ஜியோமி தீபாவளி சிறப்புத் தள்ளுபடி- ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு ₹3 ஆயிரம் வரையில் சலுகை!

அறிமுக விலையிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு ரெட்மி K20 ப்ரோ போன் விற்பனைக்கு வருகிறது.

ஜியோமி தீபாவளி சிறப்புத் தள்ளுபடி- ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு ₹3 ஆயிரம் வரையில் சலுகை!
ரெட்மி K20 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7s
  • News18
  • Last Updated: September 23, 2019, 8:14 PM IST
  • Share this:
‘Mi உடன் தீபாவளி’ என சிறப்பு தீபாவளி தள்ளுபடி விற்பனையை வருகிற செப்டம்பர் 28-ம் தேதி ஜியோமி தொடங்க உள்ளது.

இந்தியாவில் தீபாவளி பண்டிகை நெருங்குவதை அடுத்து ஜியோமி நிறுவனம் தொடர்ந்து பல ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறது. தற்போது ஜியோமியின் ரெட்மி K20 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7S ஆகிய இரு போன்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாக்கால விற்பனையின் போது 3ஜிபி ரேம்+ 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 7S 8,999 ரூபாய்க்கும் 4ஜிபி ரேம்+ 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் 9,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். அறிமுக விலையிலிருந்து சுமார் 2 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி K20 ப்ரோ 24,999 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது. அறிமுக விலையிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு இந்த போன் விற்பனைக்கு வருகிறது.


தீபாவளி சலுகை குறித்த அறிவிப்பு ஜியோமியின் ட்விட்டர் பக்கத்திலும் சலுகை விலைப்பட்டியல் ஜியோமி இந்தியா தலைவர் மனு குமாரின் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் பல ஜியோமி போன்களுக்கும் தொடர்ந்து தள்ளுபடி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விற்பனைக் காலத்தில் HDFC வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பே செப்டம்பர் 28-ம் தேதி ஜியோமி தளத்தில் தீபாவளி விற்பனை தொடங்குகிறது.

மேலும் பார்க்க: எதிர்ப்புகளையும் மீறி லிப்ரா கரன்ஸி வெளியீட்டுக்குத் தயாராகும் ஃபேஸ்புக்..!ஜிஎஸ்டி வரி குறைப்பால் விலை அதிகரிக்கும், குறையும் பொருட்கள் எவை?
First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்