சமூக வலைதளங்களில் நம்மோடு தொடர்பில் உள்ளவர்களுடன் பேசுவதற்காகவும், விவாதிப்பதற்காகவும் சாட் வசதியை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
குறிப்பிட்ட ஏதேனும் ஒரு விஷயம் குறித்து விவாதிக்கும்போது, பேசும் நபர் குறித்து நம்பகத்தன்மை இல்லை என்றாலோ அல்லது அவர் பேசும் விஷயங்கள் உண்மைக்கு மாறாக அல்லது ஆட்சேபனைக்கு உரியதாக இருந்தால், அவற்றை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக்கொண்டு பொதுவெளியில் அம்பலப்படுத்துவது நம்மில் பலரிடம் வழக்கமாக உள்ளது.
இது மட்டுமல்ல, சில நபர்கள் தங்கள் அன்புக்கு உரியவர்களின் மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நினைவுகளாக வைத்து கொள்வார்கள். அதேசமயம், சில பல, மிரட்டல்களுக்காகவும் சிலர் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது உண்டு.
யார் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், அதை மெசஞ்சர் ஆப் தளத்தில் செய்யாதீர்கள் என்பதை போல எச்சரிக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
எச்சரிக்கைக்கு காரணம் என்ன?
மெசஞ்சர் யூசர்கள் இதற்கு முன்பு வரையிலும் மற்றவர்களின் சாட் பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இருந்தால் அதுகுறித்து எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இனிமேல் அப்படி செய்தால் அது குறித்து எதிர் தரப்பில் உள்ள பயனாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பேஸ்புக் எச்சரிக்கிறது. இதனை இந்த எச்சரிக்கையை மார்க் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக, டிசப்பியரிங் மெசேஜஸ் ஆன் செய்யப்பட்டுள்ள சாட் விவரங்களை ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது குறித்து சுட்டிக் காட்டுகிறார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மார்க் வெளியிட்டுள்ள பதிவில், “எண்டு டூ எண்டு என்கிரிப்டட் மெசஞ்சர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக யாரேனும் உங்கள் சாட் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் அது குறித்து உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்’’ என்று தெரிவித்துள்ளார்.
டிசப்பியரிங் மெசேஜ் வசதி இருக்குமானால், சாட் செய்த குறிப்பிட்ட மெசேஜ்களை நீங்கள் படித்த பிறகு அவை காணாமல் போய்விடும். அதற்காக சிலர் அவற்றை காப்பி செய்து வைத்துக் கொள்வது உண்டு. ஆனால், அது போன்ற நடவடிக்கைகளை பயனாளர்களுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது.
Also read... ஒரே நாளில் 250 பில்லியன் டாலர்களை இழந்த ஃபேஸ்புக் - முக்கியமான 6 காரணங்கள்!
மெசஞ்சர் ஸ்கிரீன்ஷாட் வசதி எப்படி செயல்படுகிறது என்பதற்கான உதாரணம் ஒன்றையும் வழங்கியிருக்கிறார் மார்க் சக்கர்பெர்க். தனது தொழிலில் நீண்டகால பார்ட்னராக உள்ள பிரிசில்லா ஜானுக்கு மார்க் அனுப்பிய மெசேஜ்களைம், அவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்ததும் அது குறித்த நோட்டிபிகேஷன் மார்க்கிற்கு வந்துவிடுகிறது. அந்த பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.
டிசப்பியரிங் மெசேஜ் வசதி என்பது பல நாட்களாக பயன்பாட்டில் உள்ளது. முதன் முதலில் இந்த வசதியை யூசர்களுக்கு அறிமுகம் செய்தது ஸ்னாப்சாட் நிறுவனமாகும். அதற்கு பிறகு மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற தளங்களில் இதனை கொண்டுவர ஃபேஸ்புக் முடிவு செய்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.