ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஸ்மார்ட்போனில் உள்ள உங்களது டேட்டாவை டவுன்லோடு செய்ய வேண்டுமா.? இதோ எளிய டிப்ஸ் உங்களுக்காக.!

ஸ்மார்ட்போனில் உள்ள உங்களது டேட்டாவை டவுன்லோடு செய்ய வேண்டுமா.? இதோ எளிய டிப்ஸ் உங்களுக்காக.!

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

Smartphone Data Backup Tips | ஸ்மார்ட்போனில் உள்ள உங்களது டேட்டாவை டவுன்லோடு செய்ய அல்லது காப்பி எடுப்பதற்கான எளிய வழிமுறைகள் என்ன என்பது பற்றி முதலில் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு ஸ்மார்ட்போன்களை உபயோகிக்காத நபர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை நம்மில் அனைவரும் கையாள்கின்றோம். அதிகளவு ரேம் மற்றும் ஸ்டோரேஜ்களுடன் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருவதால், நம்முடைய அனைத்துத் தகவல்களையும் மொபைலிலே சேமித்து வைக்க பழகிவிட்டோம்.

ஆனால் சில நேரம் எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்தினால் மொபைல் போன்கள் பழுதடைவது மற்றும் மொபைல் போன்கள் தொலைந்து விட்டால் நாம் சேகரித்து வைத்துள்ள அனைத்துத் தகவல்களும் வெளியில் எடுக்க முடியாது. இனி இதைப் பற்றி கவலை வேண்டாம். ஸ்மார்ட்போனில் உள்ள உங்களது டேட்டாவை டவுன்லோடு செய்ய அல்லது காப்பி எடுப்பதற்கான எளிய வழிமுறைகள் என்ன என்பது பற்றி முதலில் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் சாட்களை பேக்கப் (back up chat) எடுக்கும் முறை:

வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் தெரியும், அதிகாலை 2 மணிக்கு நம்முடைய வாட்ஸ்அப்பில் உள்ள உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் back up chat செய்யப்படும். உங்களுக்கு இந்த நேரம் மாற்றப்பட வேண்டும் என்றால் இதோ உங்களுக்கான எளிய வழி இது தான்..

முதலில் வாட்ஸ் அப்பிற்குள் செல்லுங்கள்.மேல் வலது மூலையில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்யவும்.

பின்னர் Settings > Chats > Chat backup > Backup to Google Drive ல் backup செய்யவும் என்பதைக் கிளிக் செய்துக் கொண்டு, உங்களுக்கு விரும்பிய நேரத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

Also Read : சோசியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு வைத்த செக்... இன்னும் 3 மாசம் தான் கெடு.!

டெலிகிராமில் உள்ள தகவல்களைச் சேகரிக்கும் முறை:

வாட்ஸ் அப்பிற்கு அடுத்தப்படியாக பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது டெலிகிராம். எனவே இதில் உள்ள தகவல்களை நீங்கள் காப்பி எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் https://desktop.telegram.org/ என்ற பக்கத்திற்குள் சென்று get telegram என்பதை கிளிக் செய்யவும்.

இதனையடுத்து hamburger menu என்ற ஆப்சனைக் கிளிக் செய்து அமைப்புகளுக்குள்(Setting) செல்ல வேண்டும். பின்னர் Advanced option என்பதற்குள் சென்று Export Telegram data யைத் தேர்வு செய்து கொள்வதோடு உங்களுக்கு என்ன தகவல்கள் தேவையோ? அதைத் தேர்வு செய்து பேக் அப் எடுத்துக் கொள்ளலாம்.

Also Read : ஹேக்கர்கள் ஜாக்கிரதை.. கூகுள் குரோம் பயன்பாட்டாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை !

ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை backup செய்யும் முறை:

உங்களது மொபைலில் Google Photos பயன்பாட்டை முதலில் ஓபன் செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து Photos Settings > Backup and sync >என்பதைக் கிளிக் செய்து அனைத்து புகைப்படங்களையும் backup செய்துக் கொள்ளலாம். குறிப்பாக உங்களுக்கு எந்த அளவு புகைப்பட சைஸ் தேவையோ அதையும் மாற்றி அமைத்து நீங்கள் உங்களது மொபைலில் அல்லது மெயிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Also Read : உஷார்..! கூகுளில் இந்த விஷயங்களைத் தேடினால் கண்டிப்பாக சிறைதான்!

Google One appல் தகவல்களைச் சேகரிக்கும் முறை:

இது மட்டுமின்றி உங்களது போனில் உள்ள அனைத்துத் தகவல்களையும் முழுவதுமாக பேக்அப் செய்து சேகரித்து வைக்க வேண்டும் என்றால் google one app உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் எஸ்எம்எஸ், படங்கள், வீடியோக்கள், எம்எம்எஸ் உள்ள அனைத்துத் தகவல்களையும் பெறலாம். இதோ அதற்கான வழிமுறைகள்.

முதலில் Google One app யை ஓபன் செய்யவும். பின்னர் backup sectionல் Storage and scroll என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் முதல் முறை உங்களது போனில் உள்ள தகவல்களை சேகரிக்கிறீர்கள் என்றால் இதற்காக நீங்கள் backup tile என்பதைத் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.

Also Read : முதல் ட்விட் செய்தவர் இவர்தான்- ட்விட்டர் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!

தற்போது உங்களது அனைத்து விபரங்களும் மொபைலில் இருந்து தானாக சேமித்து வைக்கப்படும். இந்த செயல்முறை முடிவதற்கு 24 மணி நேரம் கூட எடுக்கலாம். எனவே பொறுமையாக இருப்பது அவசியம்.

Published by:Selvi M
First published:

Tags: Android, Smartphone, Tamil News, Technology