ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

புதிய SMS விதிகளை அறிமுகம் - டெலிகாம் நிறுவனங்களுக்கு 15 நாட்கள் காலக்கெடு!

புதிய SMS விதிகளை அறிமுகம் - டெலிகாம் நிறுவனங்களுக்கு 15 நாட்கள் காலக்கெடு!

புதிய SMS விதி

புதிய SMS விதி

மத்திய தொலைத்தொடர்பு துறையின் இந்த புதிய விதிகள் நம் நாட்டில் மிகவும் நடக்கும் பொதுவான சைபர் கிரைம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மத்திய தொலைத்தொடர்பு துறை (DoT) SMS-களுக்கான புதிய விதியை கொண்டு வந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் இந்த புதிய விதியை பின்பற்றுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.

  தொலைத்தொடர்புத் துறை கொண்டு வந்துள்ள புதிய SMS விதிகளின்படி ஏற்கனவே ஒரு சிம்-ஐ யூஸர் பயன்படுத்தி வரும் நிலையில் அதே நம்பருக்கு புதிய சிம் வாங்கும் சந்தர்ப்பத்தில் சிம் ஆக்டிவேட் செய்யப்பட்ட பிறகு அந்த சிம்மிற்கான SMS-ன் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் சர்விஸை சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் சுமார் 24 மணி நேரத்திற்கு தடை செய்ய அல்லது நிறுத்தி வைக்க வேண்டும். சிம் ஸ்வாப் (sim swap) போன்ற மோசடிகளில் இருந்து யூஸர்களை பாதுகாக்க மத்திய தொலைத்தொடர்பு துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

  இந்த புதிய விதியின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா உள்ளிட்ட டெலிகாம் ஆப்ரேட்டர்கள் யூஸர்களின் சிம் எக்ஸ்சேஞ்ச் மற்றும் சிம் அப்கிரேட் கோரிக்கை நிகழ்வுகளின் போது புதிய சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்த பிறகு 24 மணிநேரத்திற்கு குறிப்பிட்ட சிம் கார்டிற்கான SMS சேவைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இந்த புதிய விதியை அமல்படுத்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 15 நாட்கள் மத்திய தொலைத்தொடர்பு துறை அவகாசம் வழங்கியுள்ளது.

  விட்டு கொடுக்காத எலான் மஸ்க்..! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ப்ளூ டிக் முறை.!

  மேலும் DoT-யின் புதிய விதியின்படி, சிம் கார்டு அல்லது நம்பரை மாற்றுவதற்கான கோரிக்கையைப் பெற்ற பிறகு, டெலிகாம் ஆபரேட்டர்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களது கோரிக்கையின் நோட்டிஃபிகேஷனை அனுப்ப வேண்டும். தொடர்ந்து குறிப்பிட்ட சிம் கார்டு வைத்திருக்கும் யூஸர் IVRS கால் மூலம் தனது கோரிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

  சிம் கார்டு வைத்திருக்கும் அங்கீகரிக்கப்பட்ட யூஸரிடமிருந்து தான் கோரிக்கை வந்துள்ளது. மோசடி நபர்கள் யாரும் இதில் இல்லை என்பதை உறுதிப்படுத்த இந்த செயல்முறை உதவும். அதே போல சிம் அப்கிரேட் செயல்முறையை எந்த நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் வேண்டாம் என்று நிராகரித்தாலும், வாடிக்கையாளர் கோரிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் சிம் அப்கிரேட் ப்ராசஸை உடனடியாக நிறுத்தவும் டெலிகாம் நிறுவனங்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளன.

  மத்திய தொலைத்தொடர்பு துறையின் இந்த புதிய விதிகள் நம் நாட்டில் மிகவும் நடக்கும் பொதுவான சைபர் கிரைம்களில் ஒன்றான சிம் ஸ்வாப் மோசடிகளின் அபாயத்தை தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. கடந்த 2016 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்களின் வெளிப்படையான ஒப்புதலைப் பெறுவதற்கான விரிவான நடைமுறைகளை DoT வெளியிட்டது. தற்போது வாடிக்கையாளர் புதிய சிம் பெறுவதற்கான கோரிக்கையை எழுப்பியவுடன் பல அடுக்கு உறுதிப்படுத்தல் உட்பட, சிம் அப்கிரேட், ஸ்வாப் ரெக்வஸ்ட் உள்ளிட்டவற்றை கையாளும் போது செயல்படுத்தப்பட வேண்டிய விரிவான நடவடிக்கைகளை புதிய விதிகளின் மூலம் DoT மேலும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

  Password, Bigbasket - இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகள் பட்டியல்

  SIM swap மோசடி என்றால் என்ன?

  மோசடி நபர்கள் போலி அழைப்புகள் அல்லது ஃபிஷிங் மூலம் ஒருவரது தனிப்பட்ட தகவல்களை பெற்ற பிறகு, அவரது டெலிகாம் சர்விஸ் ப்ரவைடரை அணுகி மோசடியாக பெறப்பட்ட டேட்டாக்களை பயன்படுத்தி ஏற்கனவே இருக்கும் நம்பருக்கு டூப்ளிகேட் சிம்மை வாங்கி விடுகிறார்கள். உணமையான யூஸர் கையில் இருக்கும் சிம் டிஆக்டிவேட் செய்யப்பட்டு, மோசடி நபர்களின் கையில் இருக்கும் புதிய சிம் ஆக்டிவேட்டாகி விடுகிறது. இதன் மூலம் OTP அணுகல் பெற்று மோசடிகள் நடந்து நிதியிழப்பு ஏற்படுகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Airtel, Jio, SIM Card