செல்போன் திருட சிலர் இருக்கையில்... நம்மைத் திருடும் செல்போன்கள்!
மொத்தத்தில் நேரத்தை மிச்சப் படுத்துவதற்காக கிடைத்த செல்போன் மிச்சமிருக்கும் மொத்த நேரத்தையும் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை

சிந்து
- News18
- Last Updated: November 10, 2020, 5:06 PM IST
நவீன உலகில் விரல்நுனியில் உலகத்தையே கொண்டு வந்து சேர்க்கிறது செல்போன். எங்கேயும் எதற்கும் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. அந்த அளவுக்கு நேரத்தை மிச்சப்படுத்தி தந்த செல்போன்கள் நமக்கான பயனுள்ள நேரத்தை மிச்சப்படுத்தி இருக்கிறதா ?
காலையில் கண் விழிப்பது முதல் இரவில் தூங்குவது வரையிலும் செல்போன் என்பது அனைவரது வாழ்விலும் மிக முக்கிய அங்கமாகிப்போனது. இதனால் மின்சார கட்டணம், பள்ளிக் கட்டணம், செல்போன் கட்டணம், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்திற்கும் நாம் நேரடியாகச் சென்று வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அனைத்துமே நினைத்த இடத்தில் அடுத்த நொடியில் முடிந்து விடுகிறது. ஆனால் அவ்வளவு நேரத்தை மிச்சப்படுத்தி தரும் செல்போன்கள் மீதமிருக்கிற நேரத்தை மொத்தமாக எடுத்துக் கொள்கிறதா என்பது தான் மிகப்பெரிய கேள்வி. இது குறித்து பொதுமக்கள் சிலரிடம் பேசியபோது, பத்து நிமிடத்திற்கு ஒருமுறை செல்போனை பார்க்காவிட்டால் பைத்தியம் பிடிக்கிறது, 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் பத்து மணி நேரமாவது செல்போனில் தான் மூழ்கி இருப்பதாக சொல்கிறார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சிந்து.
பல விஷயங்களுக்காக பில் கட்ட நான் செல்வது எப்போதாவது ஒருமுறைதான், அங்கே அரை மணி நேரம் காத்திருந்து கட்டிவிட்டு வந்து விடுகிறோம். ஆனால் வாழ்வின் பெரும்பகுதியை செல்போன் பறித்துக்கொள்கிறது என்கிறார்.
Also read... Flipkart Big Diwali Sale 2020 | அட்டகாசமான ஆஃபர் விலையில் போன், லேப்டாப், டிவிக்கள்.."செல்போன் என்பது மிகப்பெரிய தலைவலியாக மாறிவிட்டது சிறியவர்கள், இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களாக இருக்கும் நாங்கலும் இந்த செல்போனிலேயே காலத்தைக் கழித்தால் மன அழுத்தமும் கண் பார்வை குறைபாடு வருகிறது" என்கிறார் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி ஜனார்த்தனன்.
"குழந்தைகள் செல்போன் கேட்டு அடம் பிடித்தால் கோபம் வருகிறது, ஆனால் நானே குறைந்தது 12 மணி நேரத்திற்கு மேல் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என செல்போனில் மூழ்கிப்போகிறேன், என் அருகில் புருஷன் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, செல்போன் இல்லாமல் என்னால் வாழமுடியாது" என்கிறார் இல்லத்தரசியான ராதா. "இதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் என்னால் வர முடியவில்லை" என்பது அவரது வேதனையாக உள்ளது.
மொத்தத்தில் நேரத்தை மிச்சப் படுத்துவதற்காக கிடைத்த செல்போன் மிச்சமிருக்கும் மொத்த நேரத்தையும் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனால் உறவுகளை தொலைத்து, மனித உணர்வுகளை தொலைத்து நிற்போர் ஏராளம். இந்த தலைமுறைக்கே இந்த நிலை என்றால் இனி வரும் தலைமுறை என்னவாகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
காலையில் கண் விழிப்பது முதல் இரவில் தூங்குவது வரையிலும் செல்போன் என்பது அனைவரது வாழ்விலும் மிக முக்கிய அங்கமாகிப்போனது. இதனால் மின்சார கட்டணம், பள்ளிக் கட்டணம், செல்போன் கட்டணம், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்திற்கும் நாம் நேரடியாகச் சென்று வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அனைத்துமே நினைத்த இடத்தில் அடுத்த நொடியில் முடிந்து விடுகிறது. ஆனால் அவ்வளவு நேரத்தை மிச்சப்படுத்தி தரும் செல்போன்கள் மீதமிருக்கிற நேரத்தை மொத்தமாக எடுத்துக் கொள்கிறதா என்பது தான் மிகப்பெரிய கேள்வி.