ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

விட்டு கொடுக்காத எலான் மஸ்க்..! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ப்ளூ டிக் முறை.!

விட்டு கொடுக்காத எலான் மஸ்க்..! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ப்ளூ டிக் முறை.!

ட்விட்டர் ப்ளூ டிக்

ட்விட்டர் ப்ளூ டிக்

Twitter blue tick subscription | வரும் நவம்பர் 29ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ப்ளூடிக் முறை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ட்விட்டரின் உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டார். அதில் முக்கியமாக வெரிஃபைடு அக்கவுண்ட்ஸ் எனப்படும் பிரபலங்கள், நட்சத்திரங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், மற்றும் பல விஐபி நிலையில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு அளிக்கப்படும் ப்ளுடிக்கை இனி மாதம் எட்டு டாலர் சந்தாவாக செலுத்தினால் தான் பெற முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்தார்.

இதனால் பல்வேறு தரப்பினரிடமிருந்து பலத்த எதிர்ப்பை சந்தித்தார். ஆனால் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட நம் மக்கள் தங்கள் குசும்புத்தனங்களை காட்ட தூங்கிவிட்டனர். முக்கிய பிரபலங்களின் பெயரில் பல்வேறு போலி கணக்குகளை துவக்கி, அதற்கும் எட்டு டாலர் கட்டணம் செலுத்தி வெரிஃபைடு அக்கவுன்ட் என்ற ப்ளுடிக்கை பெற்று மற்றவரின் பெயரில் போலியாக இயங்கி வந்தனர்.

ஒரு படி மேலே போய் கிருத்துவ கடவுள் இயேசு நாதரின் பெயரில் கணக்கை துவக்கி அதற்கும் ப்ளுடிக் வெரிஃபிகேஷன் பெற்ற விவகாரம் இணையத்தில் மிகப் பெரும் அளவில் வைரலாகி வந்தது. இதை தவிர பல முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரிலும் பல்வேறு போலி கணக்குகள் உருவாக்கப்பட்டன. இது போன்ற சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக எட்டு டாலர் செலுத்தி ப்ளூ டிக் பெரும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ட்விட்டர் தெரிவித்திருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை எலான் மஸ்க்கின் அறிவிப்பின்படி, நவம்பர் 29ஆம் தேதி முதல் இந்த ப்ளூடிக் வெரிஃபிகேஷன் முறை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னர் இருந்ததை விட சில புதிய மாற்றங்களையும் கட்டுப்பாடுகளையும் ப்ளூடிக் வெரிஃபிகேஷனுக்காக கொண்டு வந்துள்ளார்கள்.

Also Read : வாட்ஸ்அப்பில் புதிதாக அறிமுகமாகும் டூ நாட் டிஸ்டர்ப் மோட்.!

புதிய அறிவிப்பின்படி ஏற்கனவே ப்ளூடிக் பெற்றிருக்கும் கணக்குகளின் யூசர் நேமை மாற்றினால் உடனடியாக ப்ளூடிக் மறைந்துவிடும். நீங்கள் மாற்றிய யூசர் நேம் ட்விட்டரால் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் கொள்கைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் பின்பே மீண்டும் ப்ளூடிக் அளிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Also Read : கண்ணை மூடிக்கொண்டு ஊழியர்களை நீக்கும் பெருநிறுவனங்கள்... காரணம் என்ன?

சென்ற வாரத்தில் சந்தா செலுத்தி ப்ளூ டிக் பெறும் முறையை தற்காலிகமாக நிறுத்திய உடன், எலான் மஸ்க் இந்த முடிவை கைவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். முக்கியமாக இந்த புதிய கொள்கையினால் ட்விட்டர் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால் எலான் மஸ்க் தான் எடுத்த முடிவில் சற்றும் மாறாமல் புதிய அப்டேட்டுகளுடன் மீண்டும் சந்தா செலுத்தி ப்ளுடிக் பெறும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Elon Musk, Tamil News, Technology, Twitter