ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆன்லைன் கேம்கள் விளையாடுவதிலும் நன்மைகள் உள்ளன... என்னென்ன தெரியுமா..?

ஆன்லைன் கேம்கள் விளையாடுவதிலும் நன்மைகள் உள்ளன... என்னென்ன தெரியுமா..?

கார்ட் கேம்கள் முதல் சதுரங்கம் வரையிலான கேம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மேலும் பல புதிய கேம்கள் சந்தையில் உருவாகியும் வருகின்றன. 13 முதல் 25 வயது வரையுள்ள பதின்பருவத்தினரும், இளைஞர்களும்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர்.

கார்ட் கேம்கள் முதல் சதுரங்கம் வரையிலான கேம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மேலும் பல புதிய கேம்கள் சந்தையில் உருவாகியும் வருகின்றன. 13 முதல் 25 வயது வரையுள்ள பதின்பருவத்தினரும், இளைஞர்களும்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர்.

கார்ட் கேம்கள் முதல் சதுரங்கம் வரையிலான கேம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மேலும் பல புதிய கேம்கள் சந்தையில் உருவாகியும் வருகின்றன. 13 முதல் 25 வயது வரையுள்ள பதின்பருவத்தினரும், இளைஞர்களும்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

நல்ல பழக்கங்களுக்கு யாரும் அடிமை ஆவதில்லை. நம்மை அடிமையாக்கும் எந்தப் பழக்கமும் நல்ல பழக்கம் அல்ல. இன்றைக்கு உலக அளவில் சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருடைய நேரத்தையும் தின்று தீர்க்கிறது இந்த ஆன்லைன் கேம்கள். குறிப்பாக ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் பலர் கேம் அடிமைகளாக இருக்கிறார்கள். விளையாடுவது பொழுது போக்குகளில் ஒன்றாகும். கார்ட் கேம்கள் முதல் சதுரங்கம் வரையிலான கேம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மேலும் பல புதிய கேம்கள் சந்தையில் உருவாகியும் வருகின்றன. 13 முதல் 25 வயது வரையுள்ள பதின்பருவத்தினரும், இளைஞர்களும்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக விளையாட தொடங்கினாலும் திரும்பத் திரும்ப விளையாட தூண்டக்கூடியவையாகவே இந்த கேம் ஆப்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சிக்கல்கள் இருந்தாலும் நேர்மறையாக எடுத்துக்கொண்டால் அவற்றிலும் பல நன்மைகளை நம்மால் பெற முடியும். கேம்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு, அதனால்தான் அனைவருமே இதில் சிக்கிக்கொள்கிறார்கள். பெரும்பாலான நேரத்தை அந்த கேம் ஆப்ஸிலேயே ஒருவர் செலவழிக்கிறார் எனும்போது அதை உருவாக்கிய நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கிறது. ஆன்லைன் கேம்களால் தீமைகள் ஒருபுறம் இருந்தாலும் அதை விளையாடுவதன் மூலம் நன்மைகளும் ஏற்படுகின்றன என்பதே உண்மை.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

கேமிங் என்பது நேரத்தை வீணடிப்பதாகவும், குழந்தைகளுடன் மட்டுமே தொடர்புடைய ஒரு செயலாகவும் கருதப்படுகிறது. மாறாக, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், வேறு எதுவும் செய்ய முடியாதபோது மக்களின் நேரத்தை நிரப்புவதற்கும், பிறர் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதற்கும் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது. உலகச் சந்தையில் கேம்களுக்கு பற்றாக்குறை இல்லை, இப்போது பலவிதமான விளையாட்டுகள் உள்ளன. இது விளையாட்டு வீரர்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப கேமைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்குகிறது.

செயலில் ஒருங்கிணைவு

பெரும்பாலான ஆன்லைன் கேம்களில் வீரர்கள் விளையாட்டின் அமைப்பில் தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ள வேண்டும், இதனால் அவர்கள் விரைவாக முடிவுகளை எடுக்க முடியும். எந்த பாதையை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கலாம்; மேலும் அவர்களின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த விசைப்பலகையையும் பயன்படுத்தலாம். இந்த விஷயங்கள் அனைத்தும் கேமர்கள் தங்கள் ஒருங்கிணைப்பு திறனை மேம்படுத்த உதவுகின்றன. அதுமட்டுமின்றி, இறுதி இலக்கை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வாறு இப்போதே எடுக்க வேண்டும் என்பதை அறிய உதவுகின்றன.

Also read: திருப்பத்தூர்: மணல் கொள்ளையர்கள் ஏற்படுத்திய பள்ளத்தில் சிக்கி 11 வயது பள்ளி மாணவன் உயிரிழப்பு

ஆன்லைன் கேம்கள் சிந்தனைத் திறனை மேம்படுத்தும்?

குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, கேம்கள் குழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவும் என்று கண்டறிந்துள்ளது. கேம்களில் பெரும்பாலும் குழந்தைகள் வழிமுறைகளைப் பின்பற்றவும், அவர்களின் செயல்களை கருத்தில் கொள்ளவும், சிக்கல்களுக்கு பதிலளிக்கவும் வேண்டியிருக்கும்.

சுற்றி நடப்பது குறித்த விழிப்புணர்வு, முழு கவனம், சிக்கலைத் தீர்ப்பது, திட்டமிடுவது, கல்வியறிவு போன்றவை ஆன்லைன் கேம் விளையாடுவதன் மூலம் ஏற்படலாம். சுயக்கட்டுப்பாட்டுடன் இந்த கேம்கள் நம்மை ஆட்கொண்டு விடாமல் பார்த்துக்கொண்டால் நிச்சயம் அதன் நன்மைகள் நமக்கு உண்டு.

முடிவெடுக்கும் திறன்

கேம் விளையாடுவது நம்மை விரைவான முடிவுகளை எடுக்கத் தூண்டும். பெரும்பாலான விளையாட்டுகள் நீண்ட சிந்தனை அமர்வுகளுக்கு இடமளிக்காது. உண்மையில், வீரர்கள் வெற்றிகரமாக கேமின் நிலைகளைக் கடந்து விளையாட்டில் முன்னேற விரைவான முடிவுகளை எடுப்பர். மேலும் விளையாடுவோர் நிச்சயமாக அவர்களின் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்த முடியும், அவை சில நேரங்களில் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் நடைமுறைக்குப் பயன்படும். பொதுவாக எந்த கேமானாலும் முதலில் அது சவாலானதாகத்தான் இருக்கும். விளையாட்டின் சிக்கலான தன்மையிலிருந்து மீளுதல், சிந்தித்து காய்களை நகர்த்த வேண்டிய பல சூழ்நிலைகளுக்குத் தள்ளுகிறது.

உணர்ச்சிகளை நிர்வகிக்க உதவும் ஆன்லைன் கேம்கள்

கேம்கள், பொதுவாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் அவை வெறுப்பூட்டலாம். கேமில் எதையாவது முயற்சித்து தோல்வி அடைவது அல்லது திட்டத்தின்படி செல்லாதது எதிர்மறையாக நம்மை உணரவைக்கும். சில சமயங்களில் அவர்கள் எதிர்பாராத அல்லது ஆச்சரியமான நிகழ்வுகளையும் சந்திக்கலாம்.

இதன் மூலம் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகித்தல், தங்களை அமைதிப்படுத்த கற்றுக்கொள்வது, பின்னடைவை ஏற்றல், காத்திருத்தல், கூடுதல் அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றை பெற வாய்ப்புள்ளது. மேலும், கேம் விளையாடுவது மனதையும், மூளையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் நம் நரம்புகளை ஆக்டிவாக வைத்திருக்கும்.

வணிக திறன்களை வளர்க்கும்

வணிக உலகில் சரியான முடிவை எடுக்கும் வீரரின் திறனை அளவிட சில விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில முக்கியமான விஷயங்களில் சரியான முடிவுகளை எடுக்க அவை உங்களை தயார் செய்கின்றன. இதனால்தான் 20ம் நூற்றாண்டில் பல கேம்கள் தொழில் சார்ந்து உருவாகின. இந்த விளையாட்டில், வீரர்கள் கட்டடங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து பாதைகளை உருவாக்கலாம். மேலும் முக்கியமான முதலீடுகள் குறித்து முடிவுகளை எடுக்கலாம்.

பலர் கூறுவதைப்போல் கேம்களுக்கு எதிர்மறை தாக்கம் இருந்தாலும் நேர்மறையான தாக்கங்களும் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக, இயற்கையை விரும்பும் ஒருவர் இயற்கை சார்ந்த கேம்களை விளையாடுவதன் மூலம் மேலும் இயற்கையை பாதுகாப்பதற்கான வழிகளை அறிந்து கொள்ள முடியும். குழந்தைகளுக்கும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளக்கூட இந்த கேம்கள் உதவலாம். இப்படியான நேர்மறையான விஷயங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Rizwan
First published:

Tags: Addicted to Online Game