• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • தீபாவளி கிஃப்ட்ஸ் - ரூ. 500 முதல் அட்டகாசமான பொருட்கள் வாங்க வேண்டிய நேரம் இது!

தீபாவளி கிஃப்ட்ஸ் - ரூ. 500 முதல் அட்டகாசமான பொருட்கள் வாங்க வேண்டிய நேரம் இது!

தீபாவளி கிஃப்ட்ஸ்

தீபாவளி கிஃப்ட்ஸ்

Diwali 2021: ரூ. 3,000க்கு கீழ் நல்ல வயர்லெஸ் இயர்பட்ஸ் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒன்பிளஸ் பட்ஸ் Z வாங்கி கொள்ளலாம்.

  • Share this:
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. ஒரு வாரம் மட்டுமே உள்ளது. தீபாவளி போன்ற அனைத்து பண்டிகைகளுக்கும் நமக்கு பிடித்தவர்களுக்கு பரிசுகளை வழங்குவது வழக்கம். தற்போது ஆன்லைனில் விற்கும் நல்ல தரமான பொருட்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இதனை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வழங்கி தீபாவளியை கொண்டாடுங்கள். தீபாவளி விற்பனையை பிரபல ஆன்லைன் வணிக நிறுவனமான ‘அமேசான்’ ஏற்கனவே தொடங்கிவிட்டது. மற்றொரு பெரிய நிறுவனமான ‘பிளிப்கார்ட்’ அக்டோபர் 28 முதல் சிறப்பு தீபாவளி விற்பனையை தொடங்க உள்ளது. ரூபாய் 500 முதல் தொடங்கும் தரமான பொருட்களை இங்கு காணலாம்.,

போட் ஹெட்போன்கள் :

BoAt BassHeads 220 இயர்போன்கள் ரூ.499க்கு ப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது. மைக்ரோஃபோன் வசதியுடன் வரும் இந்த ஹெட்போன்கள் சிவப்பு, பச்சை, கருப்பு மற்றும் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.

ரியல்மி ஸ்பீக்கர் :

ரியல்மியின் Cobble ஸ்பீக்கர் ரூ.1,799 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கர் IPX5 வசதியை பெற்றுள்ளது. வாட்டர் ப்ரூப் தன்மையை கொண்டது. அக்டோபர் 28ல் தொடங்கும் பிளிப்கார்ட் தீபாவளி சிறப்பு விற்பனையில் இந்த ஸ்பீக்கரை ஆபர் விலையில் வாங்கலாம்.

ஒன்பிளஸ் பட்ஸ் :

ரூ. 3,000க்கு கீழ் நல்ல வயர்லெஸ் இயர்பட்ஸ் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒன்பிளஸ் பட்ஸ் Z வாங்கி கொள்ளலாம். இது சுமார் 20 மணி நேரம் வரை பேட்டரி தாங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. IP55 வசதியில் வரும் இந்த ஒன்பிளஸ் பட்ஸ் நீர் மற்றும் வியர்வை எதிர்த்து இயங்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

அமேசான் எக்கோ டாட் :

நல்ல தரமான ஸ்மார்ட் ஸ்பீக்கர் தான் உங்கள் சாய்ஸ் என்றால், அமேசான் எக்கோ டாட் (3rd Zen) வாங்கலாம். அமேசானில் ரூ.2,149க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி Mi Band 6 :

சியோமியின் ‘Mi Band 6’ சிறந்த பட்ஜெட் வாட்ச் ஆகும். உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இதனை பரிசாக கொடுத்து மகிழலாம். அமேசான் தளத்தில் ரூ.3,499 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த Band-ற்கு ரூ.200 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பனை பயன்படுத்தலாம். நீங்கள் கோடக் வங்கியின் வாடிக்கையாளர் என்றால் உங்கள் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடியில் பெறலாம். இந்த ஸ்மார்ட் பேண்ட் 1.56-இன்ச் AMOLED திரையினையும், SpO2 கண்காணிப்பு, இதய துடிப்பு கண்காணிப்பு, மன அழுத்தம் மற்றும் தூக்க கண்காணிப்பு, 5ATM நீர்-எதிர்ப்பு மதிப்பீடு உட்பட பல்வேறு சிறந்த வசதிகளை கொண்டுள்ளது.

DJI கிம்பல் :

குறைந்த விலையில் சிறந்த ‘கிம்பல்’ வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், நீங்கள் ‘DJI OM 4 SE’ தேர்வு செய்யலாம். உங்கள் ஸ்மார்ட்போனை கிம்பலில் பொருத்தி அழகான வீடியோவை எடுக்கலாம். இதனை அமேசானில் ரூ.8,599க்கு பெற முடியும்.

Anker பட்ஸ் :

‘Anker's Soundcore Liberty Air 2’ சிறந்த பிரீமியம் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இது நல்ல தரமான இசையை இரைச்சல் இல்லாமல் தருகிறது. இதன் விலை ரூ.9,951 ஆகும்.

சாம்சங் வாட்ச் :

ரூ.15,000க்கு குறைவான ஃபிட்னஸ் வாட்சுகளை நீங்கள் தேடுகிறீர்களா? அப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது இதுதான். சாம்சங் கேலக்சி வாட்சின் Active 2 தரமான பிராண்டட் ஸ்மார்ட் வாட்ச் ஆகும். இதன் தற்போதைய விலை ரூ. 14,990. இதன் விலை தீபாவளி விற்பனையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் ரூ.35,990க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 4G வாட்ச் ஆன இது, AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 5ATM மற்றும் IP68 நீர்-எதிர்ப்பு, ரவுண்ட் டயல் வசதிகளுடன் வருகிறது. ஐந்து நாட்கள் வரை பேட்டரி தாங்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

Also read... iPad வாங்க போறீங்களா? இதைப் படியுங்கள்!

டைசன் :

டைசன் நிறுவனம் தன்னுடைய சில தயாரிப்புகளுக்கு தள்ளுபடியை வழங்குகிறது. ரூ.39,990க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிறுவனத்தின் Dyson V8 Absolute+ கிளீனர், தள்ளுபடி விலையில் ரூ.27,990 க்கு வழங்குகிறது.

ஆப்பிள் ஐபோன் 12 :

நீங்கள் ஆப்பிள் பிரியரா, உங்களுக்கு பிடித்தவருக்கு நிச்சயம் இந்த ஐபோனை பரிசாக கொடுக்கலாம். ப்ளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபோன் 12 தள்ளுபடி விலையில் ரூ.60,199க்கு கிடைக்கிறது. அக்டோபர் 28ல் தான் பிளிப்கார்ட்டின் தீபாவளி விற்பனை தொடங்குகிறது. எனவே இதன் விலை மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: