• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • தீபாவளி கொண்டாட்டம்: சலுகை விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஃபோன், வாட்ச் மற்றும் டிவிக்கள்!

தீபாவளி கொண்டாட்டம்: சலுகை விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஃபோன், வாட்ச் மற்றும் டிவிக்கள்!

சலுகை விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஃபோன்

சலுகை விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஃபோன்

ஒன்பிளஸ் u1s டிவி வரிசையில் 50 முதல் 65 இன்ச் வரையிலான 4K UHD டிவி-க்கள் கிடைகின்றன. இவை அனைத்தும் HDR10 சான்று பெற்றவை.

  • Share this:
ஒளியின் பண்டிகையாக இருக்கும் தீபாவளி நெருங்கி விட்ட நிலையில் பலரும் தங்களது பழைய எலெக்ட்ரானிக் கேஜெட்ஸ்களை மாற்ற வேண்டிய தருணமாக இதை கருதுகின்றனர். எனவே தங்களிடம் இருக்கும் ஒருசில பழுதுகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் ஃபோன்கள், டிவி-க்கள், ஸ்மார்ட் வாட்ச்களை மாற்றவோ அல்லது புதிதாக வாங்கும் முயற்சியிலோ ஆர்வம் காட்டி வருகின்றனர். மக்களின் எண்ணத்திற்கேற்ப பல முன்னணி எலெக்ட்ரானிக் கேஜெட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் பண்டிகைகளை சலுகைகளை வழங்கி வருகின்றன. பிரபல நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவன தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 9 சீரிஸ்:

ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர் உள்ளிட்ட 3 மாடல்கள் ஒன்பிளஸ் 9 சீரிஸில் அடங்கி உள்ளன. 120 ஹெர்ட்ஸ் AMOLED பேனல்கள் மற்றும் சிறந்த கேமராக்கள் கொண்ட இந்த ஃபிளாக்ஷிப் 9 சீரிஸ் உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்து நல்ல ஒரு தேர்வாக இருக்கும். 3 மாடல்களில் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஃபோன் அதன் 10-பிட் LTPO பேனல், 1 பில்லியன் கலர்ஸ் மற்றும் 1,300-நிட் ஸ்கிரீனுடன் இது தனித்து நிற்கிறது. ஒன்பிளஸ் 9 மற்றும் 9R மொபைல்களின் பேனல்கள் இதேபோல் திறன் கொண்டவை என்றாலும் குறைந்த FHD+ ரெஸல்யூஷன் கொண்டவையாகும்.

3 மாடல்களிலும் உங்கள் பட்ஜெட் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து 8GB + 128GB மற்றும் 8GB + 256GB விருப்பங்கள் கிடைக்கும். ஒன்பிளஸ் 9ஆர் மொபைலின் விலை ரூ.37,500, ஒன்பிளஸ் 9 ப்ரோவின் விலை ரூ.66,500 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் அவுட்லெட்டுகளில் 9 ப்ரோவிற்கு ரூ.4,000, 9 மற்றும் 9ஆர்-க்கு ரூ.3000 தள்ளுபடி கிடைக்கிறது. iOS ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி பெறலாம். அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் குறிப்பிட்ட சில வங்கிகளின் கார்டில் செய்யப்படும் பரிவர்தனைகளுக்கு அதிக தள்ளுபடியும் கிடைக்கிறது.

Also read... பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கும் SAMSUNG கேலக்ஸி எஸ்21 FE!

ஒன்பிளஸ் டிவி:

ஒன்பிளஸ் u1s டிவி வரிசையில் 50 முதல் 65 இன்ச் வரையிலான 4K UHD டிவி-க்கள் கிடைகின்றன. இவை அனைத்தும் HDR10 சான்று பெற்றவை. இதனால் நீங்கள் சிறந்த பிக்ச்சர் குவாலிட்டி, டிசைன் மற்றும் ஆக்சிஜன்ப்ளே 2 சப்போர்ட்டை பெறலாம். இவற்றின் விலை ரூ.44,000 முதல் ரூ.67,500 வரை இருக்கும். ஒன்பிளஸ் u1s டிவியை நீங்கள் எங்கு வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து ரூ.4,000 வரை தள்ளுபடியும், ரூ.2,000 விரைவான வங்கி தள்ளுபடியும் (quick bank discount) பெறலாம். அதே போல சில வங்கிகள் Flipkart மற்றும் OnePlus ஆப் மூலம் வாங்கும் பொருட்களுக்கு குறிப்பிடத்தக்க தள்ளுபடியை அளிக்கின்றன. ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கிகள் மூலம் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கிறது, அமேசானில் HDFC மூலம் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் பட்ஸ் மீது ரூ.991 தள்ளுபடியும், புல்லட் வயர்லெஸ் இசட் மீது ரூ.200 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட் வாட்ச்:

326 ppi உடன் 1.39-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் ரூ.15,000 விலை கொண்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஒர்கவுட் மோட்ஸ், IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. அடுத்து உடற்பயிற்சி பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்பிளஸ் பேண்ட் ரூ.2,200 என்ற விலையில் கிடைக்கிறது. கோடக் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் ஒன்பிளஸ் வாட்சிற்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகின்றன. அதே சமயம் அமேசானில் HDFC வங்கி 10% தள்ளுபடி வழங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: