ஃபாக்ஸ் ஸ்டாரை கைப்பற்றியது டிஸ்னி..!- சர்வதேச அந்தஸ்து பெற்ற ஹாட்ஸ்டார்

அதிக சந்தாதாரர்களை ஈர்த்து நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஆப்பிள் ப்ளஸ் ஆகியவற்றுக்கு சவால் விடுகிறது டிஸ்னி.

ஃபாக்ஸ் ஸ்டாரை கைப்பற்றியது டிஸ்னி..!- சர்வதேச அந்தஸ்து பெற்ற ஹாட்ஸ்டார்
ஹாட்ஸ்டார்
  • News18
  • Last Updated: October 11, 2019, 5:50 PM IST
  • Share this:
ஹாட்ஸ்டார் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கியுள்ளது.

21st Century Fox Inc. நிறுவனத்தை வாங்கியதன் மூலம் ஸ்டார் இந்தியா, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஹாட்ஸ்டார் ஆகியன வால்ட் டிஸ்னி உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுள் ஒன்றான ஹாட்ஸ்டார் டிஸ்னியிடம் சென்றதால் தற்போது சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது.

தெற்காசிய மக்கள் அதிகம் புலம்பெயர்ந்துள்ள அமெரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய நாடுகளில் ஹாட்ஸ்டார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக சிங்கப்பூர் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் அனைத்துக்கும் ஹாட்ஸ்டார் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மாநில வாரியான மொழிகளைச் சார்ந்த நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளன.


அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சுமார் 2 லட்சம் பேர் ஸ்டார் டிவி சேனல்களை தொலைக்காட்சியின் வாயிலாக மாதம் 25 அமெரிக்க டாலர் செலுத்தி பார்த்து வருகின்றனர். இதை ஹாட்ஸ்டார் மூலம் வெறும் 10 டாலருக்குக் கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக சந்தாதாரர்களை ஈர்த்து நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஆப்பிள் ப்ளஸ் ஆகியவற்றுக்கு சவால் விடுகிறது டிஸ்னி.

மேலும் பார்க்க: சாம்சங் ஆண்டுவிழா கொண்டாட்டம்...ஸ்மார்ட்போன்களுக்கு 60% வரை தள்ளுபடி..!

சென்னை வந்தடைந்த சீன அதிபரின் பிரத்யேக கார்..!
First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading