Home /News /technology /

இந்த விஷயத்திற்காக உங்கள் QR code-ஐ ஸ்கேன் செய்யாதீங்க - SBI எச்சரிக்கை

இந்த விஷயத்திற்காக உங்கள் QR code-ஐ ஸ்கேன் செய்யாதீங்க - SBI எச்சரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

இந்நிலையில் SBI அக்கவுண்ட் வைத்திருப்பவர்களை ஏமாற்ற மோசடி நபர்கள் ஒரு புதிய நுட்பத்தை பின்பற்றியுள்ளனர். இந்த மோசடி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நெட் பேங்கிங் உள்ளிட்டவை வங்கி பரிவர்த்தனைகளை மிக எளிதாக செய்ய மக்களுக்கு உதவி வருகின்றன. இருப்பினும் ஆன்லைன் பேங்கிங்கின் பயன்பாடு அதிகரித்து வருவதால், ஆன்லைன் மோசடி மற்றும் சைபர்-கிரைம் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் SBI அக்கவுண்ட் வைத்திருப்பவர்களை ஏமாற்ற மோசடி நபர்கள் ஒரு புதிய நுட்பத்தை பின்பற்றியுள்ளனர். இந்த மோசடி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடி பொதுவாக பயன்படுத்தப்படும் QR code-உடன் தொடர்புடையது.

    டிஜிட்டல் மயமாக்கலினால் இப்போது மொபைல் எண்கள், வங்கி விவரங்கள் மற்றும் QR code-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் எளிதாக பணத்தை அனுப்பலாம். இதனிடையே UPI பேமென்டின் போது சில பாதுகாப்பு குறிப்புகளை நினைவில் வைத்துக் கொள்ளவாடிக்கையாளர்களை கேட்டு கொண்டுள்ள SBI, ஒருவரிடமிருந்து பணத்தை பெறும் நோக்கத்திற்காக QR code-ஐ ஸ்கேனிங் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. ஏனெனில் இது மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் போது மட்டுமே பயன்படுத்தப்படும் ஒன்று என்றும் SBI குறிப்பிட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும் நீங்கள் UPI பேமென்ட்ஸ் செய்யும் போது முக்கிய பாதுகாப்பு டிப்ஸ்களை நினைவில் கொள்ளுங்கள் என ட்விட் செய்துள்ளது SBI.

    பேமென்ட்டை செலுத்த மட்டுமே QR code ஸ்கேனிங் ஆப்ஷனை வாடிக்கையாளர் பயன்படுத்த வேண்டும் என்றும், யாரிடமாவது பணத்தை பெறும் நோக்கத்தில் QR code-ஐ ஸ்கேன் செய்தால் அதன் பின்விளைவாக அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை இழக்க நேரிடலாம் என்றும் SBI எச்சரித்து உள்ளது. receiving payment என்ற பெயரில் QR code-ஐ ஸ்கேன் செய்ய சொல்லி மெசேஜ் அல்லது மெயில் வந்தால், தவறுதலாக கூட அதை ஸ்கேன் செய்யாதீர்கள். இது உங்கள் அக்கவுண்ட்டை காலி செய்யக்கூடும். ஏனென்றால் QR code-ஐ ஸ்கேன் செய்யும் போது உங்களுக்கு பணம் கிடைக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.

    UPI பேமென்ட்டின் போது நினைவில் கொள்ள சில பாதுகாப்பு டிப்ஸ்கள் கீழே...

    - UPI PIN பணத்தை மாற்ற மட்டுமே தேவை, பெற அல்ல

    - பணம் அனுப்பும் முன் மொபைல் நம்பர், பெயர் மற்றும் UPI ID உள்ளிட்டவற்றை எப்போதும் சரிபார்க்கவும்

    - உங்கள் UPI PIN-ஐ யாருடனும் ஷேர் செய்ய வேண்டாம்

    - எப்போதுமே ஸ்கேனரை பணப் பரிமாற்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது நல்லது

    - ஏதேனும் சிக்கல் என்றால் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தீர்வை தேடுங்கள். பணம் செலுத்துதல் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு நீங்கள் பயன்படுத்தும் பேமென்ட் ஆப்சின் Help section-ஐ நாடுங்கள்.

    - முரண்பாடுகள் ஏற்பட்டால் sbi-யின் புகார்களைக் கையாளும் போர்டலான https://crcf.sbi.co.in/ccf-க்கு சென்று தீர்வை பெறவும்

    Read more:  முழுமையாக ESIM க்கு மாறிய ஆப்பிள் ஐபோன் 14... ESIM என்றால் என்ன...?

    தவிர உங்கள் அக்கவுண்ட் பிளாக் செய்யப்படுவதை தவிர்க்க உங்கள் PAN நம்பரை அப்டேட் செய்யுமாறு SBI பெயரில் அனுப்பப்படும் போலி செய்தி குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே உங்களின் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை பகிருமாறு கேட்கும் இமெயில் அல்லது டெக்ஸ்ட்களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம் என்றும் ஒரு ட்விட்டில் கூறி இருக்கிறது SBI.

     
    Published by:Srilekha A
    First published:

    அடுத்த செய்தி