• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Dell சிறுவணிக சிறப்பு மாதம் - தொழில்முனைவோர்கள் சாமர்த்தியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது

Dell சிறுவணிக சிறப்பு மாதம் - தொழில்முனைவோர்கள் சாமர்த்தியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது

Dell Small Business Offer

Dell Small Business Offer

சிறிய வணிகங்கள் கொரோனா ஊரங்கால் வீழ்ந்துள்ள நிலையில், டெல் நிறுவனமானது சிறப்பு விற்பனை மாதத்தை தொடங்கியுள்ளது

  • Share this:
    கொரோனா வைரஸ் 2020ஆண்டை சாதாரணமாக அல்லாமல் முற்றிலும் மாற்றிவிட்டது. தேசிய ஊரடங்கினால், வணிக நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், பல சிறு வணிகங்கள் அவற்றின் எதிர்காலம் குறித்து யோசித்துக் கொண்டிருக்கின்றன. புதிய இயல்புநிலைக்கு நாம் மெதுவாகத் திரும்ப முயல, ​​இந்த வணிகங்கள் மீண்டு எழுவதற்கு, அவர்கள் ஒரு நிவாரணத்தை எதிர்பார்க்கின்றன. தொழில்நுட்ப உலகில், அதிர்ஷ்டவசமாக டெல் தனது வருடாந்திர ஸ்மால் பிசினஸ் மாதம் திட்டத்தின் மூலம் சிறு வணிகங்களை  காப்பாற்ற வந்துள்ளது.

    கோவிட்-19 தாக்கம்.

    இந்த கோவிட்-19  காலத்தில்,டெல்-இன் ஸ்மால் பிசினஸ் மாதம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் மடிக்கணினிகள் மற்றும் PCக்களை மீட்டெடுப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலம் மோசமாக பாதிக்கப்பட்ட வணிகப் பிரிவுகளில் ஒன்றிற்கு இது உதவுகிறது.இது சிறு வணிகங்கள் மீண்டும் செழிக்க உதவும்.

    இந்த ஆண்டு, சிறு தொழில் வாடிக்கையாளர்களுக்கான டெல்-ன் ஸ்மால் பிசினஸ் மாத விளம்பரங்கள் மற்றும் தகவல் தொடர்புகளில் ஒரு தீவிரமான மாற்றம் உள்ளது. இந்த சோதனைக் காலத்தில், தொழில்முனைவோர்கள் எழுவதற்கான தீர்வுகள் மற்றும் ஆதரவில், இந்த மாபெரும் IT நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது.

    ஊரடங்கினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழ முயலும் சிறு வணிகங்களுக்கு, தொழில்நுட்ப சிக்கல்களில் சிக்கிக்கொள்வதை தவிர்த்து, தமது தேவையை புதுப்பிப்பதில் கவனம் செலுத்த முடியும் என்ற உத்தரவாதம் தேவைப்படுகிறது. இங்குதான்,  டெல்-ன் ஸ்மால் பிசினஸ் மாதம் திட்டம் உதவுகிறது. சமீபத்திய தொழில்நுட்ப சாதனங்களுடன் தங்கள் ஆன்லைன் வணிகத்தை அமைப்பதற்கு தொழில் முனைவோருக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு வகை  சிறு வணிகங்களுக்கும், அர்ப்பணிக்கப்பட்ட ஆதரவு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளையும் டெல்-ன் ஸ்மால் பிசினஸ் மாதம் வழங்குகிறது. தொழில்நுட்பத்தை  கையாண்ட பின், தொழில்முனைவோர் தங்கள் சிறு வணிகங்களை விரிவுபடுத்த விரும்பும் விஷயங்களைச் செய்ய அதிக நேரம் செலவிடலாம்.

    டெல்லின் ஸ்மால் பிசினஸ் மாதத் திட்டம்.

    சிறு வணிகங்களின் பிரச்சினைகளை பற்றிய ஆழமான புரிதலுடன், மாபெரும் தொழில்நுட்ப மன்னனாகிய டெல், சிறு வணிகங்களுக்கு, தொழில்நுட்ப பின்பற்றுதலில் உள்ள தடைகளை சமாளிப்பது மட்டுமல்லாமல்  அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு எது சிறப்பாக செயல்படும் என்பதையும் புரிந்துகொள்ள கீழ் குறிப்பிட்டுள்ளன போல, பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

    • ஸ்மால் பிசினஸ் பாதுகாப்பு - வணிகத் தகவலைப் பாதுகாக்க தரவு காப்பு மற்றும் இணைய பாதுகாப்பு.

    • ஸ்மால் பிசினஸ் சேவைகள் - நிதி, பயன்படுத்தல் மற்றும் உபகரணங்கள் பராமரிப்பு.

    • ஸ்மால் பிசினஸ் புதுப்பித்தல் - உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் சமீபத்திய தொழில்நுட்ப தயாரிப்புகள்.

    • ஸ்மால் பிசினஸ் உற்பத்தித்திறன் - செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க மேம்படுத்தப்பட்ட மென்பொருள்.


    இத்தகைய பல்வேறுத்  தீர்வுகளைத் தவிர, டெல் ஸ்மால் பிசினஸ் மாதம் என்று ஒரு முன்முயற்சியை , 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. "எங்களின் சிறு வணிக வாடிக்கையாளர்களுக்கான எங்களது திட்டங்கள், அவர்களுக்கான எங்களது தீர்வுகள் மற்றும் ஆதரவு சேவைகளைப் பற்றி பேசுவதில் கவனம் செலுத்துகின்றன. இந்த ஸ்மால் பிசினஸ் மாதம் முயற்சியின் ஒரு பகுதியாக, எங்கள் சிறு வணிக வாடிக்கையாளர்களுக்கு எங்கள் வணிகம் மற்றும் சமூகங்களில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கிற்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பைப் பெறுகிறோம்.” என்றார் இந்தியாவின் டெல் நிறுவன மார்க்கெட்டிங் இயக்குனர் ரித்து குப்தா.

    சிறு வணிகங்களுக்கான ஆதரவு மற்றும் தீர்வுகள்.

    டெல் தொழில்முனைவோரிடம், தான் அதன் அனைத்து சிறு வணிகங்களின் தொழில்நுட்ப தேவைகளுக்கும் உதவும் ஒரு 'ஸ்மால் பிசினஸ் பார்ட்னர்' என்று சொல்வதில் உறுதியாக உள்ளது.கடந்த ஆண்டு 'ஸ்மால் பிசினஸ் மாதத் திட்டத்தின்' வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிரச்சாரம் டெல்லின் அர்ப்பணிப்புள்ள ஸ்மால் பிசினஸ் தொழில்நுட்ப  ஆலோசகர்கள் குறித்தும் மற்றும் சிறு வணிகங்களுக்கான  அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பாராட்டினை குறித்தும் விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு வகையான சிறு வணிகங்களுக்கும், டெல்லின் தொழில்நுட்ப ஆலோசகர்கள், ஒரு பிரத்யேக அர்ப்பணிப்பான ஆதரவை வழங்குவதிலிருந்து தொடங்கி, மூன்று தசாப்தங்களாக கட்டப்பட்ட ஒரு மரபு முறைகளில் இருந்து பிறக்கக்கூடிய ஆலோசனைகளை வழங்குவதோடு ,  ஒவ்வொன்றிற்கும் அதற்கான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவது வரை  உதவுகின்றனர். இதன் மூலம், டெல் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், குறிப்பாக, வரும் மாதங்களில் தங்கள் வணிக பயணத்தை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த சரியான ஆலோசனையைப் பெற விரும்பும் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், ‘ஸ்மால் பிஸ்னஸ் மாதம்’ வெற்றிகரமாக நடக்க பயனுள்ள தீர்வுகளை வழங்க டெல் நிறுவன தொழில்நுட்ப ஆலோசகர்கள் முன்வருகின்றனர். இதன் மூலம் பயன் பெற, இங்கே அவர்களின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    2020 தொடங்கியபோது, ​​உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் இந்த ஆண்டு  இவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். நாம் நமது வாழ்க்கையையும் வணிகங்களையும் மீண்டும் கட்டியெழுப்பும்போது, ​​சிறு வணிக உரிமையாளர்களுக்கு உதவ நம்பகமான கூட்டாளர் இருப்பது அவசியம்.



    ஸ்மால் பிசினஸ் மாதம் மூலம், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நோக்கத்துடனேயே செயலாற்றுவதில்,  முன்னணியில் இருக்கும்  டெல்லை விட சிறந்த நிறுவனத்தை எங்களால் நினைத்துப் பார்க்க இயலவில்லை.டெல் சொல்வது போல், உங்கள் வணிகத்தில் சிறுமையாக கருத எதுவும் இல்லை.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: