வெளியான அன்றே 10 மில்லியன் பேர் சந்தாதாரர்களாக இணைந்தனர்- சாதனை படைத்த டிஸ்னி+

முதல் நாளில் டிஸ்னி+ தளத்தில் சந்தாதாரர்கள் 1.3 மில்லியன் மணி நேரங்கள் செலவிட்டு உள்ளனர்.

வெளியான அன்றே 10 மில்லியன் பேர் சந்தாதாரர்களாக இணைந்தனர்- சாதனை படைத்த டிஸ்னி+
டிஸ்னி+
  • News18
  • Last Updated: November 14, 2019, 4:00 PM IST
  • Share this:
சர்வதேச அளவில் நெட்ஃப்ளிக்ஸ், ஆப்பிள் டிவி ஆகியவற்றுக்குப் போட்டியாக டிஸ்னி+ ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் வெளியாகி உள்ளது.

டிஸ்னி+ வெளியான அன்றே சுமார் 10 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக டிஸ்னி+ அறிவித்துள்ளது. மேலும், டிஸ்னி+ மொபைல் ஆப் மட்டும் சுமார் 3.2 மில்லியன் டவுன்லோடுகளைப் பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளதாக டிஸ்னி+ தெரிவித்துள்ளது.

முதல் நாளில் டிஸ்னி+ தளத்தில் சந்தாதாரர்கள் 1.3 மில்லியன் மணி நேரங்கள் செலவிட்டு உள்ளனர். இதே 24 மணி நேரத்தில் பல புதுவித ப்ராஜெக்ட்களை கையெழுத்திட்டு ஒப்பந்தமிட்டுள்ளதாகவும் டிஸ்னி+ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக டிஸ்னி+ சேவை அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து நாடுகளில் வெளியாகி உள்ளது.


இதைத்தொடந்து ஐக்கிய நாடுகள், பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் வெளியாக உள்ளது. முற்றிலும் ஒரிஜினல் தயாரிப்புகளை மட்டும் வெளியிட முடிவெடுத்துள்ளது டிஸ்னி+.

மேலும் பார்க்க: சாம்சங் ’M’ சீரிஸின் கீழ் புதியதொரு ஸ்மார்ட்போன்... வெளியீடு எப்போது..?
First published: November 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...