இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் OTT சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஒன்று. வால்ட் டிஸ்னியின் நிறுவனங்களில் ஒன்றான டிஸ்னி ஹாட்ஸ்டார் சேவை, ஜூலை 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் நிலவரப்படி, புதிதாக 83,00,000 சந்தாதாரர்களை சேர்த்துள்ளது என்ற தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் இந்தியா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளில் மட்டுமே 5.8 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
டிஸ்னி ஹாட்ஸ்டார் 2024 ஆண்டுக்குள் 8 கோடி சந்தாதாரர்களை பெறக்கூடும் என்று வால்ட் டிஸ்னியின் அப்டேட் செய்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் சாபெக், “இந்தியாவில் ஐசிசி மற்றும் பிசிசிஐ கிரிக்கெட் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகள் சார்ந்த விற்பனை செயல்பாடுகள் முடிவடைந்தவுடன், இந்த இலக்கை இன்னும் தெளிவாகக் கூற முடியும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சந்தாதாரர்கள் அதிகரித்து வரும் நிலையில், டிஸ்னி ஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை வால்ட் டிஸ்னி நிறுவனம் வழங்க இருக்கிறது.
“ஒரு சில ஒழுக்கம் சார்ந்த முடிவுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். எனவே அதன் அடிப்படையில் இந்தியன் பிரீமியர் லீக் டிஜிட்டல் உரிமத்தை நாங்கள் தொடரப் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தோம். மேலும், அந்த ஒழுங்குமுறையின் அடிப்படையிலேயே இந்த உரிமத்தை தொடரலாமா வேண்டாமா என்று நாங்கள் தற்பொழுது ஆய்வு செய்து வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் இருக்கும் ஹாட்ஸ்டாரின் லீனியர் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து IPL போட்டிகளை ஒளிபரப்பு செய்வதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் சமீபத்திய சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். ஏற்கனவே டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 70 க்கும் மேற்பட்ட சேனல்களின் போர்ட்ஃபோலியோ உள்ளது. இதன் மூலம், 90 சதவீதம் வரை பே டிவி மற்றும் சாட்டிலைட் டிவி வழியே எளிதாக அணுக முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
Also Read : முன்னணி மியூசிக் செயலிகளுக்கு போட்டியாகக் களமிறங்கும் டிக்டாக் மியூசிக்.!
இந்தியாவைப் பொறுத்தவரை, Pay TV விநியோகம் செய்வது, விளம்பரத்துக்கான செலவினங்களை அதிகரிப்பதோடு, நுகர்வோர் செலவு செய்யும் திறனையும் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் வணிகம் உறுதியாக வளர்வதுடன், நாட்டின் GDP வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமே புதிய லீனியர் சேனல்களை அறிமுகம் செய்ய திட்டமிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் மட்டும் 83 லட்சம் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், உலக அளவில் டிஸ்னி OTT தளத்திற்கு சப்ஸ்கிரைப் செய்தவர்களின் எண்ணிக்கை 15 கோடியாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாத காலத்திலேயே கிட்டத்தட்ட 1.4 கோடி புதிய சந்தாதாரர்களும் இணைந்துள்ளனர்.
Also Read : Whatsapp-ன் புதிய பாதுகாப்பு அம்சம்... மோசடி நபர்களிடமிருந்து காப்பாற்ற புது ஐடியா
இதைத் தொடர்ந்து, டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் விலையும் அதிகரிக்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது. விளம்பரம் மற்றும் விளம்பரம் இல்லாத சந்தா என்று இரண்டு வகைகளில் விலையின் தாக்கம் இருக்கும். இந்தியாவில், இந்த விலையேற்றம் பற்றி முழு விவரங்கள் இன்னும் தெரியவில்லை. மேலும், இந்த ஆண்டின் இறுதியில் இது செயல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.