பூமியானது சூரியனிலிருந்து ஆற்றலை எவ்வாறு உறிஞ்சி, கதிர்வீச்சு செய்கிறது என்பதை ஆராய அக்டோபர் 5, 1984 ஆம் ஆண்டு புவி கதிர்வீச்சு பட்ஜெட் பரிசோதனை (ERBE) திட்டத்தின் கீழ் செயற்கைகோள் ஒன்று லோ எர்த் ஆர்பிட்டில் சேர்க்கப்பட்டது. தனது நாற்பது ஆண்டு கால விண்வெளி பயணத்திற்கு பின் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நாளை ( ஜனவரி 7 ) நுழையும் என்று நாசா எதிர்பார்க்கிறது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை கணிப்புப்படி இந்த செயற்கைகோள் இந்திய நேரப்படி நாளை காலை 5:10 மணிக்கு பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து எரிந்து அழியும். ஆனால் இந்த நேரம் என்பது துல்லியமானது அல்ல. +/- 17 மணிநேர வித்தியாசம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் செயற்கைக்கோள் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது வானில் முற்றிலும் எரிந்துவிடும். மனிதர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் வராது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈஆர்பிஎஸ் செயற்கைகோளில் 3 முக்கிய கருவிகள் இருந்தன. அதில் இரண்டு பூமியின் கதிர்வீச்சு ஆற்றல் பட்ஜெட் திட்டத்தை அளவிடுவதற்கும், ஓசோன் உட்பட அடுக்கு மண்டலக் கூறுகளை அளவிடுவதற்கு ஒன்றும் செயல்பட்டு வந்தன. இதன் மூலம் செயற்கைகோள் அடுக்கு மண்டல ஓசோன், நீராவி, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் ஏரோசோல்களை அளவீடு செய்தது. இந்த வாயுக்கள் சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கதிர்களை எவ்வளவு தூரம் உறிஞ்சி அதை பிரதிபலிக்கின்றது என்பதை கணக்கிட்டு சொல்லி வந்தது.
ஈஆர்பிஎஸ் இரண்டு வருடம் வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2005 வரை செயல்பட்டுள்ளது. அதன் பின்னர் விஞ்ஞானிகள் அதை மீண்டும் பூமிக்கு அருகில் கொண்டு வர முயற்சித்துள்ளனர். நாளை பூமி வளிமண்டத்தில் நுழையும்போது பெரும்பாலான செயற்கைக்கோள் பகுதி எரிந்துவிடும். அதை மீறி அதன் பகுதிகள் பூமியில் விழுந்தாலும் அது 9,400 இல் ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கணக்கிட்டுள்ளனர்.
விண்கலத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகள் சர்வதேச மாண்ட்ரீல் நெறிமுறை ஒப்பந்தத்தை வடிவமைக்க உதவியது, இதன் விளைவாக ஓசோனை அழிக்கும் குளோரோஃப்ளூரோகார்பன்களின் பயன்பாட்டில் உலகம் முழுவதும் வியத்தகு குறைவு ஏற்பட்டது.
அதே போல. அதன் தரவுகள் பூமியின் கதிர்வீச்சு சமநிலையில் மனித நடவடிக்கைகளின் விளைவுகளை அளவிட ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது. ERBE பணியின் வெற்றியை தொடர்ந்து அதே குறிக்கோளை கொண்ட “மேகங்கள் மற்றும் பூமியின் கதிரியக்க ஆற்றல் அமைப்பு (CERES)” செயற்கைக்கோள் கருவிகளின் தொகுப்பை உருவாக்கி வருவதாக நாசா கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.