ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

தீபாவளி ஆஃபர்... ஜியோ ஃபைபர் இணைப்பு 6 மாதத்துக்கு முற்றிலும் இலவசம்...!!!

தீபாவளி ஆஃபர்... ஜியோ ஃபைபர் இணைப்பு 6 மாதத்துக்கு முற்றிலும் இலவசம்...!!!

ஜியோ ஃபைபர் இணைப்பு இலவசம்

ஜியோ ஃபைபர் இணைப்பு இலவசம்

Jio Deepavali Offer | ஜியோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் முக்கிய அம்சமான ஜியோ பைபர், தீபாவளி ஆஃபராக "JioFiber Double Festival Bonanza" சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இப்போது புதியதாக ஜியோ ஃபைபர் இணைப்பை பெரும் பயனர்களுக்கு ரூ.6,500 மதிப்பிலான சலுகைகளை அறிவித்துள்ளது.

  அக்டோபர் 18 முதல் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் புதிய ஜியோ ஃபைபர் இணைப்பை பெற்று ரூ. 599 திட்டத்தில் 6 மாத ரீசார்ஜ் அல்லது ரூ.899-ல்  6 மாத ரீசார்ஜ்  திட்டத்தில்  ஏதேனும் ஒன்றில் இணைந்தால் அவர்களுக்கென புதிய  சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

  Read More : ஜியோ 5ஜி சேவையின் 3 முக்கிய சிறப்பம்சங்கள் இதுதான்! விவரம்!

  சலுகை விவரங்கள்:

  * 100% VALUE BACK அதாவது அவர்கள் ரீச்சார்ஜ் செய்யும் சந்தாவிற்கான சமமான வால்யூ பேக் தரப்படும் அவற்றை பயன்படுத்தி ஏஜியோ, ரிலையம்ஸ் மார்ட் போன்ற இடங்களில் அதன் மதிப்பை பொருத்து நாம் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.

  * 15 நாட்கள் கூடுதலான ஜியோ ஃபைபர் சேவையை பெற முடியும்.

  பிளான் விவரங்கள்

  பிளான் குறித்த பலன்கள் மற்றும் விவரங்கள் பின்வருமாறு:

  1. ரூ. 599 X 6 மாத திட்டம் (30 Mbps, 14+ OTT ஆப்ஸ் & 550+ ஆன்-டிமாண்ட் சேனல்கள்):

  இந்த திட்டத்தின் கீழ் 6 மாத சந்தாவை மொத்தமாக  ரூ. 4,241 (ரூ. 3,594 + ரூ. 647 ஜிஎஸ்டி), செலுத்தினால் அதே மதிப்பில் வவுச்சர்களைப் பெற முடியும். ரூ. 4,500 மதிப்புள்ள வவுச்சர்கள் 4 வெவ்வேறு பிராண்டுகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

  AJIO இன் ரூ.1,000 வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலின் ரூ. 1,000 வவுச்சர், NetMeds இன் ரூ. 1,000 வவுச்சர் & IXIGO இன் ரூ.1,500 வவுச்சர் மற்றும் 15 நாட்கள் கூடுதலாக ஜியோ ஃபைபர் சேவை வசதி கிடைக்கும்

  2. ரூ. 899 X 6 மாத திட்டம் (100 Mbps, 14+ OTT ஆப்ஸ் & 550+ ஆன்-டிமாண்ட் சேனல்கள்):

  இந்த திட்டத்தின் கீழ் 6 மாத சந்தாவை மொத்தமாக   ரூ. 6,365 (ரூ. 5,394 + ரூ. 971 ஜிஎஸ்டி), செலுத்தினால் அதே மதிப்புள்ள வவுச்சர்களைப் பெற முடியும். ரூ. 6500  மதிப்புள்ள வவுச்சர்கள் 4 வெவ்வேறு பிராண்டுகளில் உள்ளன: AJIO இன் ரூ.2,000 வவுச்சர்,ரிலையன்ஸ் டிஜிட்டலின் ரூ. 1,000 வவுச்சர், NetMeds இன் ரூ. 500 வவுச்சர் &IXIGO இன் ரூ.3,000 வவுச்சர் மற்றும் 15 நாட்கள் கூடுதலாக ஜியோ ஃபைபர் சேவை வசதி கிடைக்கும்.

  3. ரூ. 899 X 3 மாத திட்டம் (100 Mbps, 14+ OTT ஆப்ஸ் & 550+ ஆன்-டிமாண்ட் சேனல்கள்):

  இந்த திட்டத்தின் கீழ் 3 மாத சந்தாவை மொத்தமாக  ரூ. 2,697 (ரூ. 3,182 + ரூ. 485 ஜிஎஸ்டி) செலுத்தினால்ரூ.3500 மதிப்புள்ள வவுச்சர்களை பெற முடியும். ரூ. 3,500 மதிப்புள்ள வவுச்சர்கள் 4 வெவ்வேறு பிராண்டுகளில் உள்ளன: AJIO இன் ரூ.1,000 வவுச்சர்,ரிலையன்ஸ் டிஜிட்டலின் ரூ.500 வவுச்சர், NetMeds இன் ரூ. 500 வவுச்சர் & IXIGO இன் ரூ.1,500 வவுச்சர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Deepavali, Diwali, Jio, Jio Fiber, Jio news