Drone: ட்ரோன் மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை விநியோகிப்பதனால் ஏற்படும் பயன்கள்!

ட்ரோன்

தடுப்பூசி மட்டுமில்லை, இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து விதமான மருந்துகள், மருத்துவ உபரகரணங்கள் உள்ளிட்டவற்றை விரைவாக எடுத்துச்செல்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

  • Share this:
இந்தியா கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், தற்போது நோய் பரவலை வைத்து பார்க்கும் போது அது போதுமானதாக இல்லை. இந்தியா சாலை, ரயில் என போக்குவரத்து வசதிகள் சிறப்பானதாக இருக்கிறது. எனினும் இந்தியாவில் 67 சதவிகித மக்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கொண்டு சேர்ப்பது என்பது சவாலான பணி.

தடுப்பூசி மட்டுமில்லை, இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து விதமான மருந்துகள், மருத்துவ உபரகரணங்கள் உள்ளிட்டவற்றை விரைவாக எடுத்துச்செல்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன. இந்நிலையில் மருந்துகள், தடுப்பூசிகள் விநியோகம் செய்வதில் ட்ரோன் முறை பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புற பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் அவரசமாக தேவைப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசி உள்ளிட்டவற்றை விரைவாகவும் இலகுவாகவும் எடுத்துச் செல்லமுடியும். மேலும் குறிப்பிட்ட அளவிலான பொருட்களை சரியான நேரத்துக்கு கொண்டு செல்வதில் ட்ரோன் முறை பெரிதும் கைகொடுக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகள் ட்ரோன் மூலம் தடுப்பூசிகளை விநியோகித்து வருகின்றன. முக்கியமான நேரத்தில் இந்தியாவிலும் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. தற்போது வழக்கமான முறைகளில் இருந்து மாறுபட்டு செயல்பட வேண்டிய தேவை நிலவுகிறது. கொரோனா போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களை சமாளிக்க தடுப்பூசிகள், மற்றும் மருந்துகளை கொண்டு செல்வதற்கு ட்ரோன் மூலம் விநியோகிக்கும் பின்பற்ற வேண்டும். ட்ரோன்களின் மூலம் தடுப்பூசி வழங்குவதை அனுமதித்தது போல, சுகாதாரத்துறை சார்பாக மருந்துகளை டிரோன் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Also read... Google Doodle: கோவிட்-19 தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தும் புதிய அனிமேஷன் டூடுலை அறிமுகம் செய்த கூகுள்!

தற்போது ட்ரோன் பயன்படுத்துவது குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை கையாள புதிய அப்ளிகேஷன்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் ட்ரோன் மூலம் ரத்தம், சீரம், தடுப்பூசி, வைரல் கல்ச்சர், உடல் உறுப்புகள் ஆகியவற்றை டிரோன் மூலம் விரைவாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல முடியும். இதனால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும். நவீன மருத்துவத்துறை மனித உயிர்களைக் காக்க பல சிறப்பான சாதனைகளை செய்துள்ளது. இருப்பினும் கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருக்கிறது. இந்த இடைவெளியை குறைக்கும் விதத்தில் பல புதிய முறைகள் இந்த கொரோனா காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை மெசேஜ் மற்றும் போன் கால் மூலம் கேட்டால் அவர்களுக்கு சராசரியாக 30 நிமிடங்களில் டிரோன் மூலம் உடனடியாக வழங்கப்படும். இந்த டிரோன் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் பறக்கும். விநியோகம் செய்ய வேண்டிய இடத்தை அடைந்ததும் பேராசூட் மூலம் மருந்துகள் கொண்டு செல்லப்படும். தற்போதைய நிலையை ஒப்பிட்டால் எதிர்காலத்தில் நாட்கள், மணி நேரங்களுக்கு பதிலாக சில நிமிடங்களில் மருந்துகள் கிடைக்கும் அளவுக்கு இருக்கும். மேலும் சாலை மற்றும் விமானப் போக்குவரத்துகள் தடைபட்டிருக்கும் போது அத்தியாவசிய பொருட்கள், நீர் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல முடியும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: