ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

எலான் மஸ்க் சொன்ன "நிச்சயமாக"....அப்போ ட்விட்டரில் இந்த மாற்றங்கள் கன்ஃபார்ம்..!

எலான் மஸ்க் சொன்ன "நிச்சயமாக"....அப்போ ட்விட்டரில் இந்த மாற்றங்கள் கன்ஃபார்ம்..!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ஒரு யூசரின் கேள்விக்கு எலான் மஸ்க் "நிச்சயமாக" (Absolutely) என பதில் அளித்து இருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமீபத்தில் எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக ட்விட்டரின் பொறுப்பை ஏற்று கொண்டுள்ள நிலையில் இந்த மைக்ரோ பிளாக்கிங் பிளாட்ஃபார்மில் பல தொடர்ச்சியான அதிரடி மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

  டெஸ்லா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ட்விட்டரை அதிகாரபூர்வமாக கையகப்படுத்திய முதல் நாளிலேயே அதன் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால், சட்டக் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் சிஎஃப்ஓ நெல் செகல் உள்ளிட்ட உயர்மட்ட ட்விட்டர் நிர்வாகிகளை நீக்கி அதிரடி காட்டினார்.

  அடுத்து வரும் முக்கிய மாற்றங்களில் ட்விட்டின் 280 எழுத்து வரம்பை (280-character limit) எலான் மஸ்க் அகற்ற கூடும் என தெரிகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன், மைக்ரோ-பிளாகிங் பிளாட்ஃபார்மான ட்விட்டருக்கு லாங்-ஃபார்ம் ட்விட்கள் தேவை என்று குறிப்பிட்டார். அதாவது 280 எழுத்துகளில் மட்டுமே அதிகபட்சம் மக்கள் ட்விட் செய்ய முடியும் என்பதை இன்னும் நீளமாக்க வேண்டும் என்பது அவரின் கருத்தாக இருந்தது.

  Read More : இனி ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கும் மாதம் ரூ.1600 கட்டணம்... புதிய திட்டத்தில் எலான் மஸ்க்!

  இந்நிலையில் அவரின் இந்த கருத்து ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய பிறகு விரைவில் செயல் வடிவம் பெற உள்ளதை எலான் மஸ்க் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக ஒரு யூசர் " ட்விட்டர் எழுத்து வரம்புகளிலிருந்து விடுபடுமா அல்லது குறைந்த பட்சம் இப்போது இருக்கும் 280 என்ற வரம்பு அதிகரிக்கப்படுமா.?" என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க் "நிச்சயமாக" (Absolutely) என பதில் அளித்து இருக்கிறார். இதன் மூலம் விரைவில் ட்விட்டர் யூஸர்கள் 280 என்ற எழுத்து வரம்பை தாண்டி ட்விட் செய்ய முடியும். அதற்கு ஏதுவாக எழுத்து வரம்பை மஸ்க் முற்றிலும் நீக்கலாம் அல்லது 280 என்ற லிமிட்டை இன்னும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

  இதற்கிடையே ட்விட்டரில் ஒரு எடிட் பட்டன் தேவை என்றும் மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார். பல யூஸர்களின் கோரிக்கைக்கு பிறகு இது போன்ற ஒரு அம்சத்தில் செயல்படுவதாக ட்விட்டர் அறிவித்தது. இந்நிலையில் ட்விட்டரை வாங்கியிருக்கும் மஸ்க், விரைவில் எடிட் பட்டனை அறிமுகப்படுத்தும் பணியிலும் ஈடுபடுவார் என தெரிகிறது. முன்னதாக 140 எழுத்து வரம்புகளில் இருந்து கடந்த நவம்பர் 2017-ல் ஆங்கிலம் உட்பட சப்போர்ட்டட் மொழிகளில் அனைத்து யூஸர்களும் 280 எழுத்துகள் வரை டைப் செய்து ட்விட் செய்யும் வசதியை ட்விட்டர் அறிமுகப்படுத்தியது. ட்விட்டின் எழுத்து வரம்பை 140-லிருந்து 280-ஆக இரட்டிப்பாக்கியதால் ட்விட்டர் போஸ்ட்களின் நீளம் எதிர்பார்த்த அளவுக்கெல்லாம் மாற்றம் பெறவில்லை.

  2 ஆண்டுகளுக்கும் முன்பான டேட்டாக்களின்படி, 1% ட்வீட்கள் மட்டுமே 280-எழுத்துகள் வரம்பை எட்டியது. மேலும் 12% ட்விட்டுகள் மட்டுமே 140 எழுத்து வரம்பை விட நீளமாக இருந்தன. 5% ட்விட்கள் மட்டுமே 190 எழுத்து வரம்புகளுக்கு மேல் நீளமாக இருந்தன. இதன் மூலம் ட்விட்டர் தற்போதும் ஷார்ட் ட்விட்களுக்காகவே பிரபலமாக உள்ளது. எனினும் அதை வாங்கி இருக்கும் எலான் மஸ்க் ட்விட்டின் எழுத்து வரம்பை அதிகரிப்பதில் தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Elon Musk, Technology, Twitter