ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கம்? - எலான் மஸ்க் ட்விட்டரில் தகவல்!

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கம்? - எலான் மஸ்க் ட்விட்டரில் தகவல்!

எலான் மஸ்க் - ஆப்பிள்

எலான் மஸ்க் - ஆப்பிள்

Elon Musk and Apple | இந்நிலையில் தான் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துடன் தற்போது மோதலில் ஈடுபட்டுள்ளார் எலன் மஸ்க்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் நம்பர்ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாத இறுதியில் சாமானியர் முதல் பெரிய பணக்காரர்கள் வரை பயன்படுத்தி வரும் சமூகவலைத்தளமான ட்விட்டரை பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதையடுத்து எலன் மஸ்க் பல அதிரடி மாற்றங்களை செய்துவருகிறார்.

ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் வசதிக்கு மாத சந்தா என பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார் எலன் மாஸ்க். அதுமட்டுமல்லாமல் பங்குகள் வீழ்ச்சி, விளம்பரதாரர்களின் புறக்கணிப்பு என அடுத்தடுத்து சிக்கல்களிலும் சிக்கியுள்ளது ட்விட்டர்.

இந்நிலையில் தான் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துடன் தற்போது மோதலில் ஈடுபட்டுள்ளார் எலன் மஸ்க். ஆப்பிள் நிறுவனம் ட்விட்டர் விளம்பரங்களில் செலவு செய்வதை நிறுத்திவிட்டதாகவும், விரைவில் ட்விட்டரை அதன் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்க உள்ளதாகவும் மஸ்க் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கருத்து சுதந்திரத்தை ஆப்பிள் வெறுக்கிறதா எனக் கேள்வி எழுப்பி ட்விட் செய்தார். மேலும் மஸ்க் தனத அடுத்தடுத்த ட்விட்களை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை டேக் செய்து பதிவிட்டார்.

Also Read : ட்விட்டரில் 3 வண்ணங்களில் ’டிக்’ மார்க் : எலான் மஸ்க் அறிவிப்பு

அமெரிக்காவில் பேச்சு சுதந்திரத்தை ஆப்பிள் வெறுக்கிறதா.?

ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக எலன் மாஸ்க் தொடர்ந்து பல ட்வீட்களை செய்து வருகிறார். அதில் "அமெரிக்காவில் கருத்து சுதந்திரத்தை ஆப்பிள் நிறுவனம் ஏன் வெறுக்கிறது" என்பது குறித்து ஆப்பிள் நிறுவனத்திற்கு நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எலன் மஸ்க் ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்கை அந்த ட்வீட் த்ரெட்டில் டேக் செய்துள்ளார்.

ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை நீக்குவதாக அச்சுறுத்துகிறது

இலவச மற்றும் பிரீமியம் பயன்பாடுகளுக்கான மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை அகற்றுவதாக ஆப்பிள் தன்னை அச்சுறுத்தியதாக மஸ்க் ஒரு மற்றொரு ட்வீட்டில் கூறியுள்ளார். மேலும் இதற்கு பின்னால் உள்ள காரணங்களை ஆப்பிள் தெளிவாகக் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் போன்களுக்கு மாற்றாக நான் போன் தயாரிப்பதில் இருந்து பின்வாங்க மாட்டேன்

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஏற்கெனவே ராக்கெட்டுகள் மற்றும் மின்சார கார்களை தயாரித்து வருகிறார். ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டு தளங்களில் இருந்து ட்விட்டரை நீக்கினால் ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு போட்டியாக தனது சொந்த ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று மஸ்க் கூறியுள்ளார்.

ஆப்பிள் எல்லாவற்றுக்கும் ரகசியமாக 30% வரி விதிக்கிறது

மற்றொரு ட்வீட்டில், ஆப் ஸ்டோரில் தங்கள் செயலிகளை வெளியிடும் டெவலப்பர்கள் மீது ஆப்பிள் விதிக்கும் 'ரகசிய' வரி பற்றி மஸ்க் கூறியிருக்கிறார். ஆப் ஸ்டோரில் இருந்து வாங்கும் அனைத்திற்கும் 30% ரகசிய வரி விதிக்கிறது. கடந்த காலத்தில் பல டெவலப்பர்கள், எபிக் கேம்ஸ் மற்றும் ஸ்பாட்டிஃபை ஆப்ஸ் கூட அதிக வரிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன என்று கூறினார்.

ஆப்பிள் அனைத்து தணிக்கை நடவடிக்கைகளையும் வெளியிட வேண்டும்

தனது மற்றொரு ட்வீட்டில் தணிக்கை தொடர்பான ஆப்பிளின் நடவடிக்கைகள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என மஸ்க் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினார்.

கடந்த மாதம் மைக்ரோ-பிளாக்கிங் தளத்தை மஸ்க் கையகப்படுத்தியதிலிருந்து, பயனர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு இரண்டு அம்சங்கள் குறித்து கவலையாக உள்ளது. இவற்றில் முதன்மையானது, இனவெறி மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான அனைத்து வகையான ட்வீட்களையும் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பதாகும்.

Also Read : உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டின் மொத்த ஆக்டிவிட்டிஸ்களை டவுன்லோட் செய்வது எப்படி?

இரண்டாவது மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் மாதம் 8 அமெரிக்க டாலர் செலுத்தினால் சரிபார்க்கப்பட்ட புளூ டிக் பேட்ஜை அனைவரும் பெறலாம் என்பதாகும். இதனால் தவறான தகவல் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது.

First published:

Tags: Apple, Elon Musk, Tamil News, Twitter