நீங்கள் உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை பொறுத்து உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு!

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளக்கூடாத விஷயங்களில் நம்பிக்கை துரோகமும் ஒன்று. நாம் மிகவும் நம்பிய நண்பரோ, காதலியோ நமக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டாங்கனா, அதில் இருந்து மீண்டு வருவது என்பது மறுவாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கு சமம் என்று கூறலாம். ஒருவேளை அப்படியான ஒரு சூழலை நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதில் இருந்து மீண்டு வருவதற்கு இந்த கட்டுரை உங்களுக்கு நிச்சயமாக பயன்படும்.

சமீப காலமாக மக்கள் எந்த ஒரு வேலைகளுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஒருவேளை அந்த தொழில்நுட்பங்கள் வேலை செய்யவில்லை என்றால் ஒருவர் அதிகபடியான மனஅழுத்தத்திற்கு (Stres) ஆளாகிறார் என்பதை பற்றி யோசித்தது உண்டா? பணிநேரத்தில் திடீரென உங்கள் வைஃபை வேலை செய்யாமல் போகும் போது, உங்கள் கடவுச்சொற்கள் இயங்காமல் இருக்கும் போது, உங்கள் மடிக்கணினி திடீரென செயலிழத்தல், உங்கள் கணினியில் வைத்திருக்கும் பைல்கள் திடீரென மறைந்து போவது போன்ற சாத்தியக்கூறுகள் ஒருவரின் உடலில் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

  • Share this:
தொழில்நுட்பம் நம் மனநிலையை எந்த அளவு சேதப்படுத்தும் என்பதை விளக்க ஒரு புதிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கணினி நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ் (Dell Technologies), நரம்பியல் அறிவியல் நிறுவனமான EMOTIV (neuroscience firm EMOTIV) உடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களை மோசமான தொழில்நுட்ப அனுபவங்களில் ஈடுபடுத்தி, அவர்களின் எதிர்வினைகளை அளவிட பங்கேற்றவர்கள் மூளை அலைகளை சோதனை செய்தது.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் கணினியில் லாகின் செய்வதில் இடர்பாடு, மந்தமாக செயல்படும் அப்ளிகேஷன், ஸ்ப்ரெட்ஷீட் செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்தனர். இது குறித்து பேசிய EMOTIV-ன் தலைவர் ஆலிவர் ஒல்லியர் ,"மக்கள் மோசமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய தருணத்தில், அவர்களின் மன அழுத்தத்தின் அளவு இரட்டிப்பாவதை நாங்கள் கண்டோம். நான் அதைக் கண்டு சற்று ஆச்சரியப்பட்டேன். மன அழுத்தத்தின் அளவு அந்தளவுக்கு அதிகரிப்பது அரிதாகவே நடக்கிறது" எனக் கூறினார்.

இந்த மன அழுத்தத்தில் இருந்து ஒருவரால் விரைவில் மீள முடியாது. மன அமைதியை பெற ஒருவருக்கு அதிக நேரம் எடுக்கும். மோசமான தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான விரக்தி காரணமாக அன்றாட பணிச்சுமையை தொழிலாளர்கள் குறிப்பாக இளைய தொழிலாளர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதைப் பாதிக்கிறது. ஜெனரல் இசட் மற்றும் மில்லினியல் நடத்திய சோதனைகளில் மனஅழுத்தத்தின் விளைவாக ஒருவரின் உற்பத்தித்திறன் 30% குறைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து Dell வாடிக்கையாளர்களின் அனுபவ முயற்சிகளை வழிநடத்தும் சிலே மாண்ட்கோமெரி கூறியதாவது, "கணினியின் கல்வியறிவைப் தாண்டி அதன் மோசமான அனுபவங்கள் மக்களை பாதிக்கின்றன. இருப்பினும் இளைய சமுதாயத்தினர் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. ஏனெனில் தொழில்நுட்பம் எப்போதும் நன்கு செயல்பட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்." என்று கூறினார். EMOTIV நடத்திய சோதனையில் வெளியான முடிவுகள் சிறு அதிர்ச்சியை கொடுப்பது போல, கசப்பான தொழில்நுட்பத்தின் விளைவுகள் இரண்டு காரணங்களுக்காக மக்களின் மனஅழுத்தத்தை கடுமையானதாக மாற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

முதலாவது அதிகபட்ச விரக்தி, சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், தாங்கள் சோதிக்கப்படுவதை அறிந்திருந்தனர். இது அவர்களின் விரக்தியைக் குறைத்தது. இருப்பினும் உண்மையில் மக்கள் இதுபோன்ற சமயங்களில் அதிகபட்ச விரக்தியை எதிர்கொள்வர். இரண்டாவதாக, இந்த தொற்றுநோய் ஆண்டில், நமது அடிப்படை அளவு மன அழுத்தம் அதிகமாக உள்ளது. எனவே மோசமான தொழில்நுட்பத்தை அணுகும் போது மன அழுத்தத்தின் அளவு இரட்டிப்பாகிறது. மேலும் தொலைநிலை வேலை (Remote work) சூழல்களில் பணியாளர்களின் மனஅழுத்தம் அதிகமாக இருக்கும். ஏனெனில் ஒரு அலுவலகத்தில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை ஐடி சப்போர்ட் மூலம் சரிசெய்துகொள்ள முடியும்.

மேலும் படிக்க...லேண்ட்லைன் போன் பயன்படுத்துறீங்களா? இன்று நள்ளிரவு முதல் இது கட்டாயம்

அதுவே நீங்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் போது, உங்களிடம் இருப்பது உங்கள் அலுவலகத்தால் வழங்கப்பட்ட கணினி மட்டுமே, அப்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய ஐடி சப்போர்ட்டை அணுக முடியாது. அதனால்தான் நீங்கள் தொலைதூரத்தில் இருக்கும்போது, தொழில்நுட்பம் இயங்குவது மிகவும் முக்கியமானது. இந்த ஆய்வின் புதிய மூளை ஆராய்ச்சியில் இருந்து சில எடுத்துக்காட்டுகளும் பெறப்பட்டுள்ளன.

மோசமான தொழில்நுட்ப அமைப்புகளின் உணர்ச்சி ரீதியான தாக்கம், நிறுவனங்களின் உற்பத்தித்திறனை பாதிக்கும். எனவே, நீங்கள் உபயோகப்படுத்தும் தொழில்நுட்பங்கள் உங்கள் மனஅழுத்தத்தை வெகுவாக பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு, அவற்றை உபயோகிக்கும் வகையில் மேம்படுத்துவது அவசியம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: