ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இரண்டாம் காலாண்டில் 36 லட்சம் கோடி பரிவர்த்தனை - டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா முன்னணி.!

இரண்டாம் காலாண்டில் 36 லட்சம் கோடி பரிவர்த்தனை - டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா முன்னணி.!

டிஜிட்டல் பரிவர்த்தனை

டிஜிட்டல் பரிவர்த்தனை

Digital Transaction | இந்தியா மட்டுமல்லாமல் அரேபிய நாடுகள், சிங்கப்பூர், ஃபிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் யூபிஐ பரிவர்த்தனைகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதையும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்டெர்நெட் பேங்கிங் முதல் UPI வரை, பலவிதமான டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் முறை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏடிஎம் அல்லது வங்கியில் இருந்து பணம் எடுத்து ரொக்கமாக செலவு செய்வது கணிசமாக குறைந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 2022 ஆம் ஆண்டின், இரண்டாம் காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 36 லட்சம் கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது என்பது சமீபத்திய அறிக்கையில் வெளியாகியுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனை அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை என்று வரும் பொழுது, இணையம் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான பரிவர்த்தனைங்களும் அதில் அடங்கும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் வாலெட்கள், ப்ரீபெய்ட் கார்டுகள், யுபிஐ இன்டெர்நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளும் இதில் அடங்கும்.

UPI பரிவர்த்தனைகளில் மட்டுமே, Q2வில் 17.4 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதன் மதிப்பு, 30.4 ட்ரில்லியன் ஆகும்.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில், Q2வில் 1 பில்லியன் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்த பரிவர்த்தனைகளில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில், 688.65 மில்லியன் ஆகவும், மற்றும் 3.28 டிரில்லியன் ஆகவும் பதிவாகியுள்ளது.

மொத்த பரிவர்த்தனைகளில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில், 973.12 மில்லியன் ஆகவும், மற்றும் 1.91 டிரில்லியன் ஆகவும் பதிவாகியுள்ளது.

UPI பரிவர்த்தனைகளில் ஒரு நபர் மற்றொரு நபருக்கு செலுத்தப்படும் தொகை மற்றும் ஒரு நபர் மற்றொரு வணிகர் அல்லது வணிகத்துக்கு செலுத்தப்படும் தொகை ஆகிய இரண்டுமே அடங்கும். ஆன்லைனில், கார்டுகள் மற்றும் இணைய வங்கி வழியே பரிவர்த்தனைகள் என்பது புதியது அல்ல. ஆனால், UPI பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.

Also Read : ஆன்லைன் கேமிங்கிற்கான புதிய சட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கு அரசாங்கக் குழு பரிந்துரை

UPI P2P / Person to Person – ஒரு நபர் மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது

UPI P2M / Person to Merchant – ஒரு நபர் மற்றொரு வணிகருக்கு பணம் செலுத்துவது

வேர்ல்ட்வைட் இன், இந்தியா டிஜிட்டல் பேமென்ட் அறிக்கையில் மொத்த பரிவர்த்தனைகளில் UPI P2P 49% என்றும், பரிவர்த்தனைகளின் மதிப்பில், UPI P2M 67 சதவீதம். தனிநபர் மற்றும் வணிகர்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட UPI பரிவர்த்தனைகள் கணிசமாக உள்ளன. மேலும், தனிநபர் வணிகர்களுக்கு பணம் செலுத்தும் பொழுது யூபிஐ-பேமென்ட் முறையைத் தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கூறியுள்ளது.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழியாக மேற்கொள்ளப்பட்ட பேமண்ட்களில் மொத்த பரிவர்த்தனையில் 8% சதவீதமாகவும், பரிவர்த்தனையின் மதிப்பில் 14% ஆகவும் இருக்கிறது என்பதையும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

Also Read : e-KYC மோசடிகளுக்கு பலியாகி விடாதீர்கள்..! தனது மில்லியன் கணக்கான யூஸர்களை எச்சரித்துள்ள ஜியோ  

பெரும்பாலானவர்கள் UPIஐ பயன்படுத்தியே ஆன்லைனில் எந்தவிதமான பேமண்ட்டுகளையும் செலுத்த விரும்புகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் கிரெடிட் காடுகள் பயன்படுத்துவதும் கணிசமாக அதிகரித்து வருகிறது. UPIல் மொத்தம் 346 பார்ட்னர் வங்கிகள் இணைந்துள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் அரேபிய நாடுகள், சிங்கப்பூர், ஃபிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் யூபிஐ பரிவர்த்தனைகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதையும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Digital Transaction, India, Online Transaction, Technology, UPI