சீனாவிற்கு மக்களின் தரவுகளைக் கொடுப்பதாகக் குற்றச்சாட்டு - ஹுவாய் நிறுவனம் மறுப்பு

சீன அரசாங்கத்திடம் தரவுகளை ஒப்படைப்பதை விட நிறுவனத்தை மூடி விடுவோம் என ஹூவாய் நிறுவனத்தின் இங்கிலாந்து துணைத்தலைவர் ஜெர்மி தாம்சன் கூறியுள்ளார்.

  • Share this:
ஹூவாய் நிறுவனம் தாங்கள் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் நாடுகளின் தரவுகளை சீனாவிற்கு வழங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து 5ஜி தொலைத்தொடர்பு வசதிகளை மேற்கொள்ள ஹுவாய் நிறுவனத்திற்கு இங்கிலாந்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்கப்பட்டதை அடுத்து அந்நிறுவனம் இங்கிலாந்தில் பணிகளைத் தொடங்கவுள்ளது. இதையொட்டி பேசிய ஜெர்மி தாம்சன் 170 நாடுகளில் தங்களது நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் நம்பிக்கையை இழந்து விட்டால் நிறுவனம் ஒரே இரவில் சரிந்து விடும் என்றும் கூறியுள்ளார்.

ஹூவாய் நிறுவனம் சீனாவிற்கு தரவுகளை தருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த அவர், சீன அரசாங்கத்திடம் தரவுகளை ஒப்படைப்பதை விட நிறுவனத்தை மூடி விடுவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பிரிட்டனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.க்கள் ஹுவாய் ஒரு சீன நிறுவனம் என்பதால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also see:
First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading