Home /News /technology /

பறிபோகுமா பராக் அகர்வாலின் ட்விட்டர் சிஇஓ பதவி.? என்ன செய்யப்போகிறார் எலான் மஸ்க்.?

பறிபோகுமா பராக் அகர்வாலின் ட்விட்டர் சிஇஓ பதவி.? என்ன செய்யப்போகிறார் எலான் மஸ்க்.?

twitter

twitter

Parag Agrawal | ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் வேலை குறித்த அச்சம் எழுந்துள்ளது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ-வான எலான் மஸ்க், 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு, அதன் தற்போதைய சிஇஓ பராக் அகர்வாலுக்கு பதிலாக ஒரு புதிய தலைமை நிர்வாகியை கொண்டு வருவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஆதாரத்தை ராய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும், பராக் அகர்வாலுக்கு பதிலாக, எலான் மஸ்க் யார் யாருடைய பெயரை வெளியிட உள்ளார் என்கிற விவரங்களை குறிப்பிட்ட ஆதாரம் வெளிப்படுத்தவில்லை.

பராக் அகர்வால், கடந்த நவம்பரில் ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டார். மேலும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை "முழுமையாக" கைப்பற்றும் வரை அவர்தான் பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் பதவி பறிக்கப்பட்டால் - அகர்வால் தனது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதியின்படி, நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மாற்றிய 12 மாதங்களுக்குள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் - 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிற இழப்பீட்டுத் தொகுப்பை பெறுவார்.

ட்விட்டரை "அதிகபட்ச வேடிக்கைகள் நிறைந்த" இடமாக மாற்ற எலான் மஸ்க் சில தைரியமான மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் ஆன பிரட் டெய்லரிடம், நிறுவனத்தின் நிர்வாகத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்கின் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்துமே, தற்போதைய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் மாற்றப்படுவார் என்கிற யூகத்தையே வழங்குகின்றன. ஆனால், பராக் அகர்வாலோ, ட்விட்டர் நிறுவனத்தில் தனது எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் அவர், “ட்விட்டரை சிறப்பாக மாற்றவும், நமக்கு தேவையானதை சரியாக்கவும், சேவையை வலுப்படுத்தவுமே நான் இந்த வேலையை தேர்வு செய்தேன். இரைச்சலை பொருட்படுத்தாமல் கவனத்துடனும், அவசரத்துடனும் பணியைத் தொடரும் நம் மக்களை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.இருப்பினும் எலான் மஸ்க்கின் நுழைவால், ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் தங்களது வேலைகள் பறிபோகலாம் என்கிற அச்சம் அதிகரித்து கொண்டே போகிறதே தவிர, குறைந்த பாடில்லை. குறிப்பாக ட்விட்டரின் கன்டென்ட் மாடரேஷன் நடைமுறைகளையும், பேச்சு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை அமைப்பதற்குப் பொறுப்பான ஒரு உயர் அதிகாரியையும் எலான் மஸ்க் பலமுறை விமர்சித்த பிறகு ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பணிநீக்கம் குறித்த பீதி உயர்ந்துகொண்டே போகிறது.

Also Read : எலான் மஸ்க் ட்விட்டரில் பணம் சம்பாதிக்க அடுத்த திட்டம்!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தன் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வரையிலாக, பணிநீக்கம் குறித்து முடிவெடுக்க மாட்டார் என்றும் பெயர் சொல்ல விரும்பாத ஆதாரங்களில் ஒன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

Also Read : தேர்வில் ஒரு மார்க் எடுத்த மாணவரின் அலப்பறையை நீங்களே பாருங்கள் - வைரல் வீடியோ

இதற்கிடையில், ஊழியரின் ட்வீட் ஒன்றுக்கு பதிலளித்த பராக் அகர்வால், ட்விட்டர் எப்போதும் தனது ஊழியர்களைப் பற்றி அக்கறை கொண்டிருப்பதாகவும், அதை எப்போதும் தொடரும் என்றும் கூறி உள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கிய பிறகு பல ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் போகும் சாத்தியக்கூறுகள் குறித்து ஒரு ஊழியர் தனது நேர்மையான கருத்துக்களை கேள்வியாக கேட்ட பிறகு பாரக் இப்படி பதில் அளித்துள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Elon Musk, Technology, Twitter

அடுத்த செய்தி