• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • iPhone வாங்கிய உடன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

iPhone வாங்கிய உடன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

ஐபோன்

ஐபோன்

உங்கள் புதிய ஐபோனில் தோன்றும் படத்தை ஸ்கேன் செய்ய உங்கள் தற்போதைய ஐபோனைப் பயன்படுத்தவும்.

  • Share this:
    விலை எவ்வளவு இருந்தாலும் சரி, எப்படியாவது ஒரு ஐபோன் மடலை வாங்கிவிட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். கைகளில் ஆப்பிள் ஐபோன் வைத்திருந்தாலே கெத்து தான். ஒவ்வொரு ஆண்டும் ஐபோன் நிறுவனம் வெளியீடும் மாடல்களை வாங்குவதற்கு ஐபோன் ஆர்வலர்கள் காத்துக்கிடப்பர். அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள சீரிஸ் தான் ஐபோன் 13. இருப்பினும் நீங்கள் முதன்முதலில் ஐபோனை வாங்கியவராக இருந்தால் செய்யவேண்டிய சில செட்டிங்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. அதை எளிதில் செய்ய சில உதவிக்குறிப்புகள் பின்வருமாறு:

    1. ஐபோனை செட்டப் செய்து ஆப்பிள் அக்கவுண்ட்டை உருவாக்கவும்:

    நீங்கள் ஆப்பிள் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு புதியவராக இருந்தால், முதலில் ஆப்பிள் அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். ஆப்பிள் ஐடி மூலம், கான்டாக்ட்ஸ், காலெண்டர்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஆப்ஸ், கேம்கள், மியூசிக், மூவி போன்றவற்றை டவுன்லோட் செய்து வாங்குவதற்கு iCloud முழுவதும் உங்கள் தரவை இணைக்கலாம். புதிதாக ஐபோனை இயக்கும்போது, ​​உங்களுக்கான ஆப்பிள் ஐடியை உருவாக்கும்படி கேட்கப்படுவீர்கள். இதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சு செய்து, ஆப்பிள் ஐடியை உருவாக்க அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றவும். உங்களிடம் ஏற்கனவே iOS சாதனம் மற்றும் Apple ID இருந்தால், அதை iCloud உடன் இணைத்துக் கொள்ளலாம். இதனால் ஏற்கனவே உள்ள சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள எல்லா தரவுகளும் ஆப்களும் தானாகவே புதியதாக மாற்றப்படும்.

    2. பழைய ஐடி உதவியோடு ஐபோனைத் தானாக செட்அப் செய்வது எப்படி?

    * உங்கள் பழைய ஐபோனை அருகிலேயே வைத்துக்கொண்டு புதிய ஐபோனில் உள்நுழைந்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

    * உங்கள் ஆப்பிள் ஐடியுடன் புதிய ஐபோனை செட்அப் செய்யும்படி கேட்கும் பாப்அப்பில் உங்கள் ஐபோனில் தொடரவும் என்பதைத் டாப் செய்யவும்.

    * உங்கள் புதிய ஐபோனில் தோன்றும் படத்தை ஸ்கேன் செய்ய உங்கள் தற்போதைய ஐபோனைப் பயன்படுத்தவும்.

    * இதையடுத்து தற்போதைய ஐபோனில் வரும் கடவுக்குறியீட்டை உங்கள் புதிய ஐபோனில் உள்ளிடவும்.

    * உங்கள் புதிய ஐபோனில் டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடியை அமைக்கவும்.

    * உங்கள் சமீபத்திய இணக்கமான பேக்அப்பில் இருந்து உங்கள் புதிய ஐபோனை மீட்டெடுக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தேர்வுசெய்யவும்.

    * உங்கள் புதிய சாதனத்தை iCloud அல்லது iTunes பேக்அப்பில் இருந்து மீட்டெடுக்க, புதிய iPhone ஆக அமைக்கவும் அல்லது Android சாதனத்திலிருந்து தரவை மாற்றவும் போன்ற விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    * அதில் தோன்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.

    * இறுதியாக Siri, Find My iPhone, இருப்பிடம் மற்றும் பயன்பாட்டு பகுப்பாய்வுக்கான செட்டிங்ஸை பயன்படுத்த, எக்ஸ்பிரஸ் அமைப்புகளின் கீழ் தொடரவும் என்பதைத் டாப் செய்ய வேண்டும்.

    3. உங்கள் iPhone-ன் ஹோம் அல்லது லாக் ஸ்க்ரீனை கஸ்டமைஸ் செய்யுங்கள் :

    ஐபோனை எந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனையும் போல தனிப்பயனாக்க முடியாது என்றாலும், உங்கள் பாணியின் அடிப்படையில் சாதனத்தைத் தனிப்பயனாக்கலாம். வால்பேப்பரை மாற்றுவது ஐபோன் ஹோம் ஸ்க்ரீனை கஸ்டமைஸ் செய்ய வேண்டிய முதல் விஷயம். செட்டிங்ஸ் -> வால்பேப்பர் -> புதிய வால்பேப்பரைத் தேர்ந்தெடு என்பதற்குச் சென்று வால்பேப்பர் செட்டிங்ஸ்களை தேர்ந்தெடுக்கலாம். அதேபோல நீங்கள் ஆப்களை போல்டர்களில் வைக்கலாம் அல்லது இயல்புநிலை ரிங்டோனை மாற்றலாம். இயல்புநிலை ரிங் டோனை மாற்றுவது என்பது மிக எளிது. இதற்கு செட்டிங்ஸ் -> சவுண்ட்ஸ் -> ரிங்டோன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

    4. ஸ்கிரீன் ப்ரொடெக்டரை போடவும்:

    ஐபோன் 13 இன் ஸ்க்ரீன் முந்தைய சில ஐபோன்களை விட நீடித்ததாக இருந்தாலும், தொலைபேசியின் ஸ்க்ரீனை பாதுகாப்பது அவசியம். ஐபோனுக்கு ஒரு ப்ரொடெக்டர் தேவைப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நீங்கள் சாதனத்தை பைகளிலோ, பாக்கெட்டுகளிலோ வைத்து எடுக்கும் போது ஸ்க்ரீனில் ஸ்க்ராட்ச்ஸ் விழாமல் தடுக்கும். இரண்டாவது, ஐபோன் 13 இன் ஸ்க்ரீனை சரிசெய்வது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே நீங்கள் ஐபோனைப் பெறும்போது ஸ்கிரீன் ப்ரொடெக்டரை போட்டுக்கொள்வது எப்போதும் நல்லது.

    5. சில பாகங்களை வாங்கவும்:

    ஐபோன் 13 அல்லது ஐபோன்13 ப்ரோவில் இருக்கும் பாகங்களை தாண்டி உங்களுக்கு வேறு எதுவும் தேவைப்படாது. ஆனால் உங்கள் அனுபவத்தை மிகவும் சுவாரஸ்யமாக்கும் சில முதல் மற்றும் மூன்றாம் தரப்பு பாகங்கள் உள்ளன. அதில் கேபிள்கள், சார்ஜிங் அடாப்டர்கள், MagSafe, பவர் பேங்க்கள் மற்றும் இயர்பட்கள் ஆகியவை அடங்கும். திடமான இரைச்சல் ரத்து, தரமான ஆடியோ செயல்திறன் மற்றும் சிறந்த உள்-காது பொருத்தம் ஆகியவற்றுடன் வரும் ஏர்போட்ஸ் ப்ரோ, ஆப்பிளின் உண்மையான வயர்லெஸ் இயர்பட்களைப் வாங்குவது சிறந்தது. ஐபோன் 13 அல்லது ஐபோன் 13 ப்ரோவுக்கான லெதர் கேஸைகளை வாங்குவதும் அவசியம். அமேசானில் ரூ1500க்கும் குறைவான விலையில் உயர்தர லெதர் கேஸை நீங்கள் பெறலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: