'ஈசிஜி மெஷின் வேலையை ஆப்பிள் வாட்ச் செய்கிறது'- அமெரிக்க மருத்துவர்

இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை.

Web Desk | news18
Updated: June 24, 2019, 7:14 PM IST
'ஈசிஜி மெஷின் வேலையை ஆப்பிள் வாட்ச் செய்கிறது'- அமெரிக்க மருத்துவர்
ஆப்பிள் வாட்ச்
Web Desk | news18
Updated: June 24, 2019, 7:14 PM IST
ஈசிஜி மெஷின் மூலம் ஒருவரின் இதயத்துடிப்பு அறிந்து மருத்துவ சிகிச்சை அளிப்பதைவிட ஒரு ஆப்பிள் வாட்ச் இந்த வேலையை துரிதமாக செய்து முடித்துவிடும் என அமெரிக்க மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் டாமி கார்ன். கண் மருத்துவத்தில் சிறப்பு நிபுணரான டாமி, சமீபத்தில் பொது இடத்தில் பக்கவாதத்தால் மயங்கிய ஒருவரை அவரது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் மூலமாகவே காப்பாற்றியுள்ளார்.

ஆப்பிள் வாட்ச் மூலம் இதயத் துடிப்பை அறிந்து சிகிச்சை பெற்ற பாதிக்கப்பட்ட நபர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் டாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவுக்கு பலரும் பதிலளித்து வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் ஈசிஜி இயந்திரங்களைவிட இதயத் துடிப்பை அறிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 பயன்படுகிறதாம்.


இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் பார்க்க: இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரசித்த 100 மில்லியன் பார்வையாளர்கள்- ஹாட்ஸ்டார் பெருமிதம்
First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...