ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உஷார்.! உங்க அக்கவுண்ட் பணம் இப்படியும் திருடப்படும்.. பாதுகாப்பா இருக்க சில முக்கிய டிப்ஸ்!

உஷார்.! உங்க அக்கவுண்ட் பணம் இப்படியும் திருடப்படும்.. பாதுகாப்பா இருக்க சில முக்கிய டிப்ஸ்!

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடி

நம்பகமான இணையதளம் போல அணுகி நமது தனிப்பட்ட விவரங்களை திருடி, அதன் மூலமாக மோசடிகளை அரங்கேற்றும் வித்தைகளுக்கு பெயர் தான் பிஷ்ஷிங்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தினந்தோறும் பல்வேறு இணையதளங்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாம் சைபர் பாதுகாப்பு குறித்து ஓரளவுக்குத் தான் தெரிந்து வைத்திருக்கிறோம். கடல் அளவு பெரியதாக உள்ள சைபர் பாதுகாப்பு குறித்து நாம் முழுமையாக தெரிந்து கொள்ளவும் முடியாது.

அதே சமயம், ஆன்லைன் மோசடியாளர்கள் நமக்கு எப்படியெல்லாம் வலை விரிப்பார்கள் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். குறிப்பாக, நம்பகமான இணையதளம் போல அணுகி நமது தனிப்பட்ட விவரங்களை திருடி, அதன் மூலமாக மோசடிகளை அரங்கேற்றும் வித்தைகளுக்கு பெயர் தான் பிஷ்ஷிங்.

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் அதே இணையதள முகவரிகளைப் போன்றே இந்த மோசடியாளர்கள் நம்மை அணுகுவார்கள். போலியான இமெயில் முகவரி, மெசேஜ், விளம்பரம் மூலமாகவும் மோசடி நடைபெறும். புரியும்படி சொல்வதென்றால், நாம் அதிகம் பயன்படுத்தும் ஆன்லைன் ஸ்டோர்களான ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற பெயர்களைக் கொண்ட இணைய முகவரியுடன் விளம்பரங்கள் நம்மை தேடி வரும்.

Read More : உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படுவதற்கான காரணங்கள் - அதிகாரப்பூர்வமான விளக்கம்.!

அட்டகாசமான ஆஃபர்களுடன் பொருட்களை விற்பதாக குறிப்பிட்டிருப்பார்கள். நாம் அதை நம்பி பணத்தை செலுத்தினால் இழப்பு ஏற்படும். அதேபோல நம்முடைய வங்கியில் இருந்து அனுப்புவதைப் போன்று இமெயில் அனுப்புவார்கள். அதை கிளிக் செய்யும் பட்சத்தில் நாம் மோசடிக்கு இரையாகி விடுவோம்.

முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்

உங்களின் தனி விவரங்கள், முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை ஆன்லைனில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது சோஷியல் மீடியாவாக இருக்கலாம் அல்லது நிறுவனங்களின் இணையதளங்களாக இருக்கலாம். உங்கள் ஆதார் எண், பான் எண், பிறந்த தேதி, தந்தை பெயர், தாய் பெயர் மற்றும் முகவரி போன்றவற்றை தேவையின்றி எந்த இடத்திலும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

பெரும்பாலும் பிஷ்ஷிங் அடிப்படையில் வரும் இமெயில் முகவரிகளில் இருக்கும் லிங்க்களை நீங்கள் கிளிக் செய்யும் பட்சத்தில், அங்கு உங்களது தனிப்பட்ட விவரங்கள் அல்லது நிதி சார்ந்த தகவல்கள் கோரப்படும். அனுப்பியவரின் நம்பகத்தன்மை குறித்து ஆராயாமல் தகவல்களை பகிர்து கொள்ளக் கூடாது.

தோராயமான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்: நீங்கள் நம்ப முடியாத ஆஃபர்களுடன் இமெயில் விளம்பரங்கள் வரும் பட்சத்தில் அவற்றை கிளிக் செய்ய வேண்டாம். குறிப்பாக உங்கள் தனி விவரங்கள், வங்கி விவரங்கள் போன்றவற்றை எந்த காரணத்தைக் கொண்டும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. உங்களுக்கு சந்தேகம் வரும் பட்சத்தில் அவற்றை ஸ்பேம் என்று குறிப்பிடவும்.
பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டும்: உங்கள் இண்டர்நெட் பேங்கிங், இமெயில் போன்றவற்றுக்கான பாஸ்வேர்டுகளை அவ்வபோது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக டூ ஃபேக்டர் ஐடெண்டிபிகேஷன் என்னும் முறையை பின்பற்ற வேண்டும். இதைச் செய்தால் உங்கள் பாஸ்வேர்டு குறிபிட்ட பிறகு, மொபைலுக்கு வரும் ஓடிபி எண்-ஐ குறிப்பிட்டால் மட்டுமே லாகின் செய்ய முடியும்.
பிஷ்ஷிங் முறைகளை தெரிந்து கொள்ளவும்: மோசடியாளர்கள் எந்தெந்த ரூபங்களில் நம்மை அணுவார்கள் என்பதை நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மொபைல் ஃபோன்களில் தர்டு பார்டி அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்யக் கூடாது. அடிப்படையான சில மோசடிகள் குறித்து விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே நாம் தப்பிக்க முடியும்.
பையர்வால், ஆண்டி வைரஸ் இன்ஸ்டால் செய்யவும்: சில பிரவுசர்கள், ஓஸ் தளங்கள் ஆகியவை அவ்வப்போது பாதுகாப்பு கருதி அப்டேட் கொடுப்பார்கள். அதை தவற விட வேண்டாம். எப்போதும் உங்கள் சிஸ்டமில் பையர்வால், ஆண்டி வைரஸ் போன்றவற்றை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். விண்டோஸ் டிஃபெண்டர் பயன்படுத்துவதும் பலன் தரக் கூடும்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Online Frauds, Scam, Technology