ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவிலேயே முதன் முறை; ரோபோடிக்ஸ் மூலமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை!

இந்தியாவிலேயே முதன் முறை; ரோபோடிக்ஸ் மூலமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை!

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

நாட்டிலேயே முதன் முறையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • New Delhi, India

    டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதன் முறையாக ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

    காலரா, மஞ்சள் காமாலை, அம்மை போன்ற நோய்களுக்கு கூட தடுப்பு மருந்து இல்லாமல், மக்கள் கொத்து கொத்தாய் மடிந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது உலகையே ஆடிப்படைத்த கொரோனா பெருந் தொற்றுக்கூட விஞ்ஞானிகள் உடனடியாக மருந்து கண்டுபிடித்து அசத்தி வருகின்றனர். இருப்பினும் வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா இப்போது தான் மருத்துவத்துறை சார்ந்த அதிநவீன வளர்ச்சிகளில் முன்னேறி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக வியத்தகு வகையில் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனை மையத்தில் உள்ள மருந்துவர்கள் நோயாளி ஒருவருக்கு, ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தின் ஃபருகாபாத் பகுதியைச் சேர்ந்த 39 வயதான நோயாளி ஒருவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக டையாலிசிஸ் செய்து வந்தார். இதனிடையே அவரது மனைவி தனது சிறுநீரகத்தை தானம் கொடுக்க முன்வந்ததை அடுத்து, அந்த நபருக்கு மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

    சஃப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் விஎம்எம்சியின் கீழ் இயங்கி வரும் சிறுநீரகம், ரோபோடிக்ஸ் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை துறையின் தலைவர் பேராசிரியர் அனுப் குமார் தலைமையிலான மருத்துவர்கள் குழு மூலம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நெப்ராலஜி துறையின் தலைவரான ஹிமான்ஷு வர்மா நெப்ராலஜி குழுவை தலைமை தாங்கினார். மயக்க மருந்து குழுவை டாக்டர் மது தயாளு வழி நடத்தியுள்ளார். மேலும் மருத்துவ கண்காணிப்பாளார் எஸ்ஜேஹெச் மற்றும் விஎம்எம்சி பேராசிரியர் பிஎல் ஷெர்வால் உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியால் தான் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சிறுநீரக மாற்று சிகிச்சை துறையின் தலைவர் பேராசிரியர் அனுப் குமார் பாராட்டியுள்ளார்.

    சிறுநீரக மாற்று சிகிச்சை துறையின் தலைவர் பேராசிரியர் அனுப் குமார் கூறுகையில், "பல ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்துகொண்டிருந்த ஃபருகாபாத்தைச் சேர்ந்த இளைஞர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்துக்கொண்டிருந்தார்.

    தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு அவரிடம் நிதி வசதி இல்லாததால், அரசு மருந்துவமனையின் உதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். இதனிடையே அவரது மனைவியே அவருக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்தார். தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து கணவன், மனைவி இருவரும் நலமுடன் உள்ளனர். இந்த அறுவை சிகிச்சை சஃப்தர்ஜங் மருத்துவமனை வரலாற்றிலேயே முக்கியமான மைல் கல்” எனத் தெரிவித்துள்ளார்.

    ரோபோடிக்ஸ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது சிறுநீரகத்தில் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலான அறுவை சிகிச்சை ஆகும். இதற்கு ரோபோடிக்ஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றில் சிறந்த நிபுணத்துவம் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Read More: இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு வழங்கிய இன்ஸ்டாகிராம்... காரணம் என்ன?

    மேலும் இதே அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் 6 முதல் 7 லட்சங்கள் வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Published by:Srilekha A
    First published:

    Tags: Delhi, Hospital, Technology