ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இன்ஸ்டாகிராம் யூசரா நீங்கள்? இனி ரீல்ஸை ஈசியா டவுன்லோட் பண்ணிக்கலாம்!

இன்ஸ்டாகிராம் யூசரா நீங்கள்? இனி ரீல்ஸை ஈசியா டவுன்லோட் பண்ணிக்கலாம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Instagram Reels Downloader | உங்களது ஆன்ட்ராய்டு போனில் இன்ஸ்டாகிராம் ரீல்களை டவுன்லோடு செய்துக் கொள்ளலாம் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைக்கு இளசுகள் முதல் பெரியவர்கள் வரை இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோக்களை அப்லோடு செய்வது என்பது அவர்களின் வழக்கமான செயல்முறைகளில் ஒன்றாகிவிட்டது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டா தற்போது அதிக அளவிலான யூசர்களை கொண்டுள்ளதால், அவர்களின் வசதிக்காக பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருகிறது.

  குறிப்பாக இன்ஸ்டா  ரீல்ஸ், போஸ்ட் மற்றும் ஸ்டோரீஸ் ஆகியவை ஒவ்வொருவரும் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கானத் தளமாக அமைந்துவிட்டது. தற்போது IGTV அம்சத்தைப் பயன்படுத்தி வருவதால் யூசர் 60 வினாடிகளுக்கு மேல் வீடியோவைப் பதிவிட அனுமதிக்கிறது. இவ்வாறு இன்ஸ்டாவில் ஒவ்வொரு யூசரும் விதவிதமான வீடியோக்களை ரீல்ஸ்களாக வெளியிடுவார்கள். இதை டவுன்லோடு செய்து நம் நண்பர்களுக்குப் பகிர வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் நம்மால் முடியாது.

  இன்ஸ்டா பக்கத்திலிருந்து நேரடியாக வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்ய அனுமதியில்லாததால் இதுவரை . iGram, savefromnet, Ingrammer, Clipbox போன்ற மூன்றாம் தரப்பு ஆப்கள் மற்றும் சில டவுன்லோடு இணையதளங்களைப் பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் தான் உங்களது ஆன்ட்ராய்டு போனில் இன்ஸ்டாகிராம் ரீல்களை டவுன்லோடு செய்துக் கொள்ளலாம் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

  Read More : குரூப்பில் 1024 பேர்.. 2ஜிபி ஃபைல்.. புது அப்டேட்களை வெளியிட்ட வாட்ஸ் அப்.. டெலகிராமை சமாளிக்க புது யுக்தி..!

  இன்ஸ்டா ரீல்களை டவுன்லோடு செய்முறை:

  முதலில் உங்களது மொபைலில் Instagram பயன்பாட்டை ஓபன் செய்யவும். நீங்கள் தற்போது எந்த ரீல்ஸை டவுன்லோடு செய்ய வேண்டுமோ? அதை கிளிக் செய்துக் கொள்ளவும்.
  இதனைத் தொடர்ந்து நீங்கள் இதுவரை நண்பர்களுக்கு எப்படி ரீல்ஸ்களை சேர் செய்வீர்களோ?அந்த ஐகானைக் கிளிக் செய்யவும்.
  பின்னர் ரீல்ஸ் வீடியோவை Copy செய்து https://igram.io/ என்ற இணையதளப்பக்கத்தில் உங்களது ரீல்ஸ் லிங்கை paste செய்ய வேண்டும்.
  பின்னர் உங்களது பக்கத்தை Refresh செய்து URL ஐ கிளிக் செய்துக் கொள்ளவும். தொடர்ந்து "Download.mp4" பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்குப் பிடித்த ரீல்ஸ் வீடியோக்களை டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.
  இதுப்போன்று எளிய முறைகளைப் பயன்படுத்தி இனி உங்களது ஸ்மார்ட்போனிலேயே ஸ்மார்ட்டாக ரீல்ஸ் வீடியோக்களை டவுன்லோடு செய்து உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்துக் கொள்ளுங்கள்.
  இனி தடையும் இல்லாமல் உங்களுக்கு பிடித்த ரீல்ஸ் வீடியோக்களை மேற்க்கூறியுள்ள வழிமுறைகளின் படி டவுன்லோடு செய்து ஷேர் செய்து மகிழுங்கள்.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Instagram, Technology, Trending