ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மலிவு விலையில் டிசோ ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்

மலிவு விலையில் டிசோ ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள்

டிசோ  ஸ்மார்ட் வாட்ச்

டிசோ ஸ்மார்ட் வாட்ச்

இந்தியாவில் இரண்டு மாடல்களில் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது டிசோ நிறுவனம். 2,699 ரூபாய்க்கு டிசோ ஸ்மார்ட் வாட்ச்கள் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டிசோ நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்மார்ட்வாட்ச் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. Dizo Watch D Ultra மற்றும் Watch D Pro என இரண்டு மாடல்களில் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் ப்ரீமியம் டிசைன்கள், பெரிய டிஸ்ப்ளேக்கள், டிசோ டி1 சிப்செட்கள் மற்றும் டிசோ ஓஎஸ் போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது. டிசோ வாட்ச் டி அல்ட்ரா ஸ்மார்ட்வாட்சில் அலுமினியத்தால் ஆன செவ்வக டயல் உள்ளது. 368x448 பிக்சல் ரெசல்யூசன் திறன் கொண்ட 1.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்சில் Dizo D1 சிங்கிள் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது மேம்பட்ட பேட்டரி ஆயுள், மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு முறை இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தாங்குமாம். ஒரு முறை இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணிநேரம் ஆகுமாம்.

இந்த ஸ்மார்ட் வாட்சில் 100க்கும் மேற்பட்ட இன்டோர் மற்றும் அவுட்டோர்கேட்கள் உள்ளன. இதில் இதயத் துடிப்பு, SpO2, கலோரிகள் கவுண்டர், ஸ்டெப் கவுண்டர் போன்ற அனைத்து அத்தியாவசிய சென்சார்களும் உள்ளது.

அதே போல் டிசோ வாட்ச் டி ப்ரோவின் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம். DIZO வாட்ச் டி ப்ரோ வாட்ச்கள் அலுமினிய கட்டமைப்புடன் கூடிய தோற்றத்தை கொண்டிருக்கிறது. இதில் அமோலெட் டிஸ்ப்ளே இல்லை. அதற்குப்பதிலாக இதில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்டிங்குடன் கூடிய 1.85 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் டிசோ டி1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இதிலும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மூலம் வாய்ஸ் கால் வசதியும் இந்த ஸ்மார்ட் போனில் இருக்கிறது. மேலும், 100க்கும் மேற்பட்ட கேம்கள் உள்ளன. ஹீத் டிராக்கிங் அம்சங்களுடன் கூடிய இதய துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஆக்ஸிஜன் அளவு (SpO2), ஸ்லீப்பிங் கண்காணிப்பு, கலோரி கவுண்டர், ஸ்டெப் கவுண்டர் போன்ற பல ஆரோக்கிய அம்சங்கள் இதில் இருக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜில் ஏழு நாட்கள் வரை பேட்டரி ஆயுள் நீடிக்கும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணிநேரம் ஆகும் என கூறப்படுகிறது.

டிசோ வாட்ச் டி அல்ட்ரா விலை ரூ.3,299 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் ஜனவரி 12 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். டிசோ வாட்ச் டி ப்ரோ விலை ரூ.2699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜனவரி-17 ஆம் தேதி கிடைக்கும் இரண்டு வாட்ச்களுமே இந்தியாவில் பிளிப்கார்ட் மூலம் வாங்க முடியும்.

First published:

Tags: Smart watch