முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / செகண்ட் ஹேண்ட் மொபைல்களுக்கான தேவை அதிகரிப்பு - 15% வளர்ச்சி கண்ட Refurbished smartphone மார்க்கெட்!

செகண்ட் ஹேண்ட் மொபைல்களுக்கான தேவை அதிகரிப்பு - 15% வளர்ச்சி கண்ட Refurbished smartphone மார்க்கெட்!

Second-Hand Smartphones

Second-Hand Smartphones

Second-Hand Smartphones | Refurbished மொபைல்கள் சில நேரங்களில் லேசான கீறல்களுடன் இருந்தாலும் நல்ல வொர்க்கிங் கண்டிஷனில் இருக்கும். இந்த புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களை சான்றளிக்கப்பட்ட ரீசெல்லரிடமிருந்து வாங்குவது முற்றிலும் பாதுகாப்பானது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே தங்களது பல தயாரிப்புகளை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வரும் நிலையில், பலரும் புதிய மொபைலை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று.

ஆனால் சமீப ஆண்டுகளாக உலகளவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களுக்கான (Refurbished smartphones) மார்க்கெட்டும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவது மிகவும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. Refurbished ஸ்மார்ட் போன்கள் என்பது முன்பு வேறு ஒருவருக்கு சொந்தமான மொபைல்கள் ரீசெல்லர் வாரன்டியுடன் வருவதாகும்.

Refurbished மொபைல்கள் சில நேரங்களில் லேசான கீறல்களுடன் இருந்தாலும் நல்ல வொர்க்கிங் கண்டிஷனில் இருக்கும். இந்த புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களை சான்றளிக்கப்பட்ட ரீசெல்லரிடமிருந்து வாங்குவது முற்றிலும் பாதுகாப்பானது. சுருக்கமாக சொன்னால் தனி நபரிடமிருந்து செகண்ட் ஹேண்ட்டாக மொபைல்களை வாங்காமல், ரீசெல்லர்களிடமிருந்து நல்ல கண்டிஷனில் உள்ள மொபைல்களை வாங்குவது ஆகும்.

இதனிடையே உலகளாவிய புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் போன் மார்க்கெட் (refurbished smartphone market) ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளன. புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் போன் மார்க்கெட் என்று வரும் போது வாடிக்கையாளர்கள் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஃபிளாக்ஷிப் போன்களை கருத்தில் கொள்கின்றனர்.

எனவே இந்த செகண்டரி மார்க்கெட்டில் அதிக வாடிக்கையாளர்கள் வாங்கும் பிராண்ட்டாக ஆப்பிள் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் சாம்சங் உள்ளது. இது தொடர்பாக தகவல்களை வெளியிட்டுள்ள Counterpoint Research-ன் ஒரு புதிய அறிக்கை, கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட போன்களின் சந்தையில் முன்னணியில் ஆப்பிள் நிறுவனம் இருந்ததை வெளிப்படுத்துகிறது. கூடுதலாக, 2021-ல் உலகளாவிய புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் சந்தை, 2021-ல் புதிய ஸ்மார்ட் போன் சந்தையை விட அதிக வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

Also Read : ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு தரமான 5ஜி போனை தேடுறீங்களா? 1 இல்ல 9 ஆப்ஷன்ஸ் இருக்கு!

புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக, அவற்றை வாங்க விரும்பும் பல வாடிக்கையாளர்கள் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற பிரபலமான பிராண்டுகளின் புதுப்பிக்கப்பட்ட மாடல்களை வாங்க முன்னுரிமை கொடுப்பதாக Counterpoint Research-ன்Global Refurb Smartphone Tracker வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. சீனா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வளரும் சந்தைகளில்ஆண்டுக்கு ஆண்டு refurbished smartphone-களின் விற்பனை அளவு அதிகரிப்பதை காண முடிவதாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட மூத்த ஆய்வாளர் க்ளென் கார்டோசா கூறி உள்ளார்.

ஆராய்ச்சி இயக்குனர் ஜெஃப் ஃபீல்ட்ஹாக் கூறுகையில், refurbished smartphone மார்க்கெட்டில் லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியவை முறையே 29 சதவீதம் மற்றும் 25 சதவீதம் என்ற மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களுடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. லாக்டவுன்கள் மற்றும் பிற விநியோகச் சங்கிலி சிக்கல்கள் காரணமாக 2020-ல் இந்த செகண்டரி மார்க்கெட்டில் விநியோக பற்றாக்குறை இருந்தன. ஆனால் 2021 பாதியில் நிலைமை சீரானது.

Also Read : இனி யூடியூப் ஷார்ட்ஸ் உருவாக்குவது இவ்வளவு சுலபமா ?

செகண்டரி மார்கெட்டானது புதிய வெர்ஷன்களை விட சுமார் 60 சதவீதம் குறைவான விலைகளில் மொபைல்களை வாங்க உதவுகிறது. ஃபிளாக்ஷிப் நிறுவன தயாரிப்புகளின் மேம்பட்ட நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் உயர் தரம் ஆகியவை செகண்டரி மார்கெட் வளர்ச்சியடைய மற்றொரு காரணம் என ஃபீல்டாக் கூறினார்.

First published:

Tags: Mobile phone, Smartphone, Technology