Home /News /technology /

MyGov ஹெல்ப் டெஸ்க் வழியே பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸை இந்திய வாட்ஸ்அப் யூஸர்கள் இனி அணுகலாம்!

MyGov ஹெல்ப் டெஸ்க் வழியே பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸை இந்திய வாட்ஸ்அப் யூஸர்கள் இனி அணுகலாம்!

வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப்

WhatsApp MyGov Helpdesk | சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள இன்ஸ்டன்ட் மெசேஜிங் சர்விஸ் பிளாட்ஃபார்மான வாட்ஸ்அப், நம் நாட்டிலும் கோடிக்கணக்கான யூஸர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மெட்டாவுக்குச் சொந்தமான மெசேஜிங் சர்விஸான வாட்ஸ்அப் இப்போது பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் டிஜிலாக்கர் சர்விஸில் நீங்கள் அப்லோட் செய்து உள்ள பள்ளிபடிப்பு தொடர்பான மார்க் ஷீட்கள் போன்ற முக்கிய ஐடி டாக்குமெண்ட்ஸ்களை அதாவது அடையாள ஆவணங்களை டவுன்லோட் செய்ய அனுமதிக்கிறது.

ஆம், டிஜிலாக்கர் சேவைகள் வாட்ஸ்அப்பில் வருகிறது. அரசு வழங்க கூடிய சேவைகளை அணுகுவதற்கான ஒரு முயற்சியாக, டிஜிலாக்கர் சர்விஸை அணுக மக்கள் இப்போது வாட்ஸ்அப்பில் MyGov ஹெல்ப் டெஸ்க்கைப் பயன்படுத்த முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக இப்போது வாட்ஸ்அப் MyGov சாட்போட் சர்விஸை (chatbot service) பெறுகிறது. இந்த புதிய வாட்ஸ்அப் யூஸர்கள், தங்களது முக்கிய ஆவணங்களை டிஜிலாக்கர் ஆப் அல்லது வெப்சைட்டிற்கு செல்லாமல் தங்கள் ஸ்மார்ட் போனிலேயே மீட்டெடுக்க அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப்பில் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்ற பல ஆவணங்களைப் பதிவிறக்குவதோடு மட்டுமின்றி டிஜிலாக்கர் அக்கவுண்ட்டை உருவாக்குதல் மற்றும் அங்கீகரிப்பதும் இந்த வசதியில் அடங்கும். அதாவது தேவைப்பட்டால் புதிய DigiLocker அக்கவுண்ட்டை உருவாக்கவும் சாட்போட் மக்களுக்கு உதவும்.

தெரியாதவர்களுக்காக.. இந்திய குடிமக்கள் தங்கள் அசல் ஆவணங்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அணுக அனுமதிக்கிறது டிஜிலாக்கர். இதில் அப்லோட் செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட ஆவணங்கள் அசல் ஆவணங்களுக்கு இணையான சட்டப்பூர்வமானவை. இதுகுறித்து கூறியுள்ள MyGov சர்விஸின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங், MyGov Helpdesk-ல் டிஜிலாக்கர் சர்விஸ்களை வழங்குவது என்பது படிப்படியான முன்னேற்றம் மற்றும் எளிதாக அணுகக்கூடிய பிளாட்ஃபார்மான வாட்ஸ்அப்பின் வழியே அத்தியாவசிய சேவைகளுக்கான எளிமையான அணுகலை மக்களுக்கு வழங்குவதற்கான ஒரு முக்கியபடி என்று குறிப்பிட்டு உள்ளார்.



100 மில்லியனுக்கும் அதிகமான யூஸர்கள் டிஜிலாக்கரில் பதிவு செய்துள்ளதாகவும், சுமார் 5 பில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய போக்குவரத்து அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள டிஜிலாக்கர், நாட்டில் எங்கும் உள்ள போக்குவரத்து போலீசாருக்கு டிரைவிங் லைசென்ஸ், இரு சக்கர வாகன காப்பீடு அல்லது RC ஆகியவற்றின் டிஜிட்டல் காப்பிகளை காட்ட மக்களை அனுமதிக்கிறது. அதே போல MyGov Helpdesk என்பது வாட்ஸ்அப்பில் பொது சேவைகளுக்கான இந்திய அரசின் ஆன்லைன் சாட்போட்/ஹெல்ப் டெஸ்க் ஆகும்.

Also Read : வாட்ஸ் அப் அக்கவுண்ட்கள் திருட கூடும் - ஜாக்கிரதை!

இது கடந்த மார்ச் 2020-ல் தொடங்கப்பட்டது. கொரோனா தீவிரமாக இருந்த போது வாட்ஸ்அப்பில் இது MyGov Corona Helpdesk என அறியப்பட்டது. தடுப்பூசிக்கான புக்கிங்ஸ் மற்றும் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்க இது உதவியது. தற்போது Digilocker போன்ற புதிய அம்சங்களுடன், WhatsApp இல் உள்ள MyGov சாட்போட், குடிமக்களுக்கு டிஜிட்டல் உள்ளடக்கிய ஆதாரங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை அணுகுவதற்கு ஒரு விரிவான நிர்வாக ஆதரவு அமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் MyGov ஹெல்ப் டெஸ்க் என்ன சேவைகளை வழங்குகிறது..

பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC), இரு சக்கர வாகன இன்சூரன்ஸ் பாலிசி, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இன்சூரன்ஸ் பாலிசி ஆவணம் (டிஜிலாக்கரில் ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாதவை கிடைக்கும்).

Also Read : உங்கள் விவரங்கள் அனைத்தையும் சேமிக்கும் வாட்ஸ்அப் - அக்கவுண்ட் இன்ஃபோ கேட்டு வாங்குவது எப்படி?

வாட்ஸ்அப்பில் MyGov ஹெல்ப் டெஸ்க்கை எப்படி பயன்படுத்துவது?

* வாட்ஸ்அப்பை ஓபன் செய்து +91- 9013151515 என்ற நம்பருக்கு “DigiLocker” என்று ஒரு மெசேஜை அனுப்பவும்.

* DigiLocker அக்கவுண்ட்டை வாட்ஸ்அப் மூலம் அணுக, உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி sign in செய்ய வேண்டும். இது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் அங்கீகரிக்கப்படும்.

* DigiLocker அக்கவுண்ட்டை உருவாக்க அல்லது அங்கீகரிப்பதற்கான ஆப்ஷன்களை காண்பீர்கள்.

* ஏற்கனவே DigiLocker அக்கவுண்ட் கொண்டவர் என்றால் அங்கீகரிக்கப்பட்டதும், அது DigiLocker-ல் உள்ள ஆவணங்களை பற்றி யூஸருக்கு தெரிவிக்கும். ஆவணம் தொடர்புடைய மொபைல் எண்ணை ஷேர் செய்த பிறகு, யூஸர்கள் DigiLocker -ல் உள்ள தங்களது எந்த ஆவணத்தையும் அணுகலாம். ஆவணங்களை பதிவிறக்க மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும். இதனை தொடர்ந்து ஒரு குடிமகன் DigiLocker -ல் இருக்கும் தனது ஆவணத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Published by:Selvi M
First published:

Tags: India, WhatsApp

அடுத்த செய்தி