ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

2020-ம் ஆண்டில் அச்சுறுத்தும் விதமாக பூமிக்கு மிக அருகில் பறந்த சிறுகோள்களின் விவரம்..

2020-ம் ஆண்டில் அச்சுறுத்தும் விதமாக பூமிக்கு மிக அருகில் பறந்த சிறுகோள்களின் விவரம்..

2020 ஆம் ஆண்டில் மட்டும் பூமிக்கு மிக அருகில்  7 சிறுகோள்கள் பறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் இதோ..

2020 ஆம் ஆண்டில் மட்டும் பூமிக்கு மிக அருகில் 7 சிறுகோள்கள் பறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் இதோ..

2020 ஆம் ஆண்டில் மட்டும் பூமிக்கு மிக அருகில் 7 சிறுகோள்கள் பறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் இதோ..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சூரியனைச் சுற்றி வரும் சிறிய பாறைகள் தான் சிறுகோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை அளவில் சிறியதாக இருந்தாலும், டைனோசர்கள் ஏற்படுத்தும் அழிவைப் போல பூமியில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை. இதுபோன்ற பேரழிவை நாம் இன்னும் எதிர்கொள்ளவில்லை என்றாலும், சில பாறைகள் பூமிக்கு அருகில் வந்ததால் இந்த ஆண்டு பேரழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிகழ்ந்துள்ளன. 

2020-ம் ஆண்டு ஒரு அபோகாலிப்டிக் ஆண்டாக உணர்ந்ததிலிருந்து, பூமியின் மேல் பறக்கும் இந்த விண் கற்களின் அதிர்வெண் சற்று அதிகமாக இருந்ததை போல தோன்றியுள்ளன. மேலும் இந்த ஆண்டு மட்டும் பூமிக்கு மிக அருகில் 7 சிறுகோள்கள் பறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றால் பூமிக்கு இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்பதும் ஆறுதலான விஷயம். அந்த வகையில் பூமிக்கு அருகில் பறந்த சிறுகோள்களின் விவரங்களை காண்போம்.

2020 பிஎக்ஸ் 12: 

இந்த பைனரி சிறுகோள் பிப்ரவரி 3ம் தேதி பூமியிலிருந்து 4.36 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், வினாடிக்கு 25.3 கிலோமீட்டர் வேகத்தில் பறந்ததது என்று தேசிய வானியல் மற்றும்அயனோஸ்பியர் சென்டர் வலைத்தளத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைனரி சிறுகோள்கள் ஒரு செயற்கைக்கோளை நெருக்கமாக சுற்றி வருகின்றன. இவை பூமியில் இருந்து வெறும் 165 மீட்டர் அளவு இருப்பதால் அபாயகரமானதாகக் கருதப்பட்டது.

1998 ஓஆர்2 :

கடந்த ஏப்ரல் 29ம் தேதி அன்று, 2 கிலோமீட்டர் அகலமுள்ள இந்த சிறுகோள் பூமியை 6.3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், வினாடிக்கு 8.7 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றது. நாசாவின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு அதன் சுற்றுப்பாதையில் சிறிய மாற்றங்கள் ஏற்படும் என்பதால், 1998 OR2 சிறுகோள் எதிர்காலத்தில் நமது கிரகத்திற்கு ஒரு பிரச்சினையாக மாறும் என தெரிவித்துள்ளது.

136795 (1997 பிக்யூ) : 

இந்த சிறுகோள் முதன்முதலில் 1997ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கிலோமீட்டர் அகலமுள்ள சிறுகோள் மே 21ம் தேதி அன்று 6,156,716 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மேல் பறந்ததாக விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டது. இதன் அளவு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலத்தின் அளவுடன் ஒத்திருந்தது. இந்த அபாயகரமான பாறை 2050ம் ஆண்டு மே 31ம் தேதி வரை பூமிக்கு அருகில் வராது எனவும் worldஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2020 எஸ்.டபிள்யூ:

5 முதல் 10 மீட்டர் அகலம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்ட இந்த சிறுகோள் ஒரு ஸ்கூல் பஸ் அளவில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் செப்டம்பர் 14ம் தேதி அன்று பூமியைக் கடந்த சென்றது. நாசா ஜெட் உந்துவிசை ஆய்வகத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த மிதக்கும் பாறை 2041ம் ஆண்டில் மீண்டும் பூமிக்கு அருகில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆர்.கே 2 

36 முதல் 81 மீட்டர் நீளம் உள்ள இந்த சிறுகோள், போயிங் 747 விமானத்தின் அளவை ஒத்தது. இந்த சிறுகோள் அக்டோபர் 7ம் தேதி வினாடிக்கு 6.68 கிலோமீட்டர் வேகத்திலும் 38,27,797.34 கிலோமீட்டர் தூரத்திலும் பூமியைக் கடந்து சென்றது. டெய்லி ஸ்டார் அறிக்கையின்படி, ஆகஸ்ட் 2027ம் ஆண்டு வரை இது பூமியின் மேல் மீண்டும் பறக்காது என்று கூறப்படுகிறது.

2020 எஸ்.டி 1 & 2020 டிபி 9

நவம்பர் 14ம் தேதி அன்று, இந்த இரண்டு சிறுகோள்களும் பாதுகாப்பான தூரத்தில் பூமியை கடந்து சென்றன. 2020 எஸ்.டி 1 என்பது 175 மீட்டர் அகலம் கொண்ட சிறுகோள் ஆகும். இது குதுப் மினாரை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இது பூமியை 7.3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து சென்றது. அதேபோல 2020 டிபி9, 30 மீட்டர் அகலம் கொண்டதாகும். மேலும் இது 5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Asteroid