் ஒரே நம்பிக்கை.. ட்விட்டரே நம்பி இருக்கும் இந்திய பொறியாளர்.. யார் இந்த ஸ்ரீராம்?

ஸ்ரீராம் -எலான்

ஸ்ரீராம் -எலான்

எலான் மஸ்கிற்கு டிவிட்டரை சீராக நடத்துவதற்கு, இந்தியரான ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவர் அவசியம் தேவை என்ற தகவல் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  புலி வருது புலி வருது என்று கதை ஒருவழியாக நிஜமாகிவிட்டது. அதுதான், எலான் மஸ்க் ட்விட்டரை எப்படியோ கைப்பற்றிவிட்டார். டிவிட்டரின் உரிமையாளராகிய உடனேயே தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் பலரையும் வேலை நீக்கம் செய்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல் அதிரடியாக பல மாற்றங்களை செய்து வருகிறார். தனக்கு பேச்சு சுதந்திரம் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக ஒரு சமூக வலைத்தளத்தையே தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட எலான் மஸ்க் அடுத்தது டிவிட்டரில் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வரப் போகிறார் என்று உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

  இந்த நிலையில் எலான் மஸ்கிற்கு டிவிட்டரை சீராக நடத்துவதற்கு, இந்தியரான ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவர் அவசியம் தேவை என்ற தகவல் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், இவருக்கும் எலான் மஸ்க் டிவிட்டரை நடத்துவதற்கும் என்ன சம்பந்தம் என்பது பற்றி இங்கே.

  எலான் மஸ்க் டிவிட்டர் இந்தியாவில் பணியாற்றி வந்த அனைத்து உயர் அதிகாரிகளையும் வேலை நீக்கம் செய்தார். இதில், சமீபத்தில் டிவிட்டர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட பராக் அகர்வாலும் அடங்கும். இந்நிலையில், ஒரு இந்தியரின் உதவியை எலான் மஸ்க் நாடுகிறார் என்பது வியப்பாகத் தான் இருக்கிறது.

  Read More : எலான் மஸ்க் சொன்ன "நிச்சயமாக"....அப்போ ட்விட்டரில் இந்த மாற்றங்கள் கன்ஃபார்ம்..!

  90 களில் பிறந்த பெரும்பாலான இந்தியர்கள் இன்ஜினியர்களாக ஆவது போல ஸ்ரீராம் கிருஷ்ணனும் ஒரு என்ஜினியர் ஆனார். ஆனால் மற்றவர்களைப் போல அல்லாமல் இவர் தொழில்நுட்பத் துறையில் தன்னை மேம்படுத்திக்கொண்டு உலகின் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களான மெட்டா, மைக்ரோசாஃப்ட், டிவிட்டர் உள்ளிட்ட பெரும்பாலான பிராண்டுகளில் பணியாற்றி இருக்கிறார். 21 வயதிலேயே அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த இவர் தொழில்நுட்ப துறையில் இருக்கும் நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து வந்துள்ளார்.

  ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரின் டைம்லைன் மற்றும் புதிய ட்விட்டர் தளத்துக்கான UI உருவாக்கம், பார்வையாளர்கள் வளர்ச்சி ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தற்போது மெட்டாவாக பெயர் மாற்றம் செய்திருக்கும் ஃபேஸ்புக்கிலும் இவர் மொபைல் அப்ளிகேஷன்ஸ் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதில் பெரிய பங்காற்றியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் இவரின் பங்கு என்பது, இன்று காட்சி விளம்பரங்களில் மிகப்பெரிய நெட்வொர்க்காக வளர்ச்சி பெற்றிருக்கிறது.

  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன் விண்டோஸ் அயூர் பிரிவில் பெரும்பாலும் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். 16z என்ற நிறுவனத்தின் ஒரு பகுதியாக, இவர் கிரிப்டோ கரன்சி ஸ்டார்ட்அப்கள் வளர்ச்சி பற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறார். அப்போது, எலான் மஸ்க் தான் டிவிட்டரை கையாள சரியான நபர் என்று குறிப்பட்டிருந்தார்.

  ஏற்கனவே பல பெரிய நிறுவனங்களின் ஆணிவேராக செயலாற்றி அதன் போக்கை நேர்த்தியாக வடிவமைத்த ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்று டிவிட்டரில் வேலைபார்த்த முன் அனுபவம் ஆகிய இரண்டின் அடிப்படையில் மஸ்க் இவரை தேர்வு செய்ய இருக்கிறார். தற்போது டிவிட்டருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வருமானம் ஈட்டுவது தான். ஏற்கனவே மஸ்க் இதற்கு பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளார். இதற்கு ஸ்ரீராம் கிருஷ்ணன் முழு வடிவம் குடுத்து வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதன் முதல் கட்டமாக, டிவிட்டரில் ப்ளூ டிக் வேண்டுமென்றால் (வெரிஃபைடு கணக்கு) மாதம் $20 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  ஸ்ரீராம் மீண்டும் டிவிட்டரில் பொறுப்பேற்று என்ன மாற்றங்களை செய்ய இருக்கிறார் என்று பார்க்கலாம்!

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Elon Musk, Twitter