Home /News /technology /

டொனால்ட் ட்ரம்ப் ‘Truth Social’ ஆப் ஐபோன் பயன்பாட்டிற்கு வந்தது!

டொனால்ட் ட்ரம்ப் ‘Truth Social’ ஆப் ஐபோன் பயன்பாட்டிற்கு வந்தது!

Truth Social App

Truth Social App

'Truth Social' App | ‘ட்ரூத் சோஷியல் ஆப்’ யூஸர்கள் அவர்கள் விரும்பும் வகையில் தங்களது புரோபைலை வடிவமைத்துக்கொள்ளும் வசதியை வழங்குகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, சில வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதனால், ட்ரம்ப்பை பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் தடை விதித்தன.

டிரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே ட்ரம்பின் ஃபேஸ்புக் கணக்கிற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த ட்ரம்ப் தானே புதிய சோசியல் மீடியா ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்தார்.

தனது சொந்த சோசியல் மீடியா ஆப்பை உருவாக்க ட்ரம்ப், ட்ரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் ட்விட்டரைப் போலவே செயல்படக்கூடிய ‘ட்ரூத் சோஷியல்’ என்ற ஆப்பை உருவாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ட்ரூத் சோஷியல்’ ஆப்பிற்கான சோதனை முயற்சி தொடங்கியது. சுமார் 500 பீட்டா சோதனையாளர்கள் பங்கேற்று, ஆரம்ப நிலை பதிப்பை சோதனை செய்தனர். இந்நிலையில் தற்போது ‘ட்ரூத் சோஷியல்’ ஆப் ஐபோன் யூஸர்களுக்காக லாஞ்ச் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்-ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.



 

ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, பிப்ரவரி 21 நள்ளிரவுக்கு முன்பாக ஆப்பிள் ஸ்டோரில் ட்ரூத் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ட்ரூத் சோஷியல் ஆப்’ ஐபோனில் மட்டுமே செயல்படும் என்றும், ஐபேடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : யூ டியூப் ப்ரீமியம் மெம்பர்ஷிப் பெறாமல், பேக்கிரவுண்டில் வீடியோக்களை பிளே செய்வது எப்படி?

‘ட்ரூத் சோஷியல் ஆப்’ யூஸர்கள் அவர்கள் விரும்பும் வகையில் தங்களது புரோபைலை வடிவமைத்துக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. மேலும் தேடல் வசதி மூலமாக நீங்கள் உங்களுக்கு விருப்பமான பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள், நபர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை பின் தொடருவதற்கான வசதியையும் அளிக்கிறது.



ட்ரூத் சோஷியல் ஆப் பிரபல சோசியல் மீடியாவான ட்விட்டரைப் போலவே வடிவகைப்பட்டுள்ளது. ட்விட்டரில் ட்வீட், ரீ-ட்வீட், ட்வீட் அண்ட் ரிப்ளே, மீடியா, லைக் என்பதற்கு பதிலாக, ட்ரூத், ட்ரூத் அண்ட் ஆன்சர்ஸ், மீடியா ஆகிய ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ட்ரூத் சோஷியல் ஆப்பில் யூஸர்கள் பதிவிடும் கருத்துக்கள் ‘ட்ரூத்’ என அழைக்கப்படும் என்றும், யூஸர்களின் பதிவுகள் "Truth Feed" என அழைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : மொபைல் பைத்தியமா நீங்கள்? உடனே தூக்கிப்போடுங்க - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

ட்ரூத் சோஷியல் ஆப்ஸைப் பயன்படுத்த, iOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் ஐபோன் தேவை. யூஸர்களின் இலவச பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆப்பின் அளவு 12.4 MB ஆகும். ஐபோன் பதிப்பை தொடர்ந்து, அடுத்த வாரத்திற்குள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான ட்ரூத் சோஷியல் வெர்ஷன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Apps, Donald Trump, Technology

அடுத்த செய்தி