முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / சூப்பர் ஐடியா! குளிர்கால காற்றுமாசைக் குறைக்க மாற்று வழி கண்டுபிடித்த ஐஐடி ஆய்வாளர்கள்!

சூப்பர் ஐடியா! குளிர்கால காற்றுமாசைக் குறைக்க மாற்று வழி கண்டுபிடித்த ஐஐடி ஆய்வாளர்கள்!

வடமாநிலங்களில் குளிர்கால காற்றுமாசைக் குறைக்க மாற்று வழி கண்டுபிடித்துள்ள ஐஐடி ஆய்வாளர்கள் !

வடமாநிலங்களில் குளிர்கால காற்றுமாசைக் குறைக்க மாற்று வழி கண்டுபிடித்துள்ள ஐஐடி ஆய்வாளர்கள் !

தேவையற்ற அரிசி வைக்கோலை, பேக்கேஜிங், வீட்டு அலங்காரம்,  தற்காலிக கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தக்கூடிய பலகைகளாக வடிவமைக்க முடியும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

குளிர் காலம் வந்துவிட்டால் டெல்லிக்கும் அதை சுற்றி உள்ள பகுதிக்கும் ஒரு பிரச்சனை வந்துவிடும். பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் நெல் அறுவடைக்கும் கோதுமை விதைப்பதற்கும் இடையே மிகக் குறுகிய இடைவெளி இருப்பதால், கோதுமை விதைப்பதற்கு வயல்களைத் தயார் செய்வதற்காக, நெற்பயிர்கள் வெட்டப்பட்ட பிறகு நிற்கும் கீழ் குறுகிய பகுதிகளை நிலத்திலேயே வைத்து எரித்து விடுவர்.

வடக்கு பகுதியில் நிலவும் பனியுடன், இந்த புகையும் சேர்ந்து அடர் பனியாக மாறுகிறது. இதனால் டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு மிகவும் முக்கிய பங்களிப்பதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, குருகிராம் நிர்வாகம் விவசாயிகளுக்கு பயிர் எச்சங்களை எரிப்பதற்கு எதிராக ஒரு ஏக்கருக்கு ₹ 2,500 வீதம் அபராதம் விதித்து எச்சரித்தது.

ரோபாரில் (பஞ்சாப்) உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்த நெல்லின் அடிப்பகுதிகளை

எரிக்காமல் இருக்க ஒரு தீர்வை உருவாக்கியுள்ளனர். தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படும், சுடுகாடுகளை எரிப்பதற்கு இது ஒரு நிலையான மற்றும் மலிவு தீர்வை வழங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

5Gbps, 8Gbps அதிவேக இணையசேவை வழங்கும் கூகுள் ஃபைபர்! அமெரிக்காவில் முதற்கட்ட சோதனை!

ஐஐடி ரோபார் பேராசிரியர் டாக்டர் நவின் குமார் தலைமையில், ஆராய்ச்சி குழு 'வேளாண் கழிவு அடிப்படையிலான நுண்ணுயிர் ஆதாரம் தொழில்துறை சாத்தியமான துகள் பலகைகளை' உருவாக்கியுள்ளது. இத்தொழில்நுட்பத்தின் மூலம், தேவையற்ற அரிசி வைக்கோலை, பேக்கேஜிங், வீட்டு அலங்காரம்,  தற்காலிக கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தக்கூடிய பலகைகளாக வடிவமைக்க முடியும்.

விவசாய நிலங்களில் இருந்து வைக்கோல்களை சேகரிக்கின்றனர். பின்னர் ஒரு இரசாயன செயல்முறையைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்கும் செல்லுலோஸை அகற்றுகின்றனர். அதற்குப் பிறகு, இயற்கையாக மக்கும் பிசினைப் பயன்படுத்தி பிணைக்க வைக்கின்றனர். பின்னர் அதை அழுத்தி, பயன்பாட்டிற்குத் தேவையான வடிவத்திற்கு ஏற்ப மாற்றுகின்றனர்.

மரத்தாலான ஆன பொருட்களை விட இதில் மூலப்பொருள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் செலவு மூன்று மடங்கு குறைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார். தற்போது பயன்படுத்தும் யூரியா பார்மால்டிஹைடு நச்சுத்தன்மை வாய்ந்தது. தண்ணீரில் கரையும் பிசினுக்கு பதிலாக ஒரு சிறந்த மக்கும் பிசினை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆராய்ச்சி முன்மாதிரி சோதனை நிலையில் உள்ளது. ஆனால் இது வைக்கோல்களை எரிப்பதற்கு நிலையான மற்றும் மலிவான தீர்வை வழங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

First published:

Tags: Delhi, Punjab