Home /News /technology /

e-KYC மோசடிகளுக்கு பலியாகி விடாதீர்கள்..! தனது மில்லியன் கணக்கான யூஸர்களை எச்சரித்துள்ள ஜியோ  

e-KYC மோசடிகளுக்கு பலியாகி விடாதீர்கள்..! தனது மில்லியன் கணக்கான யூஸர்களை எச்சரித்துள்ள ஜியோ  

scam

scam

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் சர்விஸ் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, eKYC-ஐ பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற போர்வையில் ஆதார், வங்கிக் கணக்குகள், OTP-க்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை கேட்கும் மோசடி குறித்து தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் சர்விஸ் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, eKYC-ஐ பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற போர்வையில் ஆதார், வங்கிக் கணக்குகள், OTP-க்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை கேட்கும் மோசடி குறித்து தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

    ஜியோ தனது மில்லியன் கணக்கான யூஸர்களுக்கு eKYC மோசடிகள் குறித்து எச்சரித்துள்ள நிலையில், யூஸர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி நிதி ஆதாயங்களை பெறுவதையே முதன்மை நோக்கமாக கொண்ட மோசடி நபர்களால் இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் தந்திரம் என குறிப்பிட்டு உள்ளது. மேலும் மோசடி நபர்கள் நாங்கள் கேட்கும் விவரங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் உங்களது ஜியோ சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறி யூஸர்களை தடுமாற செய்கிறார்கள்.

    மக்களை ஏமாற்ற மோசடி நபர்கள் பயன்படுத்தும் லேட்டஸ்ட் டெக்னிக் eKYC அப்டேட் என்ற பெயரில் இருக்கிறது. மோசடி நபர் தன்னை ஒரு சர்விஸ் ப்ரோவைடராக காட்டி கொண்டு யூஸர்களிடம் அவர்களின் ஆதார் நம்பர் மற்றும் பேங்க் அக்கவுண்ட் டீட்டெயில்ஸ் போன்ற முக்கிய தகவல்களை கேட்பார்.மோசடி நபர்கள் அனுப்பும் மெசேஜில் வாடிக்கையாளர்கள் கால் செய்வதற்கும், அவர்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கும் ஒரு நம்பர் இணைக்கப்பட்டிருக்கும் என்றும் ஜியோவின் எச்சரிக்கை தெரிவிக்கிறது.

    இந்த மெசேஜ் உண்மை என நம்பி அதிலிருக்கும் நம்பரை யூஸர்கள் டயல் செய்யும் போது, அவர்களின் ஃபோன்களில் தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ் இன்ஸ்டால் ஆகி விடும். அந்த தேர்ட்-பார்ட்டி ஆப் மூலம் குறிப்பிட்ட யூஸர்களின் மொபைல் மற்றும் அதிலிருக்கும் பேங்க் அக்கவுண்ட்ஸ்களை அணுகும் வகையில் ஆப்ஸ் மோசடி செய்பவர்களுக்கு ரிமோட் அக்சஸ் கிடைத்து விடும்.

    இது தொடர்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய இ-மெயில்களில் “சமீபத்தில், சைபர் மோசடி தொடர்பான சில நிகழ்வுகள் எங்களின் கவனத்திற்கு வந்துள்ளன. அதன்படி மோசடி நபர்கள் தங்களை ஜியோவின் பிரதிநிதிகள் போல காட்டி கொண்டு உங்கள் eKYC-ஐ முழுவதுமாக முடியுங்கள் என்ற போர்வையில் ஆதார்,

    வங்கி தொடர்பான தகவல்களை வழங்க யூஸர்களை வலியுறுத்துகிறார்கள். மேலும் அவர்கள் நீங்கள் eKYC ப்ராசஸை முடிக்க ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் உங்களது ஜியோ சேவைகள் பாதிக்கப்படும் என்றும் வாடிக்கையாளர்களிடம் கூறுவதாகவும் ஜியோவின் வார்னிங் இ-மெயிலில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மேலே ஏற்கனவே குறிப்பிட்டது போல தேர்ட்-பார்ட்டி ஆப் இன்ஸ்டால் ஆகி, இதன் மூலம் மோசடி நபர்கள் யூஸர்களிடம் மோசடியை அரங்கேற்றுவதாகவும் ஜியோ எச்சரித்துள்ளது.ஆனால் எந்த விதமான செயல்பாட்டிற்காகவும் எந்தவொரு தேர்ட்-பார்ட்டி ஆப்ஸையும் டவுன்லோட் செய்யும் படி யூஸர்களை கேட்பதில்லை என்று ஜியோ விளக்கம் அளித்துள்ளது. ஜியோ யூஸர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை MyJio ஆப்-ல் லாகின் செய்து தொடர்புடைய தகவல்களை சரி பார்க்கலாம்.

    Read More: இன்ஸ்டாகிராமில் பிரபலமா நீங்கள்...? உங்களுக்காகவே புதிய அப்டேட் அறிவித்த மெட்டா

    ஜியோ யூஸர்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்கலாம்.?

    - சிம்மின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 20 இலக்க சிம் நம்பரை யாருடனும் ஷேர் செய்யக்கூடாது.

    - ஆப்ஸ்களுக்கான தனிப்பட்ட பாஸ்வேர்ட்ஸ் மற்றும் பின்களை உருவாக்க வேண்டும். சீரான இடைவெளியில் அவற்றை புதுப்பிக்க வேண்டும்.

    - சந்தேகத்திற்கிடமான லிங்க்ஸ் அல்லது அட்டாச்மென்ட்ஸ்களை எப்போதும் கிளி செய்ய கூடாது. தனிப்பட்ட தகவலைக் கேட்கும் இ-மெயில்கள், மெசேஜ்கள் அல்லது கால்ஸ்களுக்கு பதிலளிக்க கூடாது.

    - பேங்க் ஸ்டேட்மென்ட்ஸ்களை அடிக்கடி சரிபார்த்து முறைகேடுகள் இருந்தால் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    - மோசடி நபர்கள் மொபைலின் அனைத்து தகவல்களுக்கும் அணுகலை பெற கூடும் என்பதால், ரிமோட் அக்சஸ் ஆப்ஸ்களை யூஸர்கள் டவுன்லோட் செய்ய கூடாது.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Jio, KYC, Reliance Jio

    அடுத்த செய்தி