வைரலாகும் ட்விட்டர் ப்ராங்க்-ல் சிக்கிடாதீங்க!

அந்த பிரான்க் வலையில் நீங்கள் சிக்கியிருந்தால், அரசு சார்பில் உங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை ட்விட்டர் சப்போர்ட்டில் காண்பித்து, உங்களின் அக்கவுன்ட்டை மீட்டுக் கொள்ளலாம்

news18
Updated: March 27, 2019, 11:58 AM IST
வைரலாகும் ட்விட்டர் ப்ராங்க்-ல் சிக்கிடாதீங்க!
ட்விட்டர்
news18
Updated: March 27, 2019, 11:58 AM IST
ட்விட்டரில் உங்களின் பிறந்த ஆண்டை 2007-ம் ஆண்டுக்கு மாற்ற வேண்டாம் என ட்விட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சமூக வலைதளமான ட்விட்டரில் ஒரு பிரான்க் வைரலாக பரவி வருகிறது.  உங்கள் பிறந்த ஆண்டை ட்விட்டரில் 2007-ம் ஆண்டுக்கு மாற்றிக்கொண்டால், உங்களுக்கு புதிய கலர் தீம்கள் கிடைக்கும் என பரவி வரும் அந்தச் செய்தி, உண்மையில் ஒரு ப்ராங்க்.

அதன்படி, நீங்கள் உங்களின் பிறந்த ஆண்டை 2007-ம் ஆண்டு என மாற்றிக் கொண்டீர்கள் என்றால், நீங்கள் 13வயதுக்கு கீழ் உள்ளவர் என உங்களது ட்விட்டர் அக்கவுன்ட் முடக்கப்பட்டு விடும் என்ற எச்சரிக்கையை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.


இந்தச் செய்தியை அறியாமல், அந்த ப்ராங்க் வலையில் நீங்கள் சிக்கியிருந்தால், உங்கள் பிறந்த தேதி மற்றும் ஆண்டு குறிப்பிட்டிருக்கும், அரசு சார்பில் உங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை ட்விட்டர் சப்போர்ட்டில் காண்பித்து, உங்களின் அக்கவுன்ட்டை மீட்டுக்கொள்ளலாம் என்றும் ட்விட்டர் அறிவுறுத்தியுள்ளது.

Also See..
First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...