• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை ரூ.5,000 தள்ளுபடி - சியோமியின் தீபாவளி ஆஃபர்கள்!

ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை ரூ.5,000 தள்ளுபடி - சியோமியின் தீபாவளி ஆஃபர்கள்!

சியோமியின் தீபாவளி ஆஃபர்கள்

சியோமியின் தீபாவளி ஆஃபர்கள்

சியோமி நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளின் மீது பல தள்ளுபடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது.

  • Share this:
    "Diwali with Mi" என்ற பெயரில் தீபாவளி சலுகைகளை அறிவித்து இருக்கிறது சியோமி நிறுவனம். இந்த சலுகைகள் ஆன்லைனுக்கு பொருந்தாது. ஆப்லைனில் மட்டுமே கிடைக்கும் என்று சியோமி கூறி இருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 சியோமி ஷோரூம்கள் உள்ளது. இந்த கடைகளில் வாடிக்கையாளர்கள் ஆஃபர் சலுகைகளை பெறலாம்.

    ரெட்மி ஸ்மார்ட்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்து இது. நீங்கள் வாங்கும் எந்தவொரு ரெட்மி மொபைலுக்கும் ரூ.3,000 வரை கேஷ்பேக் ஆஃபர்களை பெறலாம். இந்த ஆஃபர் ‘ஐசிஐசிஐ’ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மொபைலின் 6 GB + 128 GB வேரியண்ட்டில் வாங்கும் போது சலுகை விலையாக ரூ.18,400க்கு கிடைக்கும்.

    இதனுடன் ‘ரெட்மி சோனிக் பாஸ் வயர்லெஸ்’ இயர்போன்களையும் இலவசமாக பெறலாம் என்று அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 10 எஸ்ஸ் 6GB + 64GB வேரியண்டில் தள்ளுபடி விலையாக ரூ.13,999க்கு வாங்கலாம். அதேபோல ரெட்மி நோட் 10 ப்ரைம் 4 GB + 64 GB வேரியண்ட்டை ரூ.11,999க்கும், 8 GB + 128 GBயை ரூ.28,999க்கும் பெற்று கொள்ளலாம்.

    சியோமி நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளின் மீது பல தள்ளுபடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது. எந்தவொரு ஸ்மார்ட் டிவியை வாங்கினாலும் ரூ.4,500 வரை கேஷ்பேக் சலுகை கிடைக்கும். இந்த ஆஃபர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ ஆகியவற்றில் மட்டுமே செல்லுபடியாகும். ரூ.40,999 மதிப்புள்ள Redmi Smart TV X55 மாடலானது தீபாவளி ஆஃபரில் ரூ. 5,000 தள்ளுபடியுடன் குறைந்த விலைக்கு வாங்கலாம்.

    Also read... தீபாவளி கிஃப்ட்ஸ் - ரூ. 500 முதல் அட்டகாசமான பொருட்கள் வாங்க வேண்டிய நேரம் இது!

    55 இன்ச் Mi TV 4X UHD ஆனது தள்ளுபடி விலையில் ரூ.42,999 விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மையான விலை ரூ.44,999 ஆகும். இந்த டிவி ரூ.2000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கிறது. 50-இன்ச் Mi TV 4X UHD ரூ.38,999லிருந்து விலை குறைத்து ரூ.35,999க்கு விற்கப்படும்.

    Mi வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் ரூ.2000 தள்ளுபடியை சேர்த்து ரூ.7,999க்கு கிடைக்கும். Mi Robot Vacuum-Mop P ஆனது ரூ.5,000 தள்ளுபடி ஆஃபருடன் வருகிறது. வாடிக்கையாளர்கள் இதை ரூ.19,999க்கு வாங்கி கொள்ளலாம்’ என்று சியோமி நிறுவனம் தீபாவளி அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இது தவிர இன்னும் எண்ணற்ற சியோமி தயாரிப்புகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் முதல் டிவி வரையிலான இந்த அட்டகாசமான ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: