Home /News /technology /

டொனால்ட் டிரம்பின் புதிய ஆப் சோதனை தொடங்கியது... அறிமுகம் எப்போது தெரியுமா?

டொனால்ட் டிரம்பின் புதிய ஆப் சோதனை தொடங்கியது... அறிமுகம் எப்போது தெரியுமா?

டொனால்ட் டிரம்பின் புதிய ஆப்

டொனால்ட் டிரம்பின் புதிய ஆப்

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் தானே சொந்தமாக சோசியல் மீடியாவை உருவாக்க உள்ளதாக கூறி ட்ர்ம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ஆரம்பித்துள்ள ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைத்தளத்தில் பீட்டா சோதனை தொடங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆல்பாபெட்டின் யூடியூப் ஆகிய சோசியல் மீடியாவில் இருந்து டிரம்ப் தடை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு ட்ரூத் சோஷியல் சோதனை வந்துள்ளது.

ட்ரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனம் சார்பில் ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைத்தளத்தை தொடங்க உள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்கு முன்னோட்டமாக "From the Desk of Donald J. Trump" என்ற ப்ளாக் ஒன்றையும் ட்ரம்ப் ஆரம்பித்தார். ஆனால் அவர் பிற சோசியல் மீடியாக்களில் பிளாக் செய்யப்பட்டதால், தனது ப்ளாக் பக்கத்தை ஒருமாதத்திலேயே மூடினார்.

கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, சில வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதனால், ட்ரம்ப்பை பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் தடை விதித்தன.

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் தானே சொந்தமாக சோசியல் மீடியாவை உருவாக்க உள்ளதாக கூறி ட்ர்ம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனத்தை தொடங்கினார். அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆன நிலையில், தற்போது சுமார் 500 பீட்டா சோதனையாளர்கள் "ட்ரூத் சோஷியல்" இன் ஆரம்ப பதிப்பைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்ரூத் சோஷியல் ஆப் யூஸர்களுக்கு தணிக்கை இல்லாத, ஈடுபட்டுடன் கூடிய அனுபவத்தை வழங்கும் என தெரிவித்துள்ள இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி டெலின் நூன்ஸ், மார்ச் மாத இறுதிக்குள் ட்ரம்ப் நிறுவனத்திற்கு சொந்தமான சோசியல் மீடியா செயல்பட்டு வரும் என்றும் அறிவித்துள்ளார்.

ட்ரூத் சோஷியல் ட்விட்டரைப் போல கருத்துக்களை பதிவிடலாம் என்றும், இதில் எந்த வித விளம்பரங்களும் தோன்றாது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. மேலும் விருப்பமான நபர்களை பாலோப் செய்யலாம், ஆனால் அவர்கள் தங்களை யாரை பின்தொடர வேண்டும் என்பதை இறுதி செய்யக்கூடிய வசதியும் வழங்கப்பட உள்ளது.

Also read... பல கோடிகளுக்கு ஏலம் போகும் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்து போட்ட 3,430 டாலர் 'செக்'!

மூன்று நாட்களுக்கு முன்பு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கை தொடங்கியுள்ளார். சிவப்பு நிற டிக் மார்க் உடன் @realDonald Trump என்ற அதிகாரப்பூர்வ அக்கவுண்டை ஆரம்பித்துள்ளார். அதில் "தயாராயிருங்கள்! உங்களுக்கு பிடித்த ஜனாதிபதி விரைவில் உங்களை சந்திப்பார்!" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை காலையில் ட்ர்ம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ட்ரூத் சோஷியல் 0.9 வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரீ-ட்வீட்டைப் போலவே ரீ-ட்ரூத் என்ற அம்சம் குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. படங்களின் நிற அளவு, கம்ப்ரஷன், பிழை திருத்தும் வசதி, அக்கவுண்ட் கிரியேஷன் போன்றவை குறித்து சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
First published:

Tags: Donald Trump

அடுத்த செய்தி