Home /News /technology /

இந்தியாவில் 16 கோடிக்கு மேல் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் – ஆய்வு அறிக்கை

இந்தியாவில் 16 கோடிக்கு மேல் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் – ஆய்வு அறிக்கை

 ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்கள்

கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் ஷிப்மெண்ட் பற்றிய ஆய்வு மேற்கொண்டது.

கோவிட் ஏற்படுத்திய தாக்கம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்னும்  முழுவதுமாக நீங்காத நிலை நீடித்து வருகிறது. ஊரடங்கு நெருக்கடி மற்றும் தேவைக் காரணமாக ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். அலுவலகம் மட்டுமின்றி மாணவர்களும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் கடந்த ஆண்டு இந்தியர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைப்பற்றிய விவரங்கள் இங்கே.

பல துறைகள் கோவிட் பாதிப்பால் வீழ்ச்சி அடைந்தாலும் மொபைல் தயாரிப்பாளர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளில் மிகப்பெரிய லாபம் ஏற்பட்டுள்ளது என்றே கூறும் வகையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த வாரம் கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் ஷிப்மெண்ட் பற்றிய ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் கடந்த 12 மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியச் சந்தைகளில் ஸ்மார்ட்போன் ஷிப்மெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் மட்டுமே கடந்த 12 மாதங்களில் அதாவது 2021 ஆம் ஆண்டில் 16.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகி உள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வு அறிக்கை எவ்வளவு மொபைல் சாதனங்கள் ஷிப்மெண்ட் செய்யப்பட்டது என்பதை மட்டும் குறிக்கவில்லை.‌ ஒட்டுமொத்தமாக சில ஆண்டுகளில் மொபைல் தொழில்துறை எவ்வளவு வருமானத்தை ஈட்டியுள்ளது என்பதைப் பற்றிய தகவல்களையும் தெரிவித்துள்ளது. கோவிட் பாதிப்பு இருந்தாலும் சரி ஸ்மார்ட்போன்களும் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதையும் இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..

ஸ்மார்ட் போன் மற்றும் 5ஜி ஸ்மார்ட் போன்களுக்கான டிமாண்ட் அதிகரித்து ஷிப் செய்யப்பட்டுள்ள நிலையில், ஃபீச்சர் போன்களுக்கான தேவையும் பயன்பாடும் கடந்த ஆண்டு குறைந்து இருப்பதையும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அதே போல, ஒவ்வொரு ஆண்டும் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இதன்விற்பனை 555 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதைக் கணக்கில் கொண்டுதான் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களுடைய 5ஜி ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் மேலும் பல வகையான 5ஜி ஸ்மார்ட்போன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ரெட்மி, மி ஸ்மார்ட்போனின் 10 மாடல்களுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.. சியோமி நிறுவனம் அறிவிப்பு!

அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் சியோமி நிறுவனத்தின் போன்கள் முன்னிலையில் இருக்கிறது. சியோமியின் விற்பனையில் 258 சதவிகிதம் அதிகரித்துள்ளது மற்றும் இந்தப் போன்களின் விலை குறைந்த பட்சம் 30,000 ரூபாய் ஆகும். இரண்டாவது இடத்தில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் பெரிய அளவுக்கு இல்லை. மூன்றாவது இடத்தில் ரியல்மி பிராண்டு போன்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளது தெரிகிறது. ரியல்மி நிறுவனத்தின் போன்கள விற்பனையில் 20% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை தவிர ஆப்பிள் நிறுவனமும் கடந்த ஆண்டு கணிசமான போன்களை விற்பனை செய்துள்ளது‌,

இதையும் படியுங்கள் : முதல்முறையாக பேஸ்புக் நிறுவனத்துக்கு இப்படி ஒரு சரிவு!!

5ஜி ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை ஆன்லைன் மட்டுமல்லாமல் ஆஃப்லைன் பயன்பாட்டிலும் விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் முன்னிலையில் இருக்கிறது. பிரீமியம் பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனம் சந்தையில் முன்னிலையில் வகிக்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு 38 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டி உள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Mobile phone, Smartphone

அடுத்த செய்தி